டயரிசம்: மகாத்மா காந்தி உருவாக்கிய சொற்றொடர் ஒரு குழுவைத் தாக்குவது ஏன்?

Dyerism Phrese coined by Mahatma Gandhi strikes a Group: ஜாலியன்வாலாபாக் படுகொலையை மகாத்மா காந்தி டயரிசம் என்று கூறினார். 1919 ஆம் ஆண்டில்...

டி.ராஜா, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Dyerism Phrase coined by Mahatma Gandhi strikes a Group:
1919 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ரௌலட் சட்டம் இந்தியர்களின் சிவில் உரிமைகளைப் பறித்தது. ஜாலியன் வாலாபாக்கில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில் போலீசார் இரக்கமற்ற முறையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். அந்த கொடூரமான படுகொலையை மகாத்மா காந்தி டயரிசம் என்று கூறினார். 1919 ஆம் ஆண்டில் சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலிருந்தும் தலித்துகளை ஒதுக்குவது உட்பட அனைத்துவிதமான விலக்குதல் நடைமுறைகளையும் குறிக்க அவர் இந்த சொல்லை பயன்படுத்தினார்.

பசுவின் பெயரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் டயரிசத்தின் வெளிப்பாடு என்று காந்தி கூறினார். கவலையளிக்கும்விதமாக இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக டயரிசத்தை பயன்படுத்துவதற்கான் திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சிகளை நாம் காண்கிறோம்.

விவாதம் மற்றும் ஆலோசனைகள் இல்லாமல் சரியான செயல்முறைகளைப் பின்பற்றாமல், மசோதாக்கள் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் கொடூரமான டயரிசத்தின் மறுமலர்ச்சியை தெளிவாகக் காட்டுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் வாதங்களுக்கு அரசாங்கம் போதிய மதிப்பளித்து, அது மசோதாக்களை இருதரப்பு அடிப்படையில் விவாதத்துக்காகவும் ஆலோசனைகளுக்காகவும் குழுக்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளுக்கு உரியதாகிறது என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றை அது மறுத்துள்ளது. அவையில் சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு பலவிதமான கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாததன் மூலம் 1917 மற்றும் 1919 ஆம் ஆண்டில் இருந்த பிரிட்டி ஆட்சியைவிட மோசமான ஆட்சி என்ற குற்றச்சாட்டுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுக்கிறது.

சம்பாரனில் மகாத்மா காந்தியின் சத்தியாகிரகத்தின்போது அவர் அங்குள்ள மக்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு அந்த இடத்துக்கு சென்றபோது பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்தது. இருப்பினும் அவர் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார். அவர் அங்குள்ள விவசாயிகள் மற்றும் அவர்களுடைய நிலங்களில் அவுரி சாயத்தை (Indigo) பயிரிட கட்டாயப்படுத்திய காலனிய தோட்ட உரிமையாளர்களுடனும் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டார். சத்தியாக்கிரகத்தின் விளைவாக காலனிய அரசு சம்பாரன் விவசாய மசோதா 1917-ஐ வடிவமைத்தது. அது அவுரி சாயத்தை கட்டாயமாக பயிரிடப்பட வேண்டும் என்பதை ஒழிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா பீகார் மற்றும் ஒரிசா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைகளைக் கோரினர். காலனிய ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த மசோதாவை மகாத்மா காந்தி மற்றும் பிற தலைவர்களுக்கு அனுப்பியது, அதை ஆராய்ந்து அதன் உள்ளடக்கங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டது. காந்தி பரிந்துரைத்த மாற்றங்கள் இணைக்கப்பட்ட பின்னர் இந்த மசோதா சட்டமாக மாறியது. தேசிய இயக்கம் காலனிய சட்டமன்றத்தை பொறுப்புகூறும்படி கட்டாயப்படுத்தியது. அப்படி பொறுப்புணர்வு கலாச்சாரம் மற்றும் மீளாய்வு சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்ற செயல்பாட்டின் இதயமாக மாறியது. மோடி அரசாங்கம் இந்த கலாச்சாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.

தேசிய புலனாய்வு முகமை (NIA), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தகவல் அறியும் உரிமைச் சட்டம் RTI மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு அமைப்பு மசோதா உட்பட பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் விரிவான விவாதமும் ஆலோசனையும் இன்றி நிறைவேற்றப்பட்டது கவலைக்குரியது. சர்ச்சைக்குரிய சட்டங்களை நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு அனுப்பும் நடைமுறை பின்பற்றப்படவில்லை.

எண்ணிக்கை பலத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பான்மைவாதம் ஒருபோதும் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கும் நாட்டை நிர்வகிப்பதற்கும் வழிகாட்டும் நெறியாக இருக்க முடியாது. உண்மையில், ஜம்மு-காஷ்மீருக்கு என்ன செய்யப்பட்டது என்பது கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிக்கு முரணாக உள்ளது. அவர் காஷ்மீரிகளைத் தழுவி அவர்களை வென்றெடுப்பதைப் பற்றிப் பேசினார். ஆனால், காஷ்மீரிகளை கட்டுப்படுத்துவதும், அப்பகுதியின் நிலையை ஒரு யூனியன் பிரதேசமாகக் குறைப்பதும் என்பது டயரிசத்தைத் தவிர வேறொன்றுமில்லை. நாடாளுமன்றத்தில் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து உரையாடல், விவாதம் மற்றும் மீளாய்வு அறிவிப்பு இல்லாதது கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது.

ஒரு அரசியலமைப்பு அவை விவாதத்தை இங்கே குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். டிசம்பர் 13, 1946-இல் அரசியலமைப்பு அவையில் ஒரு குறிக்கோள் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் இரண்டு முக்கியமான குழுக்கள் இல்லை. திருத்தங்களை மேற்கொள்ளலாமா அல்லது அரசியலமைப்பு உருவாக்கத்தை நிறுத்துவதா என்பது பற்றி ஒரு விவாதம் ஏற்பட்டது. அப்போது அம்பேத்கர் அளித்த ஒரு எச்சரிக்கை ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் என்ன செய்யப்பட்டது என்பதன் பின்னணியில் பொருத்தமாக இருக்கும். “அவ்வாறு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால், நான் கேட்கும் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு செய்வது விவேகமானதா? நீங்கள் அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானதா? அதிகாரம் என்பது ஒரு விஷயம். அறிவு என்பது மிகவும் வித்தியாசமான ஒரு விஷயம். சபை இந்த விவகாரத்தை இந்த கண்ணோட்டத்திலிருந்து கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த அரசியலமைப்பு சபையில் என்ன அதிகாரம் கொண்டுள்ளது என்பதல்ல. இந்த அவை இந்த விவகாரத்தை மற்றொரு கோணத்தில் இருந்து கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த கட்டத்தில் அவ்வாறு செய்வது என்பது விவேகமானதாக இருக்குமா இல்லாவிட்டால் அது அரசியல்வாதிதனமாக இருக்குமா இல்லாவிட்டால் அது பாதுகாப்பாந்தாக இருக்குமா என்பதே அது”

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா போதுமான ஆய்வு இல்லாமல் நிறைவேற்றப்படுவதும், காஷ்மீர் மக்களின் அனுமதியின்றி 35 ஏ பிரிவு ரத்து செய்வது மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது சரியானதா? பாதுகாப்பானதா? அரசியல்வாதித்தனமானதா?

முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அதன் மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்துவதில், அரசு குறைந்தபட்ச அரசாங்கம் மற்றும் அதிகபட்ச ஆளுகை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதாகத் தெரிகிறது. ஆனால், அது நாடாளுமன்றத்தை குறைந்தபட்ச நாடாளுமன்றமாக குறைத்துள்ளது. நாடாளுமன்றம் தேவையற்றதாக ஆக்கப்பட்டால், ஜனநாயகம் இறந்துவிடும். அதிபர் வடிவிலான விதிகள் உருவாக்கப்பட்டு வலிமையான மனிதர் அல்லது பாசிசம் என்று அழைக்கப்படுபவரின் ஆட்சி உருவாகும். அத்தகைய பேரழிவு இந்திய தேசத்தை தாக்குவதற்கு முன்பு ஜனநாயகம் மற்றும் அனைத்து குடிமக்களுக்கான நீதியை நம்பும் அரசியல் கட்சிகள் வலுவான எதிர்ப்பை முன்வைக்க வேண்டும்.

– தமிழில் பாலாஜி எல்லப்பன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close