Advertisment

பிரிவினையின்போது இஸ்லாமியர்கள் இந்தியாவை தேர்வு செய்தது தவறோ?

தவ்லீன் சிங்: 1947 இல் பிரிவினையின்போது பாகிஸ்தானை விட இந்தியாவில் குடியிருப்பதை விரும்பி தேர்ந்தெடுத்த முஸ்லிம்களுக்கு தாங்கள் ஒரு மோசமான தேர்வை செய்து விட்டோம் என்பதுதான் முஸ்லீம்களுக்கான செய்தியாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இந்தியராக இருப்பதை தேர்ந்தெடுத்ததை அவர்கள் அவசியம் இப்போது ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் அவர்கள் இப்போது இரண்டாம் தர குடிமக்களாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

author-image
WebDesk
New Update
பிரிவினையின்போது இஸ்லாமியர்கள் இந்தியாவை தேர்வு செய்தது தவறோ?

Tavleen Singh

Advertisment

ஞானவாபி மசூதி இந்துக் கோயிலின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்பதற்கு நமக்கு ஆதாரம் தேவையில்லை. கிருஷ்ணன் பிறந்ததாகச் சொல்லப்படும் சிறை அறைக்கு மேலே ஒரு இத்கா கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கும் நமக்கு ஆதாரம் தேவையில்லை. நாம் அனைவரும் திடீரென்று பைத்தியமாகிவிடவில்லை என்பதற்குத்தான் நமக்கு ஆதாரம் தேவை. 

நாம் அன்றாடம் கேட்கும் 'வரலாற்றின் தவறுகள்' பற்றிய வெறித்தனத்தை வைத்து நாம் தீர்ப்பளித்தால் இது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.

சங்பரிவாரத்தின் கூட்டாளிகளிடம் இருந்து மட்டுமல்ல, ஆங்கிலத்தில் பேசும் இழிவான மேல்தட்டு மக்களிடம் இருந்தும், இது பற்றி நரேந்திர மோடி ஒருமுறை 'கான் மார்க்கெட் கும்பல்' என்று இழிவாகப் புறந்தள்ளி பேசியுள்ளார். சிறிதும் வெட்கமின்றி ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த உயரடுக்கைச் சேர்ந்தவன் என்பதையும், முஸ்லிம்களை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்றும் இப்போது கொச்சைப்படுத்துகிற எத்தனை பேருடன் நான் வளர்ந்தேன் என்பதையும் கண்டு நான் வியப்படைகிறேன்.

அசிங்கமான உண்மை என்னவென்றால், வெறுப்பின் பேதை ஒருமுறை விடுவிக்கப்பட்டால், அதை அடக்குவது கடினம். எனவே, இனி வரலாற்றின் தவறுகளை சரிசெய்வதோ அல்லது பழங்கால கோவில்களை மீட்பதோ இனி இல்லை, முஸ்லிம்களை நாம் எவ்வளவு வெறுக்கிறோம் என்பதும், இஸ்லாம் எப்படி கொலைவெறியர்களை வளர்க்கும் மதம் என்பதும்தான். 'ஆக்கிரமிப்பாளர்கள்' மீதான வெறுப்பின் இந்த வெளிப்பாட்டில், இந்தியாவின் முஸ்லிம்கள் அனைவரும் ஜிஹாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்களின் கலாச்சாரம், மொழி மற்றும் சமமான குடிமக்கள் என்ற அந்தஸ்தை அழிப்பதே அவர்களுக்கான தண்டனையாகும்.

இது வெறுமனே, மசூதிகளை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக கோவில்கள் அமைக்கப்பட வேண்டும், நகரங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களும் இந்துமயமாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. தவிர அங்கே, உருதுவை அழிக்க அல்லது குறைந்த பட்சம் அது அந்நிய மொழி என்பதை நிரூபிப்பதற்கான  தீவிர பிரச்சாரமும் தொடங்கியுள்ளது. 1947 இல் பிரிவினையின்போது பாகிஸ்தானை விட இந்தியாவில் குடியிருப்பதை விரும்பி தேர்ந்தெடுத்த முஸ்லிம்களுக்கு தாங்கள் ஒரு மோசமான தேர்வை செய்து விட்டோம் என்பதுதான் முஸ்லீம்களுக்கான செய்தியாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இந்தியராக இருப்பதை தேர்ந்தெடுத்ததை அவர்கள் அவசியம் இப்போது ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் அவர்கள் இப்போது  இரண்டாம் தர குடிமக்களாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். 

இந்தச் செய்தி சமூக ஊடகங்களிலும் பிரைம் டைம் விவாதங்களிலும் ஆக்ரோஷமாக வெளியிடப்படுகிறது.வரலாற்றின் காயங்களைப் பற்றிய இந்த விவாதங்களில்,  பாஜக செய்தித் தொடர்பாளர்கள் 'ஆக்கிரமிப்பாளர்கள்' இந்தியாவின் அடையாளத்தை எவ்வாறு அழிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஆவேசமாகப் பேசுகிறார்கள்..

