Advertisment

2 டீ ஸ்பூன் வறுத்த ஓமம், ஒரு கிளாஸ் தண்ணீர்… இவ்வளவு நன்மை இருக்கு!

Ajwain Water Health Benefits: செரிமானம் பிரச்சினை, எடை குறைப்பு, வாயு பிரச்சினை உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கும் ஓமத்தின் சிறப்பை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
New Update
2 டீ ஸ்பூன் வறுத்த ஓமம், ஒரு கிளாஸ் தண்ணீர்… இவ்வளவு நன்மை இருக்கு!

Ajwain Water பல பாரம்பரிய இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான மசாலா ஒமம் ஆகும். இது மூலிகை தேநீர் மற்றும் பக்கோடா, பரோட்டா போன்ற உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. இது ஆயுர்வேத மசாஜ்களிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மூலப்பொருள் ஆகும்.

Advertisment

ஓமம் குறிப்பாக ராஜாஸ்தானில் அதிகளவில் விளையக்கூடியது. இது, ஒரு விதை வடிவில் உலர்த்தப்பட்ட தாவரத்தின் பழமாகும். ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கும் ஓமத்தின் சிறப்பை, இச்செய்தி தொகுப்பில் காணலாம்:

செரிமானம் பிரச்சினை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீரை குடித்து வந்தால், செரிமான பிரச்சினையை குறைக்கலாம். இரண்டு டீஸ்பூன் வறுத்த ஓமம் விதைகளை, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதனை தண்ணீர் கொதிக்க வைத்து, பின்னர் ஆறவிட்டு குடிக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்ட பிறகு, இந்த பானத்தை பருகுவது நல்ல சாய்ஸ் ஆகும்.

எடை குறைப்பு

சிறந்த செரிமானமே தேவையற்ற எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஓமம் தண்ணீரை பருகுவது சிறந்த பலனை தரும்.

வீக்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வீக்கம் பொதுவானது ஆகும். அதனை தடுத்திட, ஒரு கிளாஸ் ஓமம் தண்ணீரை கொதிக்க வைத்து பருகினால், அற்புதங்களை உடலில் காணலாம்.

அமிலத்தன்மை

ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஸ்நாக்ஸ் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த, ஓமத்தை உங்கள் சாப்பாட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். அல்லது ஓமம் தண்ணீரை சாப்பாட்டிற்கு பிறகு பருகலாம்.

வாயு பிரச்சினை

வாயுத்தொல்லை என்பது பொதுவாக சில உணவுகளால் உணவுக்குழாயில் வாயு சேர்வதாகும். இவற்றை ஓமம் தண்ணீரை குடிப்பதன் மூலமும், உணவில் அதனை சேர்ப்பது மூலமும் தீவிரத்தை குறைக்க முடியும்.

இருமல் / சளிக்கு தீர்வு

சில துளசி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓமம் விதைகளை நீரில் கொதிக்கவைத்து சாப்பிடுவது சளி மற்றும் இருமல் பிரச்சினை கணிசமாகக் குறைக்கும். இது இந்திய குடும்பங்களின் பொதுவான வீட்டு வைத்தியமாகும். விரைவில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food Health Benefits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment