இன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியாது

2004 ல் பிரதம மந்திரி பதவி விட்டொழிந்த பின்னர் கட்சியை மறுசீரமைக்க சோனியா காந்திக்கு பொன்னான வாய்ப்பு சோனியா காந்திக்கு கிடைத்தது

சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சி தனது  இடைக்கால தலைவராக  தேர்வு  எடுத்த முடிவு குறித்த  இந்தியன் எக்ஸ்பிரஸின்  ‘தி ரிவைண்ட்’ (IE, ஆகஸ்ட் 12)  என்ற தலையங்க கட்டுரையின்  இறுதியில் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன  என்பது தான் இந்த கட்டுரையின் அடிப்படை வாதம்.

முதலாவதாக, புதிய தலைவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருக்க மாட்டார்  என்று வெளிச்செல்லும் தலைவர் ராகுல்காந்தியை உறுதிமொழியைக் கடைப்பிடிக்க முடியாத இயலாமையைத் தான் இந்த முடிவு பிரதிபலிக்கிறது.

இரண்டாவதாக, இந்த தலையங்கம்  புதிதாய் வரும் தலைவர்(அதாவது சோனியா காந்தி)  “கடுமையான முடிவுகளை எடுப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு உண்மையான மாற்றத்தை உறுதி செய்வார் “என்று  நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், இந்த மாற்றம் எவ்வாறு நிகழும் என்பதில் தலையங்கம் அமைதியாகத் தான் இருக்கிறது.

அரசியல் கட்சிகள் உயர்வுக்கும், வீழ்ச்சிக்கும் உட்பட்டதுதான். ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் முக்கியமான பிரச்சினைகள் அரசியல் ஆகும்போதெல்லாம்  காலம் புதிய அமைப்புகளை உருவாக்கி கொள்கின்றன. இந்த உள்ளார்ந்த நெகிழ்ச்சித் தன்மையை புரிந்து கொள்வதற்கும், மாற்று சிந்தனைகளை தனது சித்தாந்தங்களுக்குள் கொண்டு வருவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு இந்த திறன் இல்லை என்றே சொல்லலாம்.

அரசியல் கட்சிகள்  பொதுவாகவே பலவிதமான செயல்பாடுகளை செய்கின்றன. மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான இணைப்புகளை உருவாக்கித்தருகின்றன. மேலும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்பாகவும் ஒரு அரசியல் கட்சி செயல்படுகின்றன. இந்த இரண்டு அடிப்படை செயல்பாடுகளைச் செய்யாத நிலையில், காங்கிரஸ் கட்சி நவீன காலத்திற்கு முந்தைய வம்சாவளி அரசியல் மனப்பான்மையுடன் தான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருகிறோம் என்பதை நிரூபித்துள்ளது.

இந்திரா காந்தி 17 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்த நாட்களில், எந்தவொரு  கட்சித் தேர்தலும் நடத்தப்படாமல்,  நேரு-காந்தி  குடும்பம் சாராத  அனைவரும்  கட்சியை விட்டே ஓரங்கட்டினார்.  நரசிம்மராவ் மற்றும்  சீதாராம் கேசரியை விட வேறு உதாரணம் இதற்கு தேவை இல்லை. சமிபத்தில் நடந்த நிகழ்வைப் பாருங்கள், 19 வருடம் கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தி ஒரு நாள் தன் மகனை கட்சித்  தலைவராய்   நியமிக்கிறார். பின், தனது மகன் தலைவர் பதிவியில் இருந்து விலகும் பொது அதன் இடைக் கால தலைவராக மீண்டும் சோனியா காந்தியே கட்சியால் நியமிக்கப்படுகிறார். இந்த விமர்சனங்களுக்கு,  “மற்றக் கட்சிகளிலும் வம்சாவளி அரசியல் இருக்கிறது”  என்ற பதிலடியாய் அவ்வப்போது முன்வைக்கிறது. ஆனால், இந்த பதில் முற்றிலும் தவறானது, பொய்யானது என்றே சொல்ல வேண்டும். மற்ற கட்சிகளில் குடும்ப அரசியல் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், கட்சித் தலைமை பதவியை ஒரு குடும்பத்தோடு இவ்வளவு ஆழமாக ஒன்றிணைத்தது காங்கிரஸ் கட்சியை விட(சில பிராந்திய கட்சிகளைத் தவிர) வேறு  யாருமே இல்லை என்று சொல்லலாம்.

காங்கிரஸ், இந்திரா காந்தியின் நாட்களிலிருந்து, ஜால்ரா சித்தாந்தங்களுக்கு விலை போனது . இன்று வரை, அங்கே கட்சி விசுவாசத்தை விட குடும்ப விசுவாசமே மேலோங்கி உள்ளது. இதன் விளைவாக, அடிமட்டத்தில் மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அது இழந்துவிட்டது.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் அடையாளங்களாக இருப்பது இரண்டே விஷயங்கள் தான். ஒன்று, 15 பைசா அஞ்சலட்டை மற்றொன்று ஒரு காங்கிரஸ் தொண்டன். இந்த கருத்தை அடிக்கடி சொல்லி மகிழ்ந்தவர்  1950 களில் வாழ்ந்த காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரான வி ஆர் காட்கில்.  அந்த முதல் அஞ்சலட்டை இன்னும் நமது கிராமத்தின் அடையாளமாகத் தான் உள்ளது, ஆனால்,  அந்த காங்கிரஸ் தொண்டன் தொலைக்கப் பட்ட கணவாய் தான் இன்று  உள்ளது.

இதுபோன்ற ஒரு அமைப்பு இல்லாத நிலையில்  காங்கிரஸ் வகிக்கிறது, அங்கு சிறு  அதிகார தரகர்கள்  வேட்பாளர்களை தீர்க்கமாக பரிந்துரைக்கிறார்கள்  . கட்சி வேட்பாளர்கள் மேலிருந்து திணிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு அடிமட்ட அனுபவமோ ஆதரவோ இல்லை. உதாரணமாக,  ஒரு தீர்க்கமான அரசை எதிர் நோக்கிய தேர்தலின் முக்கியக் கட்டத்தில்  கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணியை ஒரு தலைவர்  தனது சகோதரிக்கு வழங்குகிறார். இது, எந்த வகையில் சாத்தியப்படும். இவையெல்லாம் தெரிந்தும் அந்த தலையங்க கட்டுரை ” கடுமையான முடிவுகளை எடுப்பதன் மூலம் உண்மையான மாற்றத்தை கட்சிக்குள் உறுதிப்படுத்த முடியும்” என்று நம்பிக்கையைத் தருகிறது. இது யாரை சமாதானப் படுத்த? . சோனியா பிரச்சினையின் ஒரு பகுதியாகவே இருக்கும்போது அவர்களால் எப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்?

ஒரு அரசியல் கட்சி  வெகுஜன ஆதரவை நிர்வாகத் திறமையால் இணைக்க வேண்டும். அப்படி இருக்கையில் தான், புதிதாய் தோன்றும்  குழுக்கள் மற்றும் கோரிக்கைகளின் பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள் ஒலிக்க வைக்க முடியும்  . காங்கிரஸ் கட்சி,  சோனியா தலைமையில் இருந்தபோது கடந்த இரண்டு தசாப்தங்களில்  ​​இதை அடைய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை .

2004 ல் பிரதம மந்திரி பதவி விட்டொழிந்த பின்னர் கட்சியை மறுசீரமைக்க சோனியா காந்திக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.  பிரணாப் முகர்ஜியை கட்சியை  முதன்மை படுத்தாமல் , எந்தவொரு அரசியல் தளமும் இல்லாத அரசியல் சாராத  மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜெகன் ரெட்டி போன்ற பல அடித் தட்டு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தங்கள் மாநிலத்தில்  சொந்தமாய் கட்சியை உருவாக்கியதுடன்  வெற்றிகரமான தலைவர்களாகவும் உருவெடுத்தனர். மன்மோகன் சிங்கின் கீழ் ஒரு பணி செய்வது  அவசியம் என்றுகூட  ராகுல்  நினைக்க வில்லை, இதனால் பாஜகவின் “நாம்தார்” மற்றும் “காம்தார்”  என்ற விமர்சனங்களுக்கு எளிதில் மாட்டிக் கொண்டார் .

அந்த தலையங்க கட்டுரையில் காங்கிரஸ் கட்சி நன்கு கட்டமைக்கப்படாத   அமைப்பு என்பதை  ஒப்புக்கொள்கிறது. அதன் அறிகுறியாக தான்  சோனியாவை  கட்சி நாடுகிறது என்ற கருத்தையும் முன்வைக்கிறது. ஆனால், அவர்தான் உண்மையிலே கட்சியில் காணப்படும் பிரச்சனையாக உள்ளார். நேரு-காந்தி குடும்பம் ஒன்று தான்  “கட்சியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே பசை” என்று கருதுவது ஜனநாயக அமைப்பில் அபத்தமானது. தலையங்க கட்டுரை முன்விவரமின்ரி  காங்கிரஸ் தலைமை தடுமாற்றத்தை  ஆதரிப்பதாகவே தெரிகிறது.

பாஜக தனது கட்சித் தலைவர்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவை தலைவர்களிலும் பல புதிய முகங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதால், அந்தக் கட்சி  இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து யுக்திகளை கட்சிக்கு ஆலோசனை வழங்கம் காங்கிரஸின்  சி.டபிள்யூ.சி   தேர்தல் செயல்முறைக்கு செல்லாத மக்களையே உள்ளடக்கியது. அனைத்து சமூக சக்திகளின் பலவீனத்தால்  அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட   நெப்போலியன் III இன் பாத்திரத்தை சோனியாவின் பங்கு ஒத்திருக்கிறது. இத்தகைய மதிப்பிழந்த தலைமையில் இருக்கும் சோனியா காந்தியால்    கட்சியை புதுப்பிக்கவோ அல்லது முக்கியமான மாற்றங்களை கொண்டு வரவோ முடியும் என்று எதிர்பார்ப்பது மாயையானது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close