Advertisment

கிண்டிலில் தினசரி பல தமிழ் புத்தகங்கள் இலவசம்… எல்லோரும் படிக்கலாம்…

அமேசான் கிண்டில் தினமும் இலவசமாக அளிக்கும் புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கும் தமிழ் வாசகர்கள் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kindle offers many tamil books, கிண்டில், கிண்டில் இலவச புத்தகங்கள், தமிழ் புத்தகங்கள், kindle free books today to read free, tamil book, kindle tamil book

தொழில்நுட்பங்களின் யுகத்தில் வாசகர்கள் பலரும் கணினியிலும் மொபைல் போன்களிலும் கிண்டிலிலும் வாசிக்கப் பழகியிருக்கிறார்கள். தொழில்நுட்பம் தீவிர வாசகர்களுக்கு கிண்டிலை ஒரு அமுத சுரபியாக கொடுத்துள்ளது.

Advertisment

கணினியில், மொபைல் போன்களில் வாசிக்க சிரமப்பட்டவர்கள் பலரும் புத்தகங்களின் தாள்களை திருப்பி வாசிக்கும் அதே உணர்வுடன் கிண்டிலில் புத்தகங்களை வாசிக்க பழக்கமாகியிருக்கிறார்கள். அமேசான் கிண்டில் மார்க்கெட்டில் கணிசமான வாசர்களை ஈர்த்துள்ளது. ஏராளமான புத்தகங்களை வாங்கி வீட்டில் வைக்க இடம் இல்லாதவர்கள் ஒரு கிண்டிலில் பல நூறு புத்தகங்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

கிண்டிலில் வாசிக்கும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது. கிண்டில் வாசகர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வணிக நோக்கில் அனைவரையும் கிண்டிலை நோக்கி ஈர்க்கும் வகையில் அமேசான் தினசரி சில புத்தகங்களை கிண்டில் வாசர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில், அமேசான் கிண்டில் இன்று (நவம்பர் 25) வாசகர்களுக்கு படிப்பதற்கு சில புத்தகங்கள் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து அமேசான் கிண்டில் குறிப்பிடுகையில், “அன்பார்ந்த புத்தக வாசகர்களே!

அமேசான் கிண்டிலில் நாள்தோறும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச புத்தகமானது அந்தந்த ஆசிரியர்களே இலவசமாக வழங்குகின்றனர்.

இந்த இலவச புத்தகங்கள் இந்திய நேரப்படி அறிவித்த நாளில் மதியம் 12:30pm முதல் மறுநாள் மதியம் 12:30pm வரை செல்லுபடியாகும்.

(சில புத்தகங்கள் தொடர்ச்சியாக இலவசமாக கிடைக்கும்)

அந்த புத்தகங்களை பெற முந்தைய நாள் பதிவுகளையும் காணுங்கள் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 25ம் தேதி முதல் நவம்பர் 26ம் தேதி மதியம் 12.30 மணி வரை இலவசமாக படிப்பதற்கு கிடைக்கும் புத்தகங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:



1.அறிஞர் அண்ணா எழுதிய அந்த மந்திரம் அறியேன், 2. எழுத்து இதழ், 3. கலையரசன் எழுதிய இதயத்தில் இனியவள், 4. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் திருக்குறள் கட்டுரைகள், 5.தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்த்த மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல், 6. எங்கிருந்தோ ஆசைகள் பாகம் - 1, 7. லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் : வாழ்க்கை வரலாறு, 8.

இங்கிலாந்தில் சில மாதங்கள், 9. என்னவென்று நான் சொல்ல பாகம் - 1, 10. அண்ணா சில நினைவுகள் உள்ளிட்ட பல நூல்கள் கிண்டிலில் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன.

அமேசான் கிண்டில் தினமும் இலவசமாக அளிக்கும் புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கும் தமிழ் வாசகர்கள் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Literature Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment