இந்திய – வளைகுடா, 2வது பெரிய இடப்பெயர்வு பகுதியை மூடக்கூடாது

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக குவைத்தில் முறையாக அதிகாரிகளிடம் பேசி, இந்தியர்கள் தடைக்கு பின்னர் நாடு திரும்புவதை எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

By: Updated: March 19, 2020, 07:30:17 PM

எஸ். இருதய ராஜன், எச். ஆரோக்கியராஜ்
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ஜரோப்பிய நாடுகளின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. இந்த தொற்றால், நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கு வெளியேயும் மக்கள் சென்று வருவது பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து வருபவர்களை தடுத்து வைத்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள், கொரோனா வைரஸ் தாக்கியுள்ள கிஷ் தீவில் சிக்கியுள்ளனர். அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு இந்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் கோவிட் – 19 தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்த இந்தியர்களை வெற்றிகரமாக அழைத்து வந்ததைபோல், இந்த மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவது பெரிய சவாலான ஒன்றுதான். இந்த இக்கட்டான நிலையில், இந்தியாவில் இருந்து குடியேறியிருப்பவர்களுக்கு பல மேற்காசிய நாடுகள் பயணத்தடை விதித்திருப்பது பரிதாபமாக உள்ளது. குவைத் விமான போக்குவரத்துத்துறை பொது நிர்வாகம், இரண்டு வாரங்களுக்கு இந்தியாவில் இருந்து எந்த விமானமும் வருவது மற்றும் செல்வது, இரண்டையும் நிறுத்தி வைத்துள்ளது. கத்தாரும், சவுதி அரேபியாவும் இந்திய பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு பயணத்தடையை விதித்துள்ளன. இந்த தடைக்காலம் முடிந்தவுடன் பயணிகள், தாங்கள் பணி செய்யும் நாடுகளுக்கு செல்ல வேண்டுமெனில், அதிகாரப்பூர்வமான மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ சான்றிதழ்கள் பெற்றுவரவேண்டும். இது வளைகுடா நாடுகளில் குடியேறியவர்களுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தும். இந்திய பயணிகள் குவைத் செல்ல விரும்பினால், அதற்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்க வேண்டியது மேற்காசிய நாடுகளின் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில்தான் பெறவேண்டும். பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட நோயாளிகளால் நிரம்பியிருக்கும். குவைத் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கோவிட் – 19 தொற்றை கண்டறியும் வசதிகள், குவைத் அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் அவர்களிடம் தனிமைப்படுத்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக குவைத்தில் முறையாக அதிகாரிகளிடம் பேசி, இந்தியர்கள் தடைக்கு பின்னர் நாடு திரும்புவதை எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குவைத் அரசு அங்கீகரித்துள்ள இந்திய மருத்துவமனைகளின் பட்டியலை பொதுவில் வெளியிட வேண்டும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்:

கத்தார் அரசின் பயணத்தடைக்கு பின்னர், நாட்டில் பல விமான நிறுவனங்கள் தோகாவுக்கு தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன. இந்திய – வளைகுடா நாடுகளுக்கு இடையிலான, விமான சேவைக்கான தேவை அதிகரித்துள்ளதால், பயணத்தடை நீங்கியவுடன், டிக்கெட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் சுமையாகும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் விமான நிறுவனங்கள், தங்கள் சமூக கடமையின் ஒரு பகுதியாக இலவச மறு முன்பதிவை அறிவிக்கலாம்.

இந்த பயணத்தடை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் இந்திய அரசின் பயணத்தடை குறித்த கலந்துரையாடல் நிறைந்து வழிகிறது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் மீது போடப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. அது அந்த நாடுகளில் இருந்து வரும் இந்தியா குடிமக்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றனர். இதுபோல் பல்வேறு நாடுகளை குறிப்பிட்டு செய்யப்படும் அறிவிப்புக்களை பிராந்திய மொழிகளிலும் வழங்கவேண்டும். ஆங்கிலத்தை தவிர அனைத்து மொழிகளிலும் தெரிவிப்பது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும், இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினரும் உதவியாக இருக்கும்.

இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள், அவர்கள் வருகைக்கு பின்னர், அதிக கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள். சர்வதேச பயணிகள் தங்கள் சுயவிளக்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கும், ஆவணங்களை சரிபார்ப்பதற்கும் விமான நிலையங்களில் அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்களில், கவுன்டர்களைப்பற்றிய குறைந்த அளவிலான தகவல்களே உள்ளன. அவை ஆவணங்களை சரிபார்க்க செல்வதற்கு முன்னால் இந்த சேவைகளை வழங்குகின்றன. இந்த குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, விமான நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பதையும், குழப்பத்தையும் தவிர்க்க வேண்டும்.

உலகிலேயே இந்திய – வளைகுடா, பிராந்தியம் தான் இரண்டாவது அதிகளவில் பயணிகள் சென்றுவரும் இடமாகும். எனவே இரண்டு அரசுகளும், இந்த பிராந்தியத்தில் கோவிட் – 19 பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக செய்யப்பட்டுள்ள, பயண கட்டுப்பாடுகள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும், நீண்ட நாட்கள் போக்குவரத்து தடைபடாத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ராஜன், திருவனந்தபுரம், வளர்ச்சி படிப்புகள் மையத்தின் பேராசிரியர் ஆவார்.

ஆரோக்கியராஜ், ஜெர்மனியில் உள்ள லெய்பினிஷ் அறிவியல் மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி நிபுணராக உள்ளார்.

தமிழில் : R.பிரியதர்சினி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 coronavirus gulf countries india gulf region 2nd largest migration corridor must not be blocked

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X