Advertisment

தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு என்ன நடக்கும்?

Afghanistan Taliban takeover women rights Tamil News இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை மதிக்கப் போவதாக அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Afghanistan Taliban takeover women rights Tamil News

Afghanistan Taliban takeover women rights Tamil News

Afghanistan Taliban takeover women rights Tamil News : தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது, ஆப்கான் பெண்களுக்கு என்ன நடக்கும்? உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான ஒரு பதிலுக்காக ஒருவர் நான்கு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். 1996-ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு ஆப்கானியப் பெண்களின் நிலை, அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நிலை, தாலிபான்கள் வெளியேறிய பிறகு அவர்கள் என்ன திரும்பப் பெற்றனர், மற்றும் அந்த அமைப்பு திரும்பும்போது என்ன செய்யும் என்று எதிர்பார்க்கலாம் ஆகிய கேள்விகள் அடங்கும்.

Advertisment

அமெரிக்காவின் புகழ்பெற்ற மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகளுக்கான மருத்துவர்களின் 'Taliban’s War on Women: A Health and Human Rights Crisis in Afghanistan' என்ற முதல் அறிக்கையில், காபூலைத் தாலிபான் கைப்பற்றுவதற்கு முன்பு, பெண்களுக்கான உரிமைகள் இருந்தன. அவற்றில், "ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து ஆசிரியர்களில் 70 சதவிகிதம், சுமார் 50 சதவிகிதம் அரசு ஊழியர்கள் மற்றும் 40 சதவிகித மருத்துவ மருத்துவர்கள்" ஆகியோர் பெண்களாகவே இருந்தனர்.

தாலிபான் ஆட்சியின் போது என்ன நடந்தது? பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான கமல் மொயினுதீன், 1994-1997-ல் தாலிபான் நிகழ்வு பற்றி முன்வைக்கிறார். “பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது; பெண்கள் வேலை செய்வதைத் தடுக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், அவர்கள் தலை முதல் கால் வரை ஒரு முக்காடு (புர்கா) கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும்; புர்கா போடப்படுவதைத் தவிர, பெண்கள் தெருக்களில் செல்லும்போது ஒரு ஆண் உறவினர் அவருடன் இருக்க வேண்டும். புர்கா அணியாத பெண்களுக்குப் பொருட்களை விற்கக் கூடாது என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிக்ஷா ஓட்டுநர்கள் பெண் பயணிகளை முழுமையாக புர்கா அணிந்து தங்களை மறைக்காதவரை அழைத்துச் செல்வதில்லை. இந்த விதிகளை மீறிப் பிடிபட்ட பெண்கள், கடைக்காரர் மற்றும் ரிக்ஷா டிரைவர் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அக்டோபர் 2001-ல் அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு இந்த விஷயங்கள் மாறத் தொடங்கின. ஜார்ஜ் ஆர் ஆலன் மற்றும் வந்தா ஃபெல்பாப்-பிரவுன் அவர்களின் ஆய்வறிக்கையில், 'ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை'-ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ஒரு பகுதியான, 19A பாலின சமத்துவத் தொடர்-2004-க்குப் பின் தாலிபான் அரசியலமைப்பு என்கிற பகுதியில், "ஆப்கானிஸ்தான், பெண்களுக்கு அனைத்து வகையான உரிமைகளையும் வழங்கியது. மற்றும் தாலிபானுக்கு பிந்தைய அரசியல் பகிர்வு, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவந்தது. அது அவர்களின் சமூக-பொருளாதார நிலையைக் கணிசமாக மேம்படுத்தியது"  குறிப்பிட்டிருந்தது. அவர்கள் மேலும் கூறுகையில், 2003-ல் 10 சதவீதத்திற்கும் குறைவாக, தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2017-ல் 33 சதவீதமாக உயர்ந்தது. அதே ஆண்டில் இடைநிலைப் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட பெண் சேர்க்கை ஆறு முதல் 39 சதவீதமாக உயர்ந்தது. மூன்றரை மில்லியன் ஆப்கானிஸ்தான் பெண்கள் 100,000 பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். மேலும், அவர்கள் கூறுகையில், "2020 -க்குள், ஆப்கானிஸ்தான் அரசு, ஊழியர்களில் 21 சதவிகிதம் பெண்கள் (தாலிபான் ஆட்சியில் ஒப்பிடும்போது), அவர்களில் 16 சதவீதம் பேர் மூத்த நிர்வாகப் பதவிகளில் இருந்தனர், மற்றும் 27 சதவிகிதம் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெண்கள் இருந்தனர்.

ஆலன் மற்றும் ஃபெல்பாப்-பிரவுன் கருத்துப்படி, ஆப்கானிஸ்தானின் 76 சதவீத பெண்கள் வாழும் ஆப்கானிஸ்தான் கிராமத்தில், தாலிபான் காலத்தில் இருந்து அவர்களின் வாழ்க்கை முறை மாறவில்லை. இருப்பினும், உரிமைகளின் இருப்பு மற்றும் சிலவற்றால் அவற்றின் பயன்பாடு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. நகர்ப்புற ஆப்கானிஸ்தான் பெண்களின் சாதனைகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும். ஆப்கானிஸ்தான் போன்ற பாரம்பரிய நாட்டில் மாற்றம் என்பது வரலாற்றில் ஒரு மெதுவான செயல்முறைதான். ஆனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் இப்போது அனுபவிக்கும் உரிமைகளை அழிப்பது செயல்முறையை மாற்றியமைக்கும்.

தாலிபான்கள் தங்கள் இரண்டாவது வருகையில் பெண்கள் மீதான தங்கள் கடுமையான கருத்துக்களை மிதப்படுத்துவார்கள் என்று சிலர் கருதுகின்றனர். தாலிபான் தலைவர்கள் தங்கள் திட்டத்திற்காக நேர்காணல் செய்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில், போர்ஹான் ஒஸ்மான் மற்றும் ஆனந்த் கோபால் ஆகியோர் தங்களின் 'எதிர்கால மாநிலத்தின் மீது தாலிபான் பார்வைகள்' என்கிற தலைப்பில் இடம்பெற்ற அறிக்கையில், "பெரும்பாலான பிரதிவாதிகள் தாலிபான்கள், அதன் சமூக கண்ணோட்டத்தில் கணிசமாக பரிணமித்திருப்பதை ஒப்புக் கொண்டனர். 1990-களில் இருந்து மாற்றப்பட்ட நிலைமைகளே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, பல தாலிபான் தலைவர்கள் இப்போது பாகிஸ்தானிலோ அல்லது வளைகுடாவிலோ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செலவிட்டனர். இது தெற்கு ஆப்கானிஸ்தானில் அவர்களின் பரந்த வளர்ப்பிலிருந்து தங்கள் எல்லைகளைப் பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. கூடுதலாக, பல தாலிபான் தலைவர்கள் 2001 முதல் தங்கள் படிப்பை முடித்து இஸ்லாமிய சொற்பொழிவின் பரந்த உலகத்துடன் ஈடுபட்டு, இஸ்லாத்தின் புதிய விளக்கங்களுக்கு தங்கள் முன்னோட்ட விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம், தனிப்பட்ட உடை, பெண் கல்வி மற்றும் தொலைக்காட்சி பற்றிய தாலிபான் பார்வைகள் கணிசமாக மென்மையாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஒஸ்மான் மற்றும் கோபால் பல நேர்காணல்களை மேற்கோள் காட்டி, “பெண்கள் வேலை செய்வதையோ அல்லது நம் நாட்டில் பெண்களின் கல்வியையோ நாங்கள் எதிர்க்கவில்லை. எப்படி இருந்தாலும், இந்த வேலை அல்லது கல்வி இஸ்லாமிய ஷரீயாவை மீறினால் நாம் எதை ஆட்சேபிக்கிறோம் மற்றும் தடுக்கிறோம். இப்போதெல்லாம், பல பள்ளிகள் உள்ளன. குறிப்பாக இஸ்லாமிய எமிரேட் பகுதியில் உள்ள பெண்களுக்கான பள்ளிகள் உள்ளன. மேலும், பெண்களுக்குக் கற்பித்தல் மற்றும் மருத்துவம் பார்ப்பது போன்ற வேலைகள் உள்ளன. நாங்கள் இதை ஊக்குவிக்கிறோம். பெண்களுக்கான மருத்துவமனைகள் ஆண்களுக்கான மருத்துவமனைகளிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்பதைக் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அதிகாரத்துவம், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மற்றும் அரசியல் வாழ்க்கையில் பெண்களுக்கு இடம் இருக்குமா? ஒஸ்மான் மற்றும் கோபாலின் கூற்றுப்படி, "பெரும்பாலான நேர்காணல் செய்தவர்கள் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கையாளும் எந்த அரசாங்கத் துறையிலும் பெண்களின் தேவையை ஏற்றுக்கொண்டனர். அதைத் தாண்டி, பெண்கள் பொதுப் பதவிகளுக்கோ அல்லது பெண்கள் அல்லது குழந்தைகளுடன் நேரடி பழக்கத்தில் இல்லாத வணிகங்களில் பணிபுரியப் பெண்களை அனுமதிக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. தவிர, இப்போது அதிகாரத்தில் இருக்கும் தாலிபான்கள், மிகக் குறைந்த அந்தஸ்தைப் பெண்களுக்கு வழங்குவார்களா? உயர் தலைவர்கள் விரும்பினாலும், இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை மதிக்கப் போவதாக அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை மற்றும் சலுகைகளை எதிர்க்கும் மற்றும் பெண்கள் மீது மிகவும் கட்டுப்பாடான கருத்துக்களைக் கொண்ட கள தளபதிகள் மற்றும் முன்னணி போராளிகளின் அழுத்தம் நிச்சயம் இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Afghanistan Taliban Attack
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment