Advertisment

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் 2

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
copyright act and cinema phase shankar krishnamurthy

copyright act and cinema phase shankar krishnamurthy

அறிவு சார்ந்த சொத்துரிமை என்பது இன்னொரு வகையான தொட முடியாத( intanginle ), பார்க்க முடியாத ( invisible ) சொத்து (asset ) வகையை சார்ந்தது என்பதை பார்த்தோம்..

Advertisment

யோசித்து பாருங்கள்.. மனிதனின் உடலில் மிக முக்கியமானவை யாவை? அவனது இருதயம் (Heart ), அவனது மூளை (Brain ), அவனது நுரையீரல் ( Lungs )..அவனது சிறுநீரகம் (கிட்னி)... அவனது கல்லீரல்(Liver ).. இவை அனைத்தும் வெளியில் தெரியாத உறுப்புகள்.. அதாவது நம்மால் தொட முடியாத(intangible ) , பார்க்க முடியாத(invisible ) உறுப்புகள்.. ஆனால் நாம் இவற்றை விட முக்கியத்துவம் தருவது வெளியில் தெரியும் நமது முகத்துக்கு.. தலை முடிக்கு.. முகத்துக்கு மேக்கப் போட்டு கொள்கிறார்கள் பலர்.. தலைக்கு தலைச்சாயம் அடித்து கொள்கிறார்கள்.. ஆனால் வெளியில் தெரியாத உறுப்புகளுக்கு எதை அடித்து கொள்வது?

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும் 

அறிவு சார்ந்த சொத்துரிமையும் மிக மிக முக்கியமான ஒரு சொத்து.. காரணம் அவற்றிற்கு பெரிய முதலீடு தேவையில்லை.. அவற்றிற்கு தேவை கல்வியும் அந்த கல்வியை கற்றதை வைத்து அறிவுபூர்வமான ஒன்றை உருவாக்குவதே.. மற்ற எந்த தொழிலை செய்தாலும் அதற்கு ஒரு முதலீடு தேவை.. ஆனால் இதற்கு அப்படி இல்லை. உதாரணமாக ஒரு ஓவியத்தை அழகாக வரைகிறார் ஒருவர்.. அதற்கு சந்தையில் பெரு மதிப்பு கிடைக்கிறது.. ஒரு அருமையான கதையை எழுதுகிறார் ஒருவர்.. அதற்கு சினிமா உலகில் மதிப்பு இருக்கிறது.. ஒரு கவிஞர் அருமையாக பாடல் எழுதுகிறார் .. அதற்கும் சந்தை மதிப்புள்ளது.. இப்படி நம் அறிவை பயன்படுத்தி சந்தையில் பணத்தை பெற்று தரும் வணிகமாக நம் அறிவு உருவாக்கிய சொத்து பயனடைகிறது..

இந்த அறிவு சார்ந்த சொத்துரிமையை என்பதில் என்ன வகையான சொத்துக்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.

1, காப்புரிமைகள் ( Patents )

2, பதிப்புரிமைகள் ( Copyrights )

3, வணிக/ வர்த்தக சின்னங்கள் / முத்திரைகள் ( Trade Marks )

4, புவியியல் பொருட்கள் குறிகாட்டிகள் (Geographical Goods Indicators )

5, வடிவமைப்பு காப்புரிமைகள் (Design Patents )

நாம் இங்கே பார்க்க போவது பதிப்புரிமை ( copyright ) சட்டம் மற்றும் அதனை சார்ந்த விஷயங்கள் குறிப்பாக சினிமாவும் காப்பிரைட் சட்டமும் என்பதை பற்றியது..

பதிப்புரிமை ( copyright ) சட்டம் எப்படி வந்தது.. ஏன் எங்கே எப்போது என்பதை பற்றியெல்லாம் பார்ப்போம் .

இதன் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், இங்கிலாந்தில் , 1436 ஆம் வருடம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு அச்சக இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.. அது 1440 ஆம் ஆண்டு உலோகத்தினால் மாற்றப்பட்டது.. அப்போது அது படைப்புலகிற்கு சவாலாக போகிறது என்பது தெரியாமல் இருந்தது..

அச்சக இயந்திரத்தை பயன்படுத்தி புத்தகங்கள், நோட்டீசுகள் இன்னும் பல காகித வடிவ ஆவணங்கள் இதில் அச்சடிக்கப்பட ஆரம்பித்தன... ஆயிரக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு மக்கள் விற்பனைக்கு போயின.. அப்போதெல்லாம் படிக்கச் வேறெந்த சாதனமும் இப்போது இருப்பது போல இல்லாததால் புத்தகங்களுக்கு மிக பெரிய டிமாண்ட் இருந்தது..

ஆனால் அதுவே ஆட்சியாளர்களுக்கும் ஒரு சவாலாக இருந்தது.. ஏன்? என்ன சவால் ? புத்தகங்கள் படித்தால் மக்களுக்கு அறிவுதான் பெருகும்.? அது மக்களுக்கு கிடைத்தால் என்ன பிரச்சனை ?

காரணம் ஆளுக்கு ஆள் மத சம்பந்தப்பட்ட , அரசியல் சம்பந்தப்பட்ட கருத்து புத்தகங்கள் இன்னும் ஏதேதோ அச்சடித்து விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.. அது அரசுக்கு பெரிய தலைவலியாக ஆரம்பித்தது. அதனால் லைசென்ஸ் முறை கொண்டு வர பட்டது.. 1534 ஆம் ஆண்டு அரசின் அனுமதி பெறாமல், லைசென்ஸ் இல்லாமல், சென்சார் செய்யப்படாமல் புத்தகங்கள் அச்சடித்து வெளியிட கூடாது என்று ஆணை பிறப்பித்தனர்..

