Advertisment

ஜும்பா அல்லது ஏரோபிக்ஸ்: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளச் சிறந்தது எது?

Zumba Aerobics difference fitness dance activity Tamil News நடைப்பயிற்சி, நீச்சல், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங் போன்றவற்றைக் கொண்டுள்ளதுதான் ஏரோபிக்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Zumba Aerobics difference fitness dance activity Tamil News

Zumba Aerobics difference fitness dance activity Tamil News

Zumba Aerobics difference fitness dance activity Tamil News : இருதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் (பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய்), உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகள் (ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோஆர்த்ரிடிஸ்) மற்றும் மனச்சோர்வு போன்ற பல்வேறு நோய்களுக்கு உடல் செயலற்ற தன்மை ஓர் மாறுபட்ட ஆபத்து காரணி.

Advertisment

நடத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட பல ஆய்வுகளின்படி, பல்வேறு நாள்பட்ட நோய்களைத் தடுப்பதில், வழக்கமான உடல் செயல்பாடு ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது என்பதற்கு முரணான சான்றுகள் உள்ளன. "உடல் செயல்பாடு மற்றும் உடல்நல நிலைக்கு இடையே ஒரு படிநிலை உறவு இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அதிக உடல் செயல்பாடு செய்பவர்களுக்குக் குறைந்த உடல்நல ஆபத்து உள்ளது. கூடுதலாக, மோசமான உடல் நிலை உள்ளவர்கள் உடற்பயிற்சி தொடங்கும்போது, ​​அவர்களின் உடல்நிலை மிகவும் மேம்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ரவுண்ட் கிளாஸ் ஜிம்பிக் வணிகத் தலைவர் அமரேஷ் ஓஜா கூறுகிறார்.

ஆனால், சிலருக்கு அதிக எடையைத் தூக்குவது அல்லது ஜிம்மிற்கு செல்வது பிடிக்காது. அவர்களுக்கு, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஜூம்பா அல்லது ஏரோபிக்ஸ் உதவலாம். ஆனால், ஜூம்பா அல்லது ஏரோபிக்ஸ் இரண்டில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கலாம். எனவே, எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை அறிய இரண்டு வகையான பயிற்சிகளின் நன்மைகளைப் பாருங்கள்.

ஜும்பா

ஜும்பா என்பது நடனப் பயிற்சியின் ஒரு வடிவம். அதன் இயக்கங்கள் லத்தீன் அமெரிக்க நடனங்களின் பல்வேறு பாணிகளால் ஈர்க்கப்பட்டு இசையுடன் நிகழ்த்தப்படுகின்றன. இது உலகம் முழுவதும் உடற்பயிற்சி செய்வதற்கான பிரபலமான மற்றும் நாகரீகமான வழியாக மாறியுள்ளது. ஆனால், இது கலோரிகளை எரிக்கவும், கைகளை வலுப்படுத்தவும், தசைகளைக் குறைக்கவும் பயனுள்ளதா?

ஜும்பாவின் நன்மைகள்

*இது ஒரு முழு உடல் பயிற்சி: இது சல்சா நடனம் மற்றும் ஏரோபிக்ஸ் ஆகியவற்றை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூம்பா செய்யும் போது சரி அல்லது தவறு என்று எதுவுமில்லை. இசைக்கேற்றவாறு நகரும் வரை, நீங்கள் பயிற்சியில் பங்கேற்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

*உங்களால் கலோரிகளை எரிக்கமுடியும் : 2012-ம் ஆண்டில் பப்மெட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் 39 நிமிட ஜூம்பா வகுப்பு, நிமிடத்திற்கு சராசரியாக 9.5 கலோரிகளை எரிக்கிறது. 12 வார ஜும்பா திட்டம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

*உடல் வலிமைபெறும் : வேகமான தாளத்தில் நடனம் செய்வது நெகிழ்வுத்தன்மையை உருவாக்க உதவுகிறது. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துகிறது. இது ஒரு நிலையான இதய துடிப்பிற்கும் மற்றும் சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஏரோபிக்ஸ்

ஏரோபிக் செயல்பாட்டின் போது, ​​உங்கள் சுவாசம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும். ஏரோபிக் உடற்பயிற்சி ஆரோக்கியமான இதயம், நுரையீரல் மற்றும் circulatory அமைப்பைப் பராமரிக்க உதவுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சி அனிரோபிக் உடற்பயிற்சியிலிருந்து வேறுபட்டது. பளு தூக்குதல் அல்லது ஸ்ப்ரிண்டிங் போன்ற அனிரோபிக் உடற்பயிற்சிக்கு விரைவான ஆற்றல் தேவைப்படுகிறது. ஏரோபிக் பயிற்சிகள் நீண்ட நேரம் செய்யப்படுகின்றன. அதாவது நடைப்பயிற்சி, நீச்சல், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கிப்பிங் போன்றவற்றைக் கொண்டுள்ளதுதான் ஏரோபிக்.

ஏரோபிக்ஸ் நன்மைகள்

*இருதய சீரமைப்பை மேம்படுத்துகிறது: ஏரோபிக்ஸ் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முதன்மையாக உதவுகிறது. அதே நேரத்தில், இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் உடலின் ரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.

*அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்கள் அல்லது "நல்ல" கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது: ஏரோபிக்ஸ் உடல் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த வழி. இது உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

*ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது: நீரிழிவு நோயாளிகள் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் இது ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் எடை குறைக்கவும் உதவுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fitness
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment