பெண்களின் கவனத்திற்கு: ஐந்தே நொடிகளில் கட்டும் பேஷன் புடவை அறிமுகம்!

உலகிலேயே இவ்வளவு எளிதாக, விரைவாக கட்டப்படும் முதல் புடவை இதுதான்.

கல்லூரி மாணவிகள், பேஷன் விரும்பிகளை கவரும் வகையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரூஷ் ஆரி 5 நொடிகளில் கட்டும் பேஷன் புடவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பேஷன் புடவை :

இன்றைய மாடல் உலகில் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மாறுபட்ட டிசைன்களை பிரதிபலிக்கும் புது வரவு ஆடைகளை அணிந்து தங்களை பல்வேறு விதத்தில் அழகுபடுத்திப் பார்க்க விருப்பப்படுகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப படங்களில் தோன்றும் கதாநாயகிகளின் உடை தேர்வு முறை அமைந்திருக்கிறது.

உடை மாற்றத்தை வைத்துதான் கதாபாத்திர மாற்றத்தை மக்கள் உணர முடியும் என்ற எண்ணத்தில் புதுபுது பேஷன் உடை வடிவமைப்புக்கு படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதை போன்றே கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை கவர்ந்திருக்கும் விதத்தில் ஆடை வடிவமைப்பாளர்கள் புதுரக உடைகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழ் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரூஷ் ஆரி தனது புதுமையை புடவையில் காட்டியுள்ளார். ஆமாம் உலகிலேயே இவ்வளவு எளிதாக, விரைவாக கட்டப்படும் முதல் புடவை இதுதான். இந்த புடவையை நீங்கள் கட்ட ஐந்தே நொடிகள் போதும்.

யார் இந்த ப்ரூஷ் ஆரி :

இளம் ஆடை வடிவமைப்பாளரான ப்ரூஷ் ஆரி சென்னை சேர்ந்தவர். ஆனால் படித்தது, வளர்ந்து எல்லாமே டெல்லியில் தான். பாலிவுட்டி வட்டாரங்களில் இவர் மிகவும் பிரபலம். தனது 19 வயதிள், கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட பேஷன் குறித்த நாவல் ஒன்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஒரு ஆணாக இருந்து பேஷன் உலகில் பெண்களை கவரும் வகையில் இவர் வெளியிடும் பேஷன் ஆடைகள் அனைவரின் விருப்பமான தேர்வாக உள்ளது.

ப்ரூஷ் ஆரி வடிவமைத்துள்ள இந்த பேஷன் புடவை தற்போது டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரபல நடிகை அஞ்சனா ஜெயபிரகாஷ் இந்த புடவையின் மாடலிங்காக உள்ளார்.

ப்ரூஷ் ஆரியின் ஆடை தளம் //purushu.com.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close