கடந்த வாரம் பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் கூறியதை வியப்புடன் கேட்டேன். .அல்லாமா இக்பாலின் மேற்கோளில் நேர் எதிர் பொருள் கொள்ளும் கருத்து இருப்பது தெரியாமல் அதனை மேற்கோள் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் (முஸ்லீம்கள் என்று படிக்கவும்) இந்தியாவின் 'ஹஸ்தி'யை அழிக்க நினைத்தார்கள் என்று 'குச் பாத் ஹை ஜோ ஹஸ்தி மிட்டி-தி நஹின் ஹமாரி' என்று கூறினார்.  இந்த வசனத்தில் கிரீஸ் மற்றும் ரோம் போன்ற பண்டைய நாகரிகங்கள் அழிந்துவிட்டன, ஆனால் வரலாற்றின் அலைகள் பல நூற்றாண்டுகளாக விரோதமாக இருந்தபோதிலும் இந்தியா தப்பிப்பிழைத்ததைப் பற்றி இக்பால் பேசுகிறார். வெறி மற்றும் வெறுப்பின் இந்த ஆரோக்கியமற்ற வாசனையில்  மறக்கப்பட்டது என்னவென்றால், முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தங்கி விட்டனர். அவர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. ஆங்கிலேயர்கள்தான் வெளியேறினார்கள், ஆனால் எப்படியோ ‘புதிய இந்தியாவில்’ ஆங்கிலேயர்கள் மன்னிக்கப்படுகிறார்கள்.

இறுதியாக கடந்த வாரம் பிரதமர் தனது மௌனத்தை கலைத்தார். ஒரு புதிரான உரையில், எதிர்க்கட்சிகள் சூழலில் ‘விஷத்தை செலுத்துவதற்கு சிறிய பதற்றமான சம்பவங்களை’ பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சாட்டினார். கடந்த மாதங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பும் வன்முறையும் ‘சிறிய சம்பவங்கள்’ என்று மோடி நம்பினால், தன்னையும் நாட்டையும் ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம். அவைகள் சிறியவை அல்ல.  எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லக் கூடாது.  ஒரே ஒரு எதிர்க்கட்சி மட்டுமே தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது, அது சரியான எதிர்க்கட்சியாக மாறக் கூட கற்றுக்கொள்ளவில்லை என்பதை உதய்பூரில் நடந்த ‘சிந்தன் ஷிவிர்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிரூபித்தது.

என்ன நடக்கிறது? பிரதமரே, முழுக்க முழுக்க உங்களுக்கும் உங்கள் கட்சியும்தான் காரணம். பயங்கரமாகப் பிளவுபட்டிருக்கும் நமது நாட்டில் அமைதியைக் கொண்டுவருவது உங்கள் கைகளில் உள்ளது. உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது. உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவை, இந்துக்கள் மீண்டும் கோயில்களாக மாற்ற விரும்பும் மசூதிகளின் பட்டியல் மற்றும் இதுவே முடிவு என்ற அறிவிப்பு. நீங்கள் தனிப்பட்ட முறையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க வேண்டும். அனைத்து விதமான நம்பிக்கைகளைக் கொண்ட மதத்தலைவர்கள், அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் ஒன்றாக அமர்ந்து பழைய காயங்களை மீண்டும் ஒவ்வொன்றாகத் திறக்கட்டும்.

பிரிவினை நடந்தபோது இதைச் செய்திருக்க வேண்டும், இன்றைக்கு நமக்கு அது மிக எளிதாக கிடைத்திருக்கிறது. ஆனால் ‘வரலாற்றின் தவறுகளை’ அது போன்ற ஆணையத்தில் ஆய்வு செய்யத் தொடங்கவில்லை.  பிரதமர் தனது ‘புதிய இந்தியா’ நன்றாக இருக்கிறது என்று நம்பலாம், ஆனால் அது உண்மையல்ல. இந்தியா நன்றாகச் செயல்படவில்லை என்பது மட்டுமல்ல, அது முற்றிலும் திசைதிருப்பப்பட்டு, முன்னோக்கி அல்ல, பின்னோக்கி, துரோகப் பிரதேசத்திற்குள் செல்லும் பெரும் ஆபத்தில் உள்ளது. நாம் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், மோடி நம்பும் வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

நாம் அந்த நாட்டிற்கு அருகில் கூட இருக்கவில்லை, அதற்குக் காரணம், 'வளர்ச்சியின் முக்கியப் பிரச்சினை' என்று மோடி சொல்வதை விடவும் கடந்த சில ஆண்டுகளில் சங்பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரல், முதன்மை பெற்றுள்ளது. அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் தலைமைக்கு அழைக்கப்படும் போது அவர்கள் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டியது இப்போது நமக்குத் தேவை. தலைமைத்துவம் மிகவும் அவசரமாக இருந்த காலத்தை நினைவில் கொள்வது கடினம்

சமய மற்றும் அரசியல் தலைவர்கள் உடனடியாக மாற்றத்தையும் மற்றும் நல்லிணக்க செயல்முறையை தொடங்க வேண்டும். இது வெறுமனே பழங்காலத்தின் காயங்கள் மட்டும் குணமடைய வேண்டும் என்பதல்ல.   மிக சமீபத்திய காலங்களில் ஏற்படுத்தப்பட்ட  காயங்கள். வெறுப்பும் குணம் பெற வேண்டும். 

வன்முறையையும் வெறுப்பையும் தொடர்ந்து பரப்புபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இந்தப் பாதையில் தொடர்ந்தால், அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யபடுவர்  என்று எச்சரிக்கப்பட வேண்டும். அவர்கள்தான் இந்தியாவின் உண்மையான ‘துக்டே-துக்டே’ கும்பல். அவர்கள் மிகவும் மோசமான நேரத்தில் தீமையை மட்டுமே செய்கிறார்கள்.

தமிழில்; ரமணி

Mosque
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment