தமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது

தமிழறிஞர் கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் மூலம் அவரது, அறிவுக்கூர்மையும், தமிழ் விளையாட்டையும் விவரிக்கிறார்.

இரா.குமார்

திமுக தலைவர் கருணாநிதியை பச்சையப்பன் கல்லூரி முத்தமிழ் விழாவில் பேச அழைத்திருந்தனர். அது தேர்தல் நேரம். அதிமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. கல்லூரி இலக்கிய விழா என்பதால் அரசியல் பேசக் கூடாது என்பது நிபந்த்னை.

ஒரு மணி நேரம் இலக்கியம் பேசினார் கருணாநிதி. பேச்சை முடிக்கும்போது, “தேர்தல் நேரம் இது. நான் இங்கே அரசியல் பேசக் கூடாது. விழா நிறைவில், உங்கள் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட்டுவிட்டு, இலையைத் தூரப் போட்டுவிட்டு, கையைக் கழுவிவிடுங்கள்” என்றார் கருணாநிதி. புரிந்துகொண்ட கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.

ரு விழாவில் பேசச் சென்றிருந்தார் கி.வா.ஜ.. அவருடைய நண்பர் கணபதி ஐயரும் வந்திருந்தார். விழா முடிந்ததும் சிற்றுண்டி கொடுத்தனர். முதலில் கி.வா.ஜ.விடம் கொடுத்தனர். அவர் உடனே, “இதோ முன்னவர் கணபதி. முதலில் அவரிடம் கொடுங்கள் என்றார். சிற்றுண்டி கொடுத்தவரோ, “முன் அவர்: இப்போது இவர்தான்” என்று, கி.வா.ஜ.வைச் சுடிக்காட்டினார். கி.வா.ஜ உடனே, “முன் பின் தெரியாமல் சொல்லிவிட்டேனோ” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

கி.வா.ஜ வீட்டுக்குப் பெரியவர் ஒருவர் வந்தார். கி.வா.ஜ.வும் அவர் மனைவியும் அவரை வணங்க வந்தனர். இவருக்கு இடப்பக்கம் மனைவி இருந்தார். அவரிடம், “இடம் வேண்டாம். வலம் வந்து வணங்குங்கள்” என்றார் பெரியவர். கி.வா.ஜ. உடனே ”ஆமாம் பெண்களுக்கு இடம் (சலுகை) தரக் கூடாது. சிவபெருமான் ஒருவன்தான் கொடுக்கலாம்” என்றார்.

லங்கை சென்றிருந்த கி.வா.ஜ. அங்கு, பண்டித மணியைப் பார்க்கச் சென்றார். கற்கண்டு கொடுத்தார் பண்டிதமணி. கி.வா.ஜ. உடனே, “ உங்களைக் கண்டுகொண்டு போகலாம் என வந்தேன். இதோ கண்டு (கற்கண்டு) கொண்டு போகிறேன்” என்றார்.

கி.வா.ஜ. ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மனைவியை கண் டாகரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென்று நண்பர் சொன்னார். “டாக்டர் யார்?” என்று கேட்டார் கி.வா.ஜ. ஒரு ஆடவர் பெயரை சொன்ன நண்பர், “பல பெண்கள் அவரிடம் வந்து கண் காட்டுகிறார்கள்” என்றார். இவர் உடனே, “பல பெண்கள் கண் காட்டும் அளவுக்கு அவர் அழகரா?” என்று கேட்டுச் சிரித்தார். மற்றவர்களும் சிரித்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Literature News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close