Advertisment

நரேந்திர மோடி தலைமைப் பண்புக்கு கடும் சவால்

கொரோனா வைரஸ் தொற்று: தனது தலைமைபண்பை சோதிக்கஇதை விட கடுமையான நேரத்தை மோடிதனது 6 ஆண்டு கால ஆட்சியில் சந்திக்கவில்லை. சுகாதாரம் ஒரு முக்கிய அரசியல் பிரச்னையானவுடன், அது ஒரு பிரதமரை உருவாக்கும் அல்லது காலி செய்யும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus India, Covid-19 India, Modi coronavirus task force, கொரோனா வைரஸ், தவ்லீன் சிங், Tavleen Singh Coronavirus, பிரதமர் மோடி, Cornavirus COVID-19 India, prime minister narendra modi, India curfew Coronavirus

Coronavirus India, Covid-19 India, Modi coronavirus task force, கொரோனா வைரஸ், தவ்லீன் சிங், Tavleen Singh Coronavirus, பிரதமர் மோடி, Cornavirus COVID-19 India, prime minister narendra modi, India curfew Coronavirus

தவ்லீன் சிங், கட்டுரையாளர்

Advertisment

இந்த வாரம் நான், உத்திரபிரதேச முதலமைச்சர், கருத்து வேறுபாடு மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை நசுக்க மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்து எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். ரூ.1.55 கோடியை, 13 பேர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை கொடுக்காவிட்டால் அவர்கள் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் பொதுச்சொத்துக்களை குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது சேதப்படுத்தியிருந்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால், உரிய செயல்முறையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ள நாட்டில், அவர்களின் குற்றம், நீதிமன்றத்தில் நிறுவப்பட வேண்டும். அதிகாரிகள் அடங்கிய தன்னிச்சையான குழுவினரால் தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. இதுகுறித்து நாம் பொறுமையாக கூட பேசிக்கொள்ளலாம். ஆனால், தற்போது பேச வேண்டிய முக்கியமான விஷயம், அந்த காலத்தில் உலகம் முழுவதும் பரவிய பிளேக் போன்று தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொற்றுநோயை கையாளும் திறமை நமது அரசுக்கு உள்ளதா என்பது குறித்துதான்.

இதுவரை எல்லாம் நலம்தான். கடந்த வாரம் பிரதமர் அரிதாக தொலைக்காட்சியில் தோன்றி தேச மக்களுக்கு கொடுத்த உரையில், கோவிட்-19ஐ நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஒரு நாள் ஊரடங்குக்கு ஒத்துழைத்து நாம் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது தன்னார்வமான ஜனதா ஊரடங்கு ஆகும். ஆனால் அச்சமும், பதற்றமும் நிறைந்துள்ள இந்த நேரத்தில், அவசரம் தவிர மற்றவற்றிற்கும் சிலர் துணிந்து வெளியில் செல்வார்கள். தனிப்பட்ட முறையில் இந்த ஊரடங்கிற்கான காரணம் எனக்கு சரியாக தெரியாது. ஆனால், இனி சில நாட்களுக்கு சமூகத்தில் தனிமையாக இருக்க நாம் பழக்கிக்கொள்ள இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது என்றே கருதுகிறேன். ஆனால், கூட்டம் நிறைந்த சேரி பகுதிகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது தெளிவாக தெரியவில்லை. இது அவசியம் என்பதில் எனக்கு எந்த கேள்வியும் இல்லை. ஆனால் மும்பையில் கடந்த வாரம் முழுமையான நிறுத்தம் செய்யப்பட்டபோது, மக்கள் பீதியடைந்தார்கள். குடிமக்களாகிய நாமும் ஒத்துழைக்கவேண்டும். ஒரு சில விஷயங்களை மட்டுமே அரசு செய்யமுடியும்.

பிரதமர், பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் ஆலோசனை குழு உருவாக்கியிருப்பதை அறிவித்தார். அது நல்லது. அது சாதாரண, ஏழை, உழைக்கும் தினக்கூலி பெறும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளுமா? வைரஸ் அழிப்பதற்கு முன்னரே, அழிந்துவிடும் நிலையில் உள்ள சிறிய வியாபாரிகளுக்கு அது இழப்பீடு வழங்குமா? அதற்கு செய்யும் செலவை கூட குறைக்க பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் ஆலோசனை குழு நிர்பந்திக்குமா? அமைச்சர்கள் அன்றாடம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த வீடுகள் மற்றும் பணியாட்கள் கூட்டம் போன்ற சலுகைகளை குறைத்துக்கொள்வார்களா? விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்றவர்களின் இழப்பீடுகள் ஈடுகட்டப்படுமா? அவர்கள் ஏற்கனவே பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இவை பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் ஆலோசனைக் குழுவிற்கு உள்ள சவால்கள். மேற்கூறிய அனைத்திற்கும் இக்குழுவே பொறுப்பு.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதர்கு இங்கே கிளிக் செய்யவும்:

பிரதமர், முதலமைச்சர்களை சந்திக்க அழைத்திருக்கிறார். இது நல்லதுதான். ஏனெனில், ஆரோக்கியம் மற்றும் மக்கள் நலவாழ்வு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் ஒன்றுதான். பொது மருத்துவமனைகளில், சர்வதேச வழிகாட்டுதல்படி சுகாதாரம் பராமரிக்க அவசரமான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் உத்தரவிடுவாரா? இதற்கு கூடுதல் நிதி அதிகம் தேவைப்படாது. பிரதமர் ஸ்வச் பாரத் திட்டத்திற்கு காட்டிய முனைப்பை இதற்கும் காட்டவேண்டும். நமது சிறந்த அரசு மருத்துவமனைகளில் கூட பொது சுகாதாரம் நன்றாக இருக்காது. நம் நாட்டின் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மருத்துவமனைகளை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே அது புரிந்துவிடும். அங்கு எலிகளும், பூனைகளும் மற்றும் பயமுறுத்தும் விலங்குகளும் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் உல்லாசமாக சுற்றித்திரியும். அவை பிறந்த குழந்தைகளைக்கூட காயப்படுத்தும். சிறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கழிவறைகள் மிக மோசமாக இருக்கும். மருத்துவமனை வளாகமே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ கழிவுகள் நிரம்பி வழியும். அங்கு மருத்துவர்களும் ஒரு நோயாளியிடம் இருந்து அடுத்த நோயாளியை பார்க்கச்செல்லும் முன், தங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்ற நெறிமுறைகளையெல்லாம் புறக்கணித்துவிடுவார்கள்.

தண்ணீர் குறித்து பேசும்போது, உடனடியாக அடுத்த முக்கியமான கேள்வி எழுகிறது. தண்ணீர் குறித்து நாம் என்ன செய்யபோகிறோம்? சுத்தமான தண்ணீரும், சோப்பும் இந்த வைரசிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும். ஆனால் இந்த நாட்டில் இது சாத்தியமில்லை. சுத்தமான தண்ணீர் என்பது இங்கு விலையுயர்ந்த பொருள். உலக மக்கள்தொகையில் 20 சதவீதம் சுத்தமான தண்ணீரின்றி வாழ்வது இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது. கிராமப்புற இந்தியாவின் சில கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், அவர்கள் சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது சாத்தியமில்லாத ஒன்றாகும். தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதமர் தண்ணீரை தனது முக்கிய லட்சியமாகக்கொண்டு, அதற்காக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அடுத்த தேர்தலுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் தூய்மையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். இதுவரை அது எட்டாத கனவாகவே உள்ளது. இதனால், இந்த வைரசை எதிர்த்து போராடக்கூடிய அடிப்படையான கருவி கூட பல இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்த கட்டுக்கதைகளும், வினோதமான நம்பிக்கைகளும் பல்வேறு பிரச்னைகளை தூண்டிவிடுகின்றன. கடந்த வாரம் அதிக ஆண்கள் அடங்கிய குழு ஒன்று மாட்டுச்சாணத்தில் குளித்த புகைப்படம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அப்படி செய்தால், இந்த வைரசிடம் இருந்து தப்பிக்கலாம் என்று நம்பி அவர்கள் அவ்வாறு செய்தார்களாம். இதற்கிடையில் இந்து மகாசபை வேறு, மாட்டு கோமியம்தான் மருந்து என்று கூறிவருகிறது. பலதரப்பட்ட மக்களும், ஒவ்வொரு மருந்தை காட்டி, இது வைரசை கட்டுப்படுத்தும், அது நோயின் தீவிரத்தை குறைக்கும் என்று கட்டுக்கதைகளை கூறி வருகின்றார்கள். பிரதமர் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு எல்லை உண்டு. அவர், சூரிய ஒளி வைரசை கட்டுப்படுத்தும் என்று பிரச்சாரம் செய்துவரும் தனது அமைச்சர்களை கட்டுப்படுத்தலாம்.

இந்த 6 ஆண்டு கால ஆட்சியில் நரேந்திர மோடிக்கு தனது தலைமையை பரிசோதிக்க இதுபோன்றதொரு சோதனைக்காலத்தை சந்தித்திருக்கவில்லைதான். விரைவில் அந்த வைரஸ் மறைவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இது அவருக்கு முதலமைச்சர்களுடன் சேர்ந்து பணியாற்றி, இந்த நெருக்கடி மூலம், சீர்கெட்டுக்கிடக்கும் நமது சுகாதார கட்டமைப்புகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. சுகாதாரம் ஒரு முக்கிய அரசியல் பிரச்னையானவுடன், அது ஒரு பிரதமரை உருவாக்கும் அல்லது காலிசெய்யும்.

இக்கட்டுரையை எழுதியவர் தவ்லீன் சிங், இந்தியன் எக்ஸ்பிரசில் கருத்து கட்டுரை எழுதுபவர்.

தமிழில்: R.பிரியதர்சினி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Corona Corona Virus Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment