Advertisment

Christmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்!

Easy Christmas Recipes: உங்கள் கொண்டாட்டங்களை சுவையாக மாற்ற சில சமையல் குறிப்புகளை நாங்கள் தருகிறோம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Christmas food, Christmas recipes, கிறிஸ்துமஸ் விழா, கிறிஸ்துமஸ் ரெசிபி

Christmas food, Christmas recipes, கிறிஸ்துமஸ் விழா, கிறிஸ்துமஸ் ரெசிபி

Christmas Recipes 2019: இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு சிறந்த பகுதி பகுதி சுவையான உணவு. சிறப்பான ரம் கேக் முதல் வேகவைத்த விருந்துகள் வரை, அனைத்தும் கிறிஸ்துமஸ் தினத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீங்களும் உங்கள் கொண்டாட்டங்களை சிறப்பாகவும், சுவையாகவும் மாற்ற சில அழகான சமையல் குறிப்புகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

இதை படித்துவிட்டீர்களா? கிறிஸ்துமஸ் பாட்டி/ தாய்!

உங்கள் கொண்டாட்டங்களை சுவையாக மாற்ற சில சமையல் குறிப்புகளை நாங்கள் தருகிறோம்.

ஆல்மண்ட் பனானா கேக்

Xmas food recipe, almond banana cake ஆல்மண்ட் பனானா கேக்

தேவையானவை

1/2 கப் - உப்பு சேர்க்காத வெண்ணெய்

1/2 கப் - தூளாக்கப்பட்ட வெல்லம்

1 1/2 டி.ஸ்பூன் - இலவங்கப்பட்டை தூள்

1/4 டி.ஸ்பூன் - ஜாதிக்காய் தூள்

1/2 கப் - நறுக்கிய பாதாம்

3/4 கப் - சர்க்கரை

3 - முட்டை

2 டி.ஸ்பூன் - ஆரஞ்சு ஜெஸ்ட்

1 1/4 கப் - பிசைந்த வாழைப்பழம்

3 கப் - ஆல் பர்பஸ் மாவு

1 1/2 டி.ஸ்பூன் - பேக்கிங் பவுடர்

1 டி.ஸ்பூன் - சமையல் சோடா

1/2 டி.ஸ்பூன் - உப்பு

2/3 கப் - மோர்

Happy Christmas Day 2019 Wishes, Images: கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்ப பெஸ்ட் புகைப்படங்கள் இங்கே

செய்முறை 

1/4 கப் வெண்ணெயை உருக்கி, இரண்டு தேக்கரண்டியை வாணலியில் ஊற்றவும். வாணலியின் இரு சைடுகளிலும், கீழும் வெண்ணெய்யை நன்கு தடவவும். வெல்லம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், பாதாம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பாதி வெல்ல கலவையை வாணலியின் கீழே சேர்க்கவும். மீதமுள்ள கலவையை மீதமுள்ள உருகிய வெண்ணெயுடன் சேர்த்து தனியே வைக்கவும்.

ஒரு பெரிய கிண்ணத்தில், மீதமுள்ள 1/4 கப் வெண்ணெய், சர்க்கரை, முட்டை, வாழைப்பழம் ஆகியவற்றை நன்கு அடித்துக் கொள்ளவும்.

ஆல் பர்பஸ் மாவு, பேக்கிங் பவுடர், சோடா மற்றும் உப்பு, மோர் ஆகியவற்றை நன்கு மிக்ஸ் செய்து வாழைப்பழ கலவையுடன் சேர்க்கவும்.

இந்தக் கலவையை முன்பு தயார் செய்து வைத்திருக்கும் வாணலியில் பாடியளவு ஊற்றி, கனமான கரண்டி கொண்டு மேற்புறத்தை சமமாக பரப்பி விடவும்.

இதனை 180 ° F செட் செய்து ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் பிளேட்டுக்கு மாற்றி இளஞ்சூடு அல்லது குளிர்வித்து, பரிமாறவும்.

டெல்லி அசோக் ஹோட்டலின் ரோஸ்டீஸ்

Xmas food recipe ரோஸ்டீஸ்

தேவையானவை

1 1/2 கிலோ - மாவு உருளைக்கிழங்கு, சிறிய உருளைக்கிழங்கு முழுவதுமாக இருக்கட்டும், பெரியவைகளை பாதியாக வெட்டிக் கொள்க

100 மிலி - சூரியகாந்தி எண்ணெய்

செய்முறை

200C / 180Cfan / gas க்கு அடுப்பை சூடாக்கவும்

உப்பு நீரில் பெரிய வாணலியில் உருளைக்கிழங்கை வைக்கவும். 15 நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வறுக்க ரோஸ்டிங் பேனில் சரியான இடைவெளி விட்டு வைக்கவும், இதனால் அவைகள் மசிந்து போகாமல் சரியாக இருக்கும்.

பின்னர் அவற்றை ஸ்லைஸாக நறுக்கவும்.

சீசனிங்கிற்காக கொஞ்சம் எண்ணெய் விடவும்.

பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.

கெலாக்ஸ் ஸ்பெஷல் கே சீஸ் கேக்

Xmas food recipe கெலாக்ஸ் சீஸ் கேக்

தேவையானவை 

1/2 கப் - கிரவுண்ட் கெல்லாக்'ஸ் ஸ்பெஷல் கே

1/2 கப் - க்ரம்ப் கெல்லாக்'ஸ் ஸ்பெஷல் கே

1/4 கப் - பாதாம் மாவு

1/2 கப் - வெண்ணெய்

1/2 டி.ஸ்பூன் - கடல் உப்பு

3 கப் - தயிர்

1 டீஸ்பூன் - துருவிய பூண்டு

2 - உப்பு சேர்த்த துருவிய வெள்ளரி

1/2 டி.ஸ்பூன் - கடல் உப்பு

1 - துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்

சிவப்பு திராட்சை - கால் பங்கு

மாதுளை - சிறிதளவு

செய்முறை

நான் ஸ்டிக் பானில் கெல்லாக்'ஸ் ஸ்பெஷல் கேவை லேசாக வறுத்து அரைக்கவும்.

கெல்லாக்'ஸ் ஸ்பெஷல் கே, பாதாம் மாவு மற்றும் சிறு துண்டு வெண்ணெய் கலந்து கேக் ரிங்கின் அடிப்பகுதியில் பரப்பவும்.

தயிர், உப்பு, பூண்டு, வெள்ளரி, பச்சை மிளகாய், மிளகு, கிரீம் ஆகியவற்றை நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின்னர் தயிர் சேர்த்து இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

அடுத்தநாள் காலையில் திராட்சை மற்றும் வெள்ளரி சேர்த்து பரிமாறவும்.

Happy Christmas Day 2019: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ள இதோ வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஸ்டிக்கர்கள்

Food Recipes Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment