எல்லாம் வந்து போகும்
இயற்கையின் பெரும் சீற்றம்
புயலாய் பூகம்பமாய் வந்து போகும்...!
0
கடலின் கடும் கோபம்
சுனாமியாய் வந்து போகும்...
மாமலையும் சிலநேரம்
எரிமலையாகும்!
0
சுட்டெரிக்கும் சூரியன்
வறுமைத் தந்து போகும்...
கொட்டித் தீர்க்கும் பெருமழை
எல்லைத் தாண்டிப் போகும்!
0
கொள்ளை நோய்கள் பலபல
ஆதிமுதல் வந்து போயின...
அத்தனையும் மக்களை
கொத்து கொத்தாய் கொண்டுப் போயின!
0
எங்கிருந்தோ வந்தது
கொரோனா என்பது
எத்தனையோ உயிர்களைப்
பலிவாங்கிப் போகுதே...!
0
என்னதான் வந்தாலும்
வானமும் பூமியும் மனிதமும்
நின்று நிலைக்கும்
மற்றவையெல்லாம் வந்து போகும்...!
கவிஞர் கமல.செல்வராஜ்
அருமனை. மின்னஞ்சல்: drkamalaru@gmail.com
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"