1557 ஆம் ஆண்டு ஒரு மாற்றம் ஏற்பட்டு கிரௌன் என்று சொல்ல கூடிய இங்கிலாந்து அரச குடும்ப தலைமையால் ஒரு புது சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அச்சகத்திற்கு ஏகபோக (மோனோபோலி) உரிமை வழ்ங்கியது ..இதற்கு எதிர்ப்பு அதிகமானது.. அதனால் 1695 ஆம் ஆண்டு அது நீக்கப்பட்டது.. பிறகு புதிய காப்பிரைட் சட்டமானது , Statute of Anne என்ற பெயரில் 1710 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது..

இந்த சட்டத்தின் மூலம் உரிமைகள் அச்சத்திற்கு இருந்தது போல அல்லாமல், அவர்களிடமிருந்து , படைப்பாளிகள் கைக்கு உரிமைகள் போனது.. ஆனால் அவர்களுக்கு பதினான்கு ஆண்டுகள் மட்டுமே லைசென்ஸ் வழங்கும் உரிமை, அச்சடிக்கும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டது.. அதை மீண்டும் இன்னொரு பதினான்கு ஆண்டுகள் புதிப்பித்து கொள்ளலாம் என்றும் சட்டம் இயற்றப்பட்டது..

இதன் அடிப்படையில் முதல் காப்பிரைட் சட்டம் 1911 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. இதுதான் முதல் காப்பிரைட் சட்டம் ...

இந்த சட்டத்தின் மூலம் ஒரு படைப்பை உருவாக்குபவர்களுக்கு தானாகவே உரிமை வந்தது.. அவர்கள் அதை ரெஜிஸ்டர் செய்துதான் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போனது..

மேலும் படைப்பாளிகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் படைப்பிற்கு உரிமை பிளஸ் ஐம்பது ஆண்டுகள் அவர்களது சந்ததியினருக்கு என்றும் சொல்லப்பட்டது.. இது பிறகு 1956 திருத்தி அமைக்கப்பட்டு புது காப்பிரைட் சட்டம் வெளியானது... இந்தியாவிலும் இதனை தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு காப்பிரைட் சட்டம் இயற்றப்பட்டது..

ஒரு படைப்பாளி தனது படைப்பு திறன் மூலம் ஒரு இலக்கிய படைப்பையோ அல்லது ஓவியத்தையோ அல்லது நாடகத்தையோ அல்லது புகைப்படத்தையோ அல்லது இசையையோ அல்லது சினிமாவையோ உருவாக்கும் போது அவனுடைய உழைப்பு கொடுக்கப்படும் வெகுமதியே காப்பிரைட் உரிமை என்பது.. அரசு அதை அவர்களுக்கு சட்டத்தின் மூலமாக அளிக்கிறது..

அதை யாரோ மீறும் போது , அரசின் சட்டம் அவர்களுக்கு நீதிமன்றத்தில் துணை நிற்கும்..

சட்டம் என்பது ஒரு அரசின் சாசனம் .. அந்த சாசனத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும்.. நீதி மன்றம் என்பது உண்மை நிலை, சட்ட நிலை இவை இரண்டையும் ஆராய்ந்து எது சரி எது தவறு, யாருக்கு உரிமை, யாருக்கு உரிமை இல்லை என்றும் சொல்லும் ஒரு அங்கம் தான்.. இதை ஆங்கிலத்தில் Question of Fact ( உண்மை நிலை ), Question of Law ( சட்ட நிலை ) என்று சொல்வார்கள்.. இவை இரண்டில்தான் மனிதர்களுக்குள் மோதலே வருகின்றன.. நீ சொல்வது உண்மையா, நான் சொல்வது உண்மையா.. சட்டம் எனக்கு சாதகமா இல்லை பாதகமா என்பதே கேள்வி..

ஒருவர் ஒரு இலக்கியத்தை படைத்திருக்கிறார் என்றால் அது பதிப்பில் வெளியான உடனேயே அவருக்கு அதற்கான உரிமை வந்து விடுகிறது.. காரணம் அந்த இலக்கிய படைப்பை அதற்கு முன்னால் வேறு யாரும் வெளியிடாத போது, முதலில் வெளியிடுபவருக்கே அந்த உரிமை வருகிறது..

இதை பற்றிய பல விஷயங்கள் வரும் தொடர்களில் அலசப்படும்..

இந்த படைப்பு, திரு. ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியின் பதிப்புரிமை...(காப்பிரைட் ).. அவரது அனுமதி இன்றி இது வேறு யாரும் பயன்படுத்தவோ, மொழி மாற்றம் செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

திரு . ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியாளர்.. , மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்.. சட்டம் படித்தவர்.. வணிக சட்டத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.. ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர்.. ஆலோசகர்.. பயிற்சியாளர் திரைப்பட நடிகர்.. திரைப்பட திரைக்கதை ஆலோசகர்.. திருச்சியை அடுத்த நங்கவரம் கிராமத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த இவர் , சென்னையில் படித்து வளர்ந்து வேலை பார்த்து பிறகு வேலை நிமித்தம் பல நகரங்களில் பணி புரிந்து இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார்..

ஒரு நடிகராக இவர் ‘காதலே என் காதலே, மாற்றான், நந்தனம், அனேகன், ஜானி, காப்பான்’ படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல படங்களில் திரைக்கதை ஆலோசகராக, சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment