Advertisment

எந்த சூழலையும் சமாளிக்கக்கூடியவர்களாக மாணவர்களை பள்ளிகள் வளர்த்தெடுக்க வேண்டும்

Children mental health : நமது குழந்தைக்கு நாம் முழுமையான வளர்ச்சி வேண்டுமென்று விரும்பினால், வலுவான மற்றும் திறன் வாய்ந்த குடிமக்களை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona virus, lockdown, schools. children, india lockdown, coronavirus lockdown, coronavirus impact on schools, india schools reopen, students, children mental health, what schools should do, indian express opinion

அழகியல் தொடர்புடைய அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பது நமது பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும். அவை இசையை கேட்பது மற்றும் மற்ற கலை வடிவங்களை பாராட்டுவதாக இருக்க வேண்டும். அது இயற்கையுடனான உறவை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் எண்ணற்ற வெளிப்பாடுகளை பாராட்டவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருக்கும் மற்றொரு நல்ல செயல்பாடு ஆகும்.

Advertisment

சஞ்சய் டோத்ரே, கட்டுரையாளர்.

கடந்த சில மாதங்களாக இந்த கொரோனா வைரஸ் மனிதநேயத்தை தனது காலடியில் போட்டு வைத்துள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளைவிட, இந்த சூழ்நிலையை நாம் நன்றாகவே கையாண்டு வருகிறோம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த சிறிய உயிரினத்தின் பரவலை நாம் நன்றாகவே கட்டுப்படுத்தியுள்ளோம். நம்மைச்சுற்றியுள்ள உலகமும் வழக்கமாக இயங்கவில்லை. இந்த நோயால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பயம், பதற்றம் மற்றும் உணர்வுமயமான துன்பங்களும் அதிகரித்தே வருகிறது. அதில் அதிகளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மாணவர்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.

இன்றைய குழந்தைகள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் தனிக்குடும்ப அமைப்பு முறை பெருகியிருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும். மேலும், பெரும்பாலானோருக்கு உடன்பிறந்தவர்களே கிடையாது. சமூகத்துடன் இணைந்து வாழ்வதில் கட்டுப்பாடு, உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கம், போட்டி நிறைந்த வாழ்க்கையில் முன்கூட்டியே வளர்ச்சியை காட்ட கடுமையாக வெற்றியை மட்டுமே நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நிலை, பெற்றோரின் கவனக்குறைவு, கொடுமைப்படுத்துதல், வன்முறையான படங்களை பார்ப்பது போன்ற காரணங்களும் உள்ளன.

இதுபோன்ற பிரச்னைகளை அவரவரின் நிலைகளில் இருந்தே புரிந்துகொள்வதை சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு நாம் பள்ளிகளை வளர்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி கற்கும் திறனை பாராட்டி அதை வளர்த்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் நமது பள்ளிகள் தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும், தற்சார்புடையவர்களாகவும் வளர்த்து எடுப்பது அவசியமாகிறது. அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் குணத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். பள்ளி காலங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பாலினம், சமூக, பொருளாதா வர்க்க, இனம், மொழி, மாற்றுத்திறனாளி, பெற்றோரின் கல்வி போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வொரு குழந்தையும் சமமாக நடத்தப்பட வேண்டும். வேற்றுமையை கொண்டாட கற்றுக்கொடுக்க வேண்டும். பரந்த உலகத்தை அவர்கள் தெரிந்துகொள்வதற்கு அவை அவர்களுக்கு உதவவேண்டும். ஒன்று சேர்ந்து கற்பது மற்றும் ஆய்வு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். நமக்கு மட்டுமேயான போட்டி என்ற மனப்பான்மையை கட்டாயமாக தூக்கியெறிய வேண்டும். உயர்வானது என்பது சிறப்பானது என்பதன் அர்த்தமாக இருக்கக்கூடாது. அது மற்றவர்களை விலக்கியதை சுட்டிக்காட்ட வேண்டும். நமது பள்ளிகளும், பெற்றோரும் நமது குழந்தைகளை தற்சார்புடையவர்களாகவும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்.

அழகியல் தொடர்புடைய அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பது நமது பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும். அவை இசையை கேட்பது மற்றும் மற்ற கலை வடிவங்களை பாராட்டுவதாக இருக்க வேண்டும். அது இயற்கையுடனான உறவை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் எண்ணற்ற வெளிப்பாடுகளை பாராட்டவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருக்கும் மற்றொரு நல்ல செயல்பாடு ஆகும். தனிமையில் அமர்ந்து நல்ல புத்தகங்களை வாசிக்கும்போது, அவர்கள் பல்வேறு உலகங்களுக்கு சென்று வருகிறார்கள். பல்வேறு மனிதர்களின் அனுபவங்களுக்குள் பயணம் செய்து பார்க்கிறார்கள். பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு இடங்களிலும் நடந்தவற்றை அவர்கள் படிக்கும்போது, அவர்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருக்கும். இதனால் அவர்களின் கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றல் திறன் வளர்த்தெடுக்கப்படுவது உறுதி. யோகா மற்றும் விளையாட்டு ஆகியவை பள்ளி பாடத்தில் மிக முக்கியமானவையாகும். கவனத்துடன் இவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில், இவை குழந்தைகளின் உடல், உணர்வு மற்றும் மன நலன்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆன்மீக புத்தாக்கம் மற்றும் மறைந்திருக்கும் சக்திகளை நாம் நேர் முறையில் பயன்படுத்துவதில் யோகா தனித்துவமான பங்கு வகிக்கிறது. இங்கு கூறப்பட்டுள்ள அனைத்து பாடத்துடன் கூடுதலாக இவற்றை கற்பிப்பது குழந்தையிடம் சிறந்த குணநலன்களை வளர்க்கிறது. விடாமுயற்சி, கஷ்டமான தருணங்களில் இருந்து விரைவில் வெளியேறும் குணம், மன சமநிலை, விரைவான முடிவெடுக்கும் திறன், குழு உணர்வு மற்றும் தோல்வியை ஏற்கும் மனப்பாங்கு ஆகியவற்றை வளர்க்கிறது.

இந்த பாடத்திட்டங்களை துணையாக வைத்துக்கொள்வதற்கு, தீர்வுகளையும் நாம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஆலோசனை, இவற்றையெல்லாம் விட முதன்மையானது, பள்ளிக்காலத்தில் இதை முக்கியமானதாக கருதவேண்டும். மன அழுத்தத்தின் அறிகுறைகளையும், துவகத்திலேயே தனிமையை உணர்வதையும் உற்று கவனிக்க ஆலோசனை மிக அவசியமானது. இதனால், அதற்கான தீர்வுகள், குழந்தையின் மன நலனை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவும். இளமை கால பிரச்னைகள் மற்றும் எதிர்கால படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு ஆலோசனை மிக அவசியமான ஒன்று.

கல்வியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இந்த தொற்று காலத்தில் மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். கற்றல் – கற்பித்தல் செயல்முறையை தொடர்வதற்கு, கல்வி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வளங்களின் பயன்பாடு அதிமுக்கியம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கற்களால் ஆன வகுப்பறைகளையே தொழில்நுட்பம் மாற்றிவிடும் என்று சிலர் நம்பத்துவங்கிவிட்டனர். ஆனால் அது சாத்தியமல்ல. ஏனெனில், தொற்று காலத்தில், விர்சுவல் வழியாக மாணவர்கள் கற்கும்போது, அது ஏற்படுத்தும் மன அழுத்தத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். தொற்று ஏற்படுத்திய ஒட்டுமொத்த சூழல் மாற்றமும் அந்த மன அழுத்தத்திற்கு ஒரளவு காரணமாகலாம். முழுவதும் விர்சுவல் முறைக்கு மாற்றுவது, ஆரோக்கியமான கற்பித்தல் முறையில் சில முக்கிய அம்சங்களை கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளிடையே அது மன அழுத்தத்தை ஏற்படுத்தியதைப்போல் தெரிகிறது. விரைவில் அல்லது பின்னர், மனிதர்கள் வாழ்வார்கள், மனிதகுலம் மேம்படும். கொள்ளைநோய் ஒரு நாள் தகர்க்கப்படும். பின்னர் நாம் இரண்டும் கலந்த கற்றல் முறைக்கு மாறுவோம். வகுப்பறையிலும் கல்வி கற்பது மற்றும் மொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பது இரண்டும் தொடரும்.

தொழில்நுட்பம் கற்றல் – கற்பித்தலுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்க முடியும். ஆனால் பள்ளி எனப்படும் ஆரோக்கியமான கற்றல் சூழலுக்கு ஒருகாலும் மாற்றாக அமைய முடியாது. இந்த தொற்றுகாலத்தில், கல்வியில் தொழில்நுட்பத்தின் பயன், ஒரு அளவில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதிலிருந்து நாம் குழந்தைகள் மைய, தொழில்நுட்பமும் அடங்கிய பாடத்திட்டங்களை எதிர்காலத்திற்கு உருவாக்க வேண்டும். அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நமது கல்விக்கொள்கைக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பிரச்னைகளிலும் நமது கொள்கை ஒன்றாக உள்ளது. ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. நமது குழந்தைக்கு நாம் முழுமையான வளர்ச்சி வேண்டுமென்று விரும்பினால், வலுவான மற்றும் திறன் வாய்ந்த குடிமக்களை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த குறிக்கோள்களை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இதுபோன்ற தொற்றோ அல்லது மற்ற எந்த பிரச்னைகளோ ஒரே மாதிரி இருக்காது. எதிர்காலத்தில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையின் ஆழம் நமக்கு தெரியாது. ஆனாலும், நமது குழந்தைகள் உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நன்முறையில் வளர்க்கப்படவேண்டும். கடினமான சூழ்நிலைகளிலிருந்து எளிதில் மீண்டு வரக்கூடிய திறன் பெற்றவர்களாகவும், எந்த சூழலையும் சமாளிக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். சகோதர மனநிலையுடன், தற்சார்புடனும், தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியானவர்களாக நமது குழந்தைகள் வளர்ந்தார்கள் என்றால்தான் நாம், நிலையான மற்றும் இணக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இக்கட்டுரையை எழுதியவர் மத்திய மனிதவள மேம்பாடு. தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை இணை அமைச்சர்.

தமிழில் : R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Parenting Kids
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment