Dr Ashwani Kumar
அயோத்தி வழக்கின் தீர்ப்பை படிக்கும்போது, நடைமுறை சாத்தியமான சமரச தீர்வு என்ற விருப்பத்தை நோக்கி உச்சநீதிமன்றம் நகர்ந்திருக்கிறது என்று முழுமையாக தெரிகிறது.
கட்டுரையாளர் அஸ்வானி குமார், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், இந்த கட்டுரையில் தெரிவித்திருப்பது அவரது சொந்த கருத்தாகும்.
பெரும்பாலான நீதிமன்ற தீர்ப்புகள் கேள்விகளுக்கு உட்பட்டவைதான். மனித வரலாறு மற்றும் செயல்பாடுகளில் சிக்கலானது என்று சொல்லப்படும் அயோத்தியாதீர்ப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. இருந்தபோதிலும், அதன் தீர்ப்பை முழுமையாக படிக்கும்போது ஆதாரங்களின் எண்ணிக்கை அளவுக்கு ஏற்ப செயல்பட்ட நீதிமன்றத்தின் தீர்மானம் குறித்து விமர்சகர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்குப் பதில்அளிக்க வேண்டும்.
அதிகரித்து வந்த மத பிரிவினை, உச்சபட்ச மத உணர்வுகள், சூடிபிடித்த அரசியல் விவாதங்கள் ஆகியவற்றால் களைத்துக் கிடந்த ஒரு தேசம், அயோத்தியா தீர்ப்பு வந்தபோது, நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கிறது. சட்டம், தொல்லியல், வரலாறு ஆகிய எல்லைக்களைக் கடந்த தனித்தன்மை வாய்ந்தபரிமாணத்தைக் கொண்ட தீர்ப்பளிக்கும் பணி என்று நீதிமன்றத்தால் கருதப்பட்டது. பரஸ்பரம் உரிமை கோருதலில் போட்டி என்பதிலிருந்து நீதி என்ற நியாயமான நடுநிலையான முடிவாக உற்சாகமாகவும், பகிரங்கமாகவும் புகழ்ந்து பேசப்பட்டது.
இந்த தீர்ப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கு தரப்பட்ட பரிசு என்றும், குடிமக்களுக்கு சம உரிமை என்ற அரசியல் சட்ட உறுதிமொழிக்கு மாறானது என்றும் சரியான உரிமையாளரின் எதிர்பார்ப்பில் விழுந்த குறைபாடு என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர். நீடித்த, பிளவு படுத்திய சர்ச்சையாக பார்க்கப்பட்ட பிரச்னைக்கு இறுதி முடிவு ஏற்பட்டதாக சிலர் நம்புகின்றனர். ஆனால், நிரந்தரமான தீர்வை விடவும், தற்காலிகமான தீர்வாக இதனை சிலர் பார்க்கின்றனர். இன்னும் சிலரோ, பெரும்பான்மையான உணர்வுகளுக்கு நீதிமன்றம் அளித்த சமரசத் தீர்வு என்று சொல்கின்றனர்.
பெரும்பாலான நீதிமன்ற தீர்ப்புகள் கேள்விகளுக்கு உட்பட்டவைதான். மனித வரலாறு மற்றும் செயல்பாடுகளில் சிக்கலானது என்று சொல்லப்படும் அயோத்தியாதீர்ப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. இருந்தபோதிலும், அதன் தீர்ப்பை முழுமையாக படிக்கும்போது ஆதாரங்களின் எண்ணிக்கை அளவுக்கு ஏற்ப செயல்பட்ட நீதிமன்றத்தின் தீர்மானம் குறித்து விமர்சகர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில்அளிக்க வேண்டும். பாபர் மசூதி 1934, 1949ம் ஆண்டுகளில் சிதைக்கப்பட்டது மற்றும் 1992-ம் ஆண்டில் அழிக்கப்பட்டதற்கு இழப்பீடு தீர்வாக இஸ்லாமியர்களுக்கு அயோத்தியா நகர எல்லைக்குள் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பை வழங்கும் வகையில் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 142ன் கீழ் முழுமையான அதிகார வரம்பை நீதிமன்றம் செயல்படுத்தி இருக்கிறது. 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதிலிருந்து 1857ம் ஆண்டு முந்தைய உள் கட்டமைப்புக்கு தனிப்பட்டை உரிமைக்கான ஆதாரங்களை இஸ்லாமியர்கள் முன் வைக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் கண்டறிந்திருக்கிறது.
தீர்ப்பு குறித்து தெரிவிக்கப்பட்ட ஒரு விமர்சனம்: நீதித்துறையால் ஈர்க்கப்பட்ட ஒரு தீர்ப்பு ஒரு சர்ச்சையில் நியாயமான தீர்வையே கண்டறிய வேண்டும் . குறிப்பாக எது சரி என்ற சரியான முடிவை எடுக்கக் கூடிய நீதிமன்றத்தின் பங்கு குறித்த உள்ளார்ந்த வரம்புகள் உள்ளிட்ட நீதித்துறை செயல்பாட்டின் இயல்பை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், வரலாற்றுப் பூர்வமான கருத்தாக்கம் கொடுக்கப்பட்டதா, சர்ச்சைக்கு உணர்வுப்பூர்வமான பிணைப்பு கொடுக்கப்பட்டதா என்ற இந்த கேள்வியை நாம் அவசியம் கேட்க வேண்டும் இறுதியான நீதியின் விநியோகிப்பாளராக உச்சநீதிமன்றம் பங்கு வகித்தது. சட்டம், சம உரிமை, நல் உளசான்று ஆகியவை தீர்ப்பின் மூலம் நிலைநிறுத்தப்பட்டன என உச்சநீதிமன்றம்தமது தீர்ப்பின் முடிவுரையில் விரிவான விளக்கங்களைக் கொடுத்திருந்தது.
யாருக்கு உரிமை என்பதை தீர்மானிக்கும்போது, அது நிவாரணங்களை வடிவமைத்துள்ளது, அதன் இந்த கருத்தாக்கத்தில் சமூக ஒத்திசைவு மற்றும் மதநல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த தீர்மானம் பொருளாக இருக்க வேண்டும் என்ற உள்மன ஆய்வில் நீதிமன்றம் , “நீதி என்பது அடித்தளமாக இருக்கிறது, அதன் மீது அது எந்த ஒரு சட்டரீதியான முகமையையும் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். அந்த கட்டமைப்பின் மீது சட்டத்தின் நியாய தன்மை தொடர்ந்திருக்கிறது“ என அறிவித்திருக்கிறது. குற்றம் குறை காணமுடியாத அறநெறியுடன் கூடிய தீர்ப்பை, தத்துவப் பரிமாணத்தை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
பல்வேறு மக்களைக் கொண்ட பிரதேசங்கள்,மதங்களை அடிப்படையாக கொண்ட இது பன்மொழி பேசும், பல்வேறு மாறுபட்ட கலாசாரங்களைக் கொண்ட குரல்களைக் கொண்ட ஒலிகளின் மாறுபட்ட கலைவையைக் கொண்டது. அதன் இந்திய குடிமகனான ஒரு நபர், இந்தியா ஒரு தேசம், அமைதி எனும் உணர்வு அதனுள் இருப்பதை அவசியம் உணர வேண்டும் என்பதை இது நமக்கு உணர்த்தி உள்ளது. ஒரு எளிமையான சமுதாயத்துக்கு தீர்க்கமான சமநிலையை இது கோருகிறது. நீதி, சம உரிமை, நல்ல மனசாட்சியை நாம் அதற்கு அளிக்கலாம். "
நடைமுறைக்கு ஏற்ற நியாயமான ஒரு தீர்வுக்காக தெளிவான தேடலை நீதிமன்றத்துக்கு கொடுக்க வேண்டும். அடித்தளத்தில் தவறு கண்டுபிடிப்பது பிரச்னைக்குரியதாகும். அதன்மீது நீதிமன்றம் அதன் வெளிப்பாட்டை நீடித்திருக்கச் செய்கிறது. அது, சட்ட யதார்த்தவாத அடிப்படையிலான ஒன்றாகும். ஒரு வரலாற்று தவறு, முன்னெடுப்புக்கு தீர்வாக அது கண்டுபிடித்த சாத்தியமான, ஏற்றதான வழியில் நீதிமன்றம் சமத்துவ கொள்கையை செயல்படுத்துகிறது. "அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளான நீதி, சகோதரத்துவம், மனித கவுரவம், மத நம்பிக்கைகளில் சமத்துவம்."
விதிவிலக்கான வழக்குகளில், அரிதான நீதி ஒருமித்த தன்மையில் இருந்து இந்த தீர்ப்பு அழுத்தமான கவனத்தை ஈர்த்தது. இதுதான் தீர்வு என்பதற்கான அதன் சட்டம், நீதித்துறை நீதி இணைந்திருந்தது தெளிவாகிறது. இருக்கக் கூடிய புறநிலைத் தரவுகளின் வரம்புக்குள் சிறப்பான தீர்வை கண்டறிவதற்கு நீதிமன்றத்தின் கொள்கை நிலைநாட்டப்படுகிறது. சட்ட அறிஞர் அஹாரோன் பாராக் உபயோகித்த வரிகளில், "வலு , மாற்றத்துக்கு இடையே, தர்க்கம், உணர்வுகள் ஆகியவற்றுக்கு இடையே நிச்சயதன்மை, பரிசோதனை ஆகியவற்றுக்கு இடையே சரியான நடுநிலையை அடைய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தேசத்தில் ஒரு சாவலை எதிர்கொள்வதற்கு விருப்பதுடனும், உளப்பூர்வமாகவும் உயர்ந்த பட்ச நீதி அமைப்பின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். சரியாக இல்லாவிட்டாலும் கூட நீதித்துறை அறிவை நாம் தள்ளிப்போடுவது ஒன்று மட்டும்தான் நியாயமாகும். அது கொண்டிருக்கும் அனுபவம், சட்டம் மற்றும் தர்க்க ரீதி ஆகியவற்றை முன்னோக்கிச் செல்வதே சிறந்த வழி. வரலாறு அல்லது சமூகம் சார்ந்த ஆதரவு நிலை எடுக்காத நம்மைப் போல இருக்கும் நீதிபதிகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பல்வேறு காலகட்ட தருணங்களில் நீதி, உண்மை ஆகிய பொருந்தியிருக்கும் பொருளைத் தரும் அலைகள் நீரோட்டங்களுக்கு எதிரான சக்தியை கொண்டவர்கள் அல்ல அவர்கள்.
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதியின் கருத்தமைவுகள் முன்னெடுப்புக்கான கோரிக்கையில் , சட்டம் நீடித்திருக்க, கடந்த கால பிணைப்பு, தற்கால மற்றும் எதிர்கால தொடர்ச்சி ஆகியவற்றை நீதிபதிகள் விரும்புவர். சரியான நடுநிலையை கண்டறிவதில் , தங்களின் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக அதிகபட்ச சமூக உணர்வுகள், பொதுவான நம்பிக்கை, எது, எப்போது வலியுறுத்துகிறது, ஜனநாயக கொள்கைக்கு இணங்க பொது விருப்பத்தை உருவாக்குதல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்வர். இன்றியமையாத உறுதியான அமைதியை அங்கீகரிக்க , வழக்கின் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்டிருக்கும். தலையாய நோகத்துக்காக பணியாற்றும் நீதிமன்றம் தேசத்தின் மிகப்பெரிய ஏற்பிசைவுக்கு உத்தரவிடுகிறது. தீர்ப்பை முழுவதுமாக படிக்கும் ஒருவர், உனடியாக நிகழும் உணர்வின் தயாரிப்பு அல்ல என்ற ஒரு சட்டப்பூர்வமான முடிவுக்கு வருவார்கள். சமூக வாழ்க்கையில் ஒழுங்கை நிர்வகிக்க ஆதிகால தேவையாக இது துணைபுரிகிறது. நீதித்துறை புனிதப்படுத்தப்பட்ட தீர்ப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவானது, அதன் தவறில்லாத தன்மைக்கு ஆச்சாரம் கூறுவதாகாது. சட்டத்தில் பிணைந்திருக்கும் விளைவுகள், அரசியலைப்பு மேலாதிக்கத்தின் தியாகத்தை மட்டுமே கேள்வி எழுப்ப முடியும். நல்ல தீர்ப்புக்காக திரும்பவும் தொடங்குவது வீணான முயற்சி. தேசத்தின் மனசாட்சியின் பாதுகாவலன் என்ற வகையில் நீதிமன்றத்தின் மீது படிந்த கறை ஒரளவு மீட்கப்பட்டது. அது ஆழமாக மட்டும் படிந்து விட்டால், நமது மதசார்பற்ற ஜனநாயக த்தில் பிளவுகளை ஏற்படுத்தி விடும். நீதிமன்றத்தின் வழக்குப்பட்டியல் பலூன்போல பருத்து தேவையற்ற சுமையாகிவிடும்.
இந்த கட்டுரை முதன்முதலில் நவம்பர் 25 அச்சு பதிப்பில் ‘Striking a balance’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரை எழுத்தாளர், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ஆவார். வெளிப்படுத்திய கருத்துக்கள் தனிப்பட்டவை.
தமிழில் : கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.