Advertisment

ஒரு மனிதன், ஒரு சித்தாந்தம்: ஈ.வெ.ராமசாமி பெரியாரின் முக்கியத்துவம்

The importance of E.V.Ramasamy Periyar: சராசரி தமிழரைப் பொறுத்தவரை, பெரியார் இன்று ஒரு சித்தாந்தம். அவர் சமூக சமத்துவம், சுய மரியாதை மற்றும் மொழியியல் பெருமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் ஒரு அரசியலைக் குறிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Periyar EVR, Periyar Birth anniversary,The importance of EV Ramasamy Periyar, Periyar 141st Birth anniversary, periyar dk, periyar women's rights in tamil, பெரியார் பிறந்தநாள், தந்தை பெரியார், periyar speech in tamil, dravidar kazhagam flag, periyar stories in tamil, periyar self respect movement

Periyar EVR, Periyar Birth anniversary,The importance of EV Ramasamy Periyar, Periyar 141st Birth anniversary, periyar dk, periyar women's rights in tamil, பெரியார் பிறந்தநாள், தந்தை பெரியார், periyar speech in tamil, dravidar kazhagam flag, periyar stories in tamil, periyar self respect movement

அருண் ஜனார்தனன், கட்டுரையாளர்

Advertisment

The importance of E.V.Ramasamy Periyar: இந்து மதச் சின்னங்களைப் பார்ப்பவர்களுக்கு தமிழ்நாடு மிகவும் ஆழமான மத உணர்வு உள்ள ஒரு மாநிலமாகத் தோன்றும். மக்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் விபூதி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு தெருமூலை முதல் அரசு அலுவலகங்கள் வரை கோயில்கள், தெய்வங்கள் இருக்கின்றன. வாகனங்கள்கூட வண்ணமயமான கடவுள் படங்களுடன் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. 45 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு மத மூடநம்பிக்கை எதிர்ப்பாலர் பகுத்தறிவுவாத சமூக சீர்திருத்தவாதி ஏன் இத்தகைய மாநில மக்களுக்கு மிகவும் பிடித்தமானவராக இருக்கிறார்?

1879 இல் பிறந்த பெரியார், தமிழர்களின் அடையாளத்தையும் சுய மரியாதையையும் மீட்பதற்காக தொடங்கிய சுய மரியாதை இயக்கத்திற்காக நினைவுகூரப்படுகிறார். பெரியார் தனது சொந்த ஊரான ஈரோட்டில் காங்கிரஸ்காரராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சேரன்மாதேவியில் தேசியவாத தலைவர் வ.வே.சு ஐயருக்கு சொந்தமான காங்கிரஸ் நிதியுதவி வழங்கும் குருகுலப் பள்ளியில் பிராமணர் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்கு தனி உணவு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பி அவர் காந்தியுடன் விவாதித்தார். பெற்றோரின் வேண்டுகோளின் பேரில், வ.வே.சு ஐயர் பிராமண மாணவர்களுக்கு தனியாக உணவு வழங்கினார். அதை பெரியார் எதிர்த்தார். ஒரு நபர் இன்னொருவருடன் உணவருந்தாதது பாவமாக இருக்காது என்று காந்தி ஒரு சமரசத்தை முன்மொழிந்தார். என்றாலும் அவர் அவர்களுடைய மோசடிகளுக்கு மதிப்பளிப்பதாக வாதிட்டார். காங்கிரஸை காங்கிரஸை தனது கொள்கைக்கு வளைப்பதில் தோல்வியடைந்த பின்னர், பெரியார் 1925 இல் காங்கிரஸ் கட்சிலிருந்து விலகினார். மேலும் சமூக வாழ்க்கையில் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த நீதித்துறை மற்றும் சுய மரியாதை இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். நீதிக்கட்சி ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அதிகாரத்துவத்தில் பிராமணரல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதிட்டது, மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் அதை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்தது.

பெரியரின் புகழ் 1924 ஆம் ஆண்டு வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது தமிழ் பிராந்தியத்திற்கு அப்பால் பரவியது. வைக்கம் கோயிலுக்கு முன்பு இருந்த பொது பாதையை பயன்படுத்துவதற்கான உரிமையை கீழ் சாதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரும் ஒரு வெகுஜன போராட்ட இயக்கம் அது. பெரியார் தனது மனைவியுடன் போராட்டத்தில் பங்கேற்றார். மேலும், இரண்டு முறை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

1920-கள் மற்றும் 1930-களில், பெரியார் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை ஒன்றிணைத்து, காங்கிரஸின் பழமைவாதத்தையும், தமிழ் பிராந்தியத்தில் பிரதான தேசிய இயக்கத்தையும் எதிர்த்தார். அவர் தமிழ் அடையாளத்தை ஒரு சமத்துவ இலட்சியமாக புனரமைத்தார். அது சாதி அமைப்பை எதிர்த்தது. அது காங்கிரஸ் வெற்றிகொண்ட இந்தியன் என்ற அடையாளத்துக்கு எதிரானது. சமஸ்கிருதம் பேசும் வட இந்தியாவில் இருந்து வந்த ஆரிய பிராமணர்களால் சாதி தமிழ் பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்றும் அவர் வாதிட்டார். 1930-களில் காங்கிரஸ் அமைச்சரவை இந்தியை திணித்தபோது, அவர் ஆரியமயமாக்கல் செயல்முறைக்கு இணையான ஒன்றை வரைந்தார். அது தமிழ் அடையாளம் மற்றும் சுய மரியாதைக்கு எதிரான தாக்குதல் என்று கூறினார். அவருக்கு கீழ், திராவிட இயக்கம் சாதிக்கு எதிரான போராட்டத்தையும் தமிழ் தேசிய அடையாளத்தை வலியுறுத்துவதாகவும் மாறியது.

1940-களில், பெரியார் திராவிடர் கழகத்தை தொடங்கினார். இது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய தனி திராவிட நாட்டை ஆதரித்தது. அவருடைய திராவிட தேசிய அடையாளக் கொள்கை திராவிட மொழியியல் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த கருத்துகள் மெட்ராஸ் மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளின் அரசியல் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தன. மேலும், அது இன்றைய தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.

பெரியார் 1973 ஆம் ஆண்டில் தனது 94 ஆம் வயதில் காலமானார்.

அவரது பணியும் புகழும்

சராசரி தமிழரைப் பொறுத்தவரை, பெரியார் இன்று ஒரு சித்தாந்தம். அவர் சமூக சமத்துவம், சுய மரியாதை மற்றும் மொழியியல் பெருமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் ஒரு அரசியலைக் குறிக்கிறார். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக சமூக, கலாச்சார, பாலியல் சமத்துவமின்மை, பாரம்பரியம் தொடர்பான நம்பிக்கைகளை அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் கேள்வி எழுப்பியது. மக்கள் தங்கள் வாழ்க்கைத் தேர்வுகளில் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார். அவர்கள் வெறுமனே குழந்தை பெறும் இயந்திரங்கள் அல்ல. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் சம பங்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் வழிநடத்திய சுய மரியாதை இயக்கம் சடங்குகள் இல்லாத திருமணங்களை ஊக்குவித்தது. மேலும், பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் மணவிலக்கு பெறும் உரிமையை அனுமதித்தது. மக்கள் தங்கள் பெயர்களில் சாதி பின்னொட்டைக் கைவிட வேண்டும் என்றும், சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் 1930-களில் மாநாட்டில் தலித்துகள் சமைத்த உணவை அனைவருக்கும் சமபந்திவைத்து பரிமாறினார்.

பல ஆண்டுகளாக, பெரியார் அரசியல் வேறுபாடு, சாதி, மதம் ஆகிய எல்லைகளைக் கடந்து நவீன தமிழ்நாட்டின் தந்தையாக தந்தை பெரியார் என்று போற்றப்படுகிறார்.

ஒரு காலத்தில் பெரியாரின் அன்புக்குரிய மாணவராக இருந்த சி.என்.அண்ணாதுரை அவருடன் உறவை முறித்துக் கொண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949இல் திராவிட முன்னேற்ற கழகத்தை (திமுக) உருவாக்கினார். வெகுஜன தலைவரான அண்ணா, தேர்தல் ஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்து, தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிர்காலம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பரப்புவதற்கு அவர் சினிமா என்ற புதிய ஊடகத்தைப் பயன்படுத்தி பெரியாரின் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1967 ஆம் ஆண்டில் திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து திராவிட இயக்கத்தின் வாரிசுகளாக அதன் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சிகளால் தமிழகம் ஆட்சி செய்யப்படுகிறது. அவர்கள் ஆட்சியில் பெரியாரின் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்திருக்கலாம். ஆனாலும், திமுகவும் அதிமுகவும் நாங்கள் பெரியாரின் சமூக மற்றும் அரசியல் பார்வையின் வாரிசுகள் என்று பெருமையுடன் கூறுகின்றனர்.

பெரியார் ஒரு தீவிர மத மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் என்றால் அண்ணா ஒரு மிதமான சீர்திருத்தவாதி. தமிழகத்தில் உள்ள பல பெரியார் சிலைகளின் பீடத்தில் உள்ள கல்வெட்டுகளில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும். அது கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை அவரது வாரிசுகள் மிதமாக்கினார்கள் என்று அண்ணாவைப் பற்றி ஆர்.கண்ணன் எழுதிய அண்ணாவின் வாழ்வும் காலமும் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அண்ணாவின் வழிகாட்டி பெரியார் ஒரு முறை பிள்ளையார் சிலையை உடைத்தபோது, அண்ணா “பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்க மாட்டேன்” என்று கூறினார்.

ஒரு வகையில், ராஜா லெனினையும் பெரியாரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியானது. கம்யூனிசத்துக்கு லெனினைப் போல திராவிட இயக்கத்துக்கு பெரியார் இருந்தார். ராஜா பெரியாரை நிராகரித்தது அவரது கொள்கைகளை நிராகரிப்பதாக கருதப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி-இந்துத்துவ அமைப்பின் உருவத்தை அணிய முயற்சிக்கும் பாஜக, ராஜாவின் கருத்துக்களைக் குறைத்து மதிப்பிடுவது கடினம்.

பெரியார் ஓ.பி.சி அரசியல் அதிகாரத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறார். அவரை கேலி செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் தமிழகத்திற்கு அப்பால் கூட ஓ.பி.சி நிறுவனங்கள் பெற்ற பலன்களை குறைத்து மதிப்பிடும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

Periyar Annadurai Periyar Statue C N Annadurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment