Advertisment

கொரோனா தொற்று இல்லாத எதிர்காலம் சாத்தியமில்லை

ராஜேஷ் எம் பரிக்; கு்றிப்பிட்ட தொற்று நோயியல் இலக்குகளை அடைவதைவிடவும், தொற்றுநோயின் முடிவு சமூக வாழ்க்கையின் மீட்சியாகவே பார்க்கப்படும் என்பதை வரலாறு காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
கொரோனா தொற்று இல்லாத எதிர்காலம் சாத்தியமில்லை

நம்மிடம் துல்லியமான கால‍ அட்டவணை இல்லை. ஆனால் கடந்த கால நோய் தொற்றுகள் அதிர்ச்சியூட்டும் தடயங்களை வழங்குகின்றன. பரந்த அளவிலான டேஷ்போர்டுகளை உபயோகிக்கும்போது, அனைத்து டேஷ்போர்டுகளின் குறிகாட்டிகளும் பூஜ்யத்தை(நோய்தொற்று, பாதித்தோர் எண்ணிக்கை, இறந்தோர் எண்ணிக்கை) காண்பிக்கும், அனைத்து நோய் தொற்றும் முடிவுக்கு வந்து விடும் என்ற உணர்வை உருவாக்குகிறது. எனினும், இது மிகவும் சாத்தியமற்ற விளைவு என்று வரலாறு கூறுகிறது.

கடந்த 130 ஆண்டுகளில், வைரஸ் பரவலால் தூண்டி விடப்பட்ட ஆண்டு பருவகால அலைகளாக சுவாச தொற்று நோய்கள் தொடர்ந்து வருகின்றன. இது பொதுவாக அடுத்த பெருந்தொற்று வரை நீடிக்கிறது. எது குறைகிறதோ, அது மீண்டும் மேலே வரும். அலைகள் என்ற வார்த்தையானது, 1989ம் ஆண்டு ரஷ்யாவில் ஃப்ளூ பெருந்தொற்றின்போது முதலில் பயன்படுத்தப்பட்டது. ஒரு பெருந்தொற்றின் போது தொற்று பரவலின் முறையை குறிப்பிடுவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவில் ஃப்ளூவானது இரண்டாவது கட்டத்தில் மிகவும் தீவிரமாக பரவியது, பல கட்டங்களாக உயர்ந்தது. மூன்று ஆண்டுகள் நீடித்தது.

1918-20ம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ப்ளூ பரவலின் போது மூன்று முறை உச்சம்தொட்டதாக இருந்தது. இது 1918ம் ஆண்டு ஒரு சிறிய அலையாகத் தொடங்கியது. கோடைகாலத்தின்போது இது தணிந்தது. ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு உச்சம் தொட்டதைத் தொடர்ந்து 1918ம் ஆண்டு இலையுதிர் காலத்தின்போது ஒரு பெரும் அளவிலான உச்சம் தொட்டது. 1919ம் ஆண்டின் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் போது மூன்றாவது பரவலின் உச்சமானது ஏற்பட்டது. பெருந்தொற்று முடியப்போவதற்கான அறிகுறியாக இருந்தது. தோராயமாக 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 100 மில்லியன் மக்கள் தொற்றால் உயிரிழந்தனர். தொற்றானது தணிந்தது என்றாலும், வைரஸ் முற்றிலும் அகலவில்லை. ஸ்பானிஷ் ஃப்ளூவின் வழித்தோன்றலான சமகாலத்தின் எச்1என்1 என்ற தொற்றானது இன்றும் கூடபரவி வருகிறது.

Advertisment

தொற்று பரவல் முறையை தீர்மானிப்பதில் தனிப்பட்ட அல்லது பல்வேறு அம்சங்கள் இணைந்த பல்வேறு காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சில தொற்றுகள் பருவகாலத்தில் தோன்றும் பருவகால தொற்று முறையைத் தொடர்ந்து அலைகள் தொடர்ந்து வரும். மனிதர்களின் பழக்க வழக்கங்கள், தொடர்புகள் வைரஸ் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் பருவமழை காலங்களின்போது, பெரும் கூட்டம் காரணமாக பூச்சிகளின் மூலம் பரவும்(டெங்கு, மலேரியா) தொற்றுகள் அதிகரிக்கப்பது பொதுவான அம்சமாக இருக்கிறது. வாழ்க்கை முறை விருப்பங்களும் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடைகாலம், குளிர் காலங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்போது சமூக தொடர்பு சங்கிலிகள் குறையும்போது காய்ச்சல் பரவல் குறைந்து காணப்படுகிறது.

மூன்றாவது காரணியாக, தொற்று பரவலின் நோய் தாக்கம் சமூகத்தின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலையை பொறுத்து பரவுகிறது. பெரும்பாலான தனிநபர்கள் நோய் தொற்று காரணமாக அல்லது தடுப்பூசி காரணமாக எதிர்ப்பு சக்தியை பெறுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் நோய் தொற்றாத நபர்களுக்கும் பாதுகாப்பாகவே இருக்கின்றனர். இதனால், நோய் தொற்று பரவல் தாக்கம் குறைகிறது. மேலும் புதிதாக தொற்றக் கூடிய நபர் இல்லாதபோது வைரஸ் பரவல் தடுக்கப்படுகிறது.

முந்தைய கொரோனா வைரஸின் (சார்ஸ் - கோவ் -1, மற்றும் MERS- கோவ்)தொற்று நோயியல் சார்ஸ் - கோவ் -2-வில் இருந்து குறிப்பிட்டத்தக்க வகையில் மாறுபடுகிறது. ஆகவே இத்தகைய நோய்காரணிகள், கொரோனா பெருந்தொற்றின் எதிர்காலம் குறித்து கணிப்பதற்கு உதவாது. இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்கள், நமது நல்ல ஒப்புமைக்கு உரிய மாதிரியாக இருக்கின்றன. 1700களின் தொடக்கத்தில் இருந்து எட்டு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஏழு தொற்று நோய்கள் ஆரம்ப கட்ட உச்சத்தின்போது, சில மாதங்கள் எந்த ஒரு முக்கியமான எதிர்வினையும் இன்றி விலகிச் சென்றன. இதனைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆரம்ப கட்ட உச்சத்தில் இந்த ஏழு பெருந்தொற்றுகள் இரண்டாவதாக கணிசமான உச்சத்தைத் தொட்ட அனுபவம் கொண்டிருந்தன. ஆரம்ப கட்ட தொற்று அலைகளுக்குப் பின்னர், சில தொற்றுநோய்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சிறிய அளவிலான அலையை வெளிப்படுத்தின. 1968 ஆம் ஆண்டு தொற்றுநோய் மட்டுமே மிகவும் உன்னதமான இன்ஃப்ளூயன்ஸா போன்ற பருவகால முறையைப் பின்பற்றியது, தாமதமான இலையுதிர்காலம்/குளிர்கால உச்சம் மற்றும் அடுத்த குளிர்காலத்தில் இரண்டாவது உச்சமும் ஏற்பட்டது.இரண்டாவது ஆண்டில் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பெருந்தொற்று தொடர்பான இறப்பு விகிதம் அதிகரித்ததை பார்க்கமுடிந்தது.

இந்த தொற்று நோய்களின் போக்கானது, தடுப்பூசியின் மூலம் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தவில்லை. 1918ம் ஆண்டில் ஃப்ளூ தடுப்பூசி ஏதும் இல்லை. 1957ம் ஆண்டு எச்2என்2 பெருந்தொற்று உலக அளவில் பரவத் தொடங்கியபோது, ராணுவத்தில் ஃப்ளூ தடுப்பூசி முதன்மையாக உபயோகிக்கப்பட்டது. 1968ம் ஆண்டு எச்3என்2 பெருந்தொற்றின் போது 22 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அமெரிக்கா முன்னெடுத்தது. ஆனால், இந்த தடுப்பூசி வரும்போது பெருந்தொற்று பரவலானது மிகவும் குறைந்து விட்டது. இன்னும் கூட தடுப்பூசிகள், உடல்நல பாதுகாப்பில் ஏற்படும் சுமையை மற்றும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள் தொகையினர் மற்றும் வைரஸ் மாறுதலின் கலவையானது குறைவான தொற்று மற்றும் தீவிரமானது கடந்த கால தொற்றுநோய்களின் இறுதி முடிவுக்கு வழிவகுக்கிறது. பொதுவாக, வைரஸ் வெறுமனே முற்றிலும் போய்விடாது. 1900ம் ஆண்டில் இருந்து அடுத்தடுத்து வந்த மூன்று பெருந்தொற்றுகளில், இன்ஃப்ளூயன்ஸா ஏ திரிபாக மாறி மனிதர்களை அதிகமாக தொற்றும் அளவுக்கு மாறியது. இறுதியில் ஆதிக்கம் செலுத்தும் பருவகாலத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆக இடம்பெயர்ந்தது.1918ம் ஆண்டு வைரஸில் இருந்து இறங்கிய வைரஸ்கள் இன்ஃப்ளூயன்ஸா ஏ-வின் கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளையும் அதே போல அதனைத் தொடர்ந்து வந்த ஃப்ளூ நோய்தொற்றுகளையும் ஏற்படுத்தியது. பருவகால காய்ச்சலால் ஒவ்வொரு ஆண்டும் 6,50,000 பேர் இறக்கின்றனர்.

சார்ஸ் - கோவ் -2 பெரும்பாலும் பல இடங்களில் தோன்றும் தொற்றாக மாறுகிறது. மனிதர்களிடையே தொடர்ந்து பரவி வருகிறது. இதர குறைவான தாக்கம் கொண்ட கொரோனா வைரஸ் நோய் கிருமிகள்போல, குறிப்பிட்ட காலத்துக்கு குறைவான நோய் தாக்கத்துடன் ஓசி43, 229இ, என்எல்63 மற்றும் எச்கேயூ1போன்றவை போல பருவகால தொற்று முறையோடு இணைந்து இருக்கும். கடந்தகால காய்ச்சல் தொற்று வைரஸ் போல செயல்படும்.

தடுப்பூசி மூலம் அல்லது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியானது வயது வந்தோர் தொகையில் எதிர்ப்பு சக்தியை முன்னெடுக்கும் மற்றும் லேசான உடல்நலக்கோளாறை மட்டும் எற்படுத்தும் என்பது சாத்தியமான சூழல்களில் ஒன்றாகும். சார்ஸ் - கோவ் -2-வானது முதன்மையாக இளம் சிறார்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு அநேகமாக லேசான நோய் தொற்றே இருக்கும். சார்ஸ் - கோவ் -2-க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் காலமானது இயற்கையாகவும் மற்றும் தடுப்பூசி மூலமாகவும் இருக்குமா என்பது இன்னும் நிச்சயமாக தெரியவில்லை. கொரோனா தொற்று தாக்குதலுக்கு உட்பட்ட தனிநபர்களிடம் 6 முதல் 8 மாதங்களுக்குப் பிறகு, நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவு குறைவதைக் காட்டுகிறது.எனினும், அவர்களது உடல்கள் மெமரி பி செல்களை உற்பத்தி செய்யும் மறுதொற்று நிகழ்வின்போது அவைகள் ஆன்டிபாடிகளை முன்னெடுக்கக் கூடும். அவர்களின் உடல்கள் உற்பத்தி செய்யும் டி செல்கள் வைரஸ் தாக்கிய செல்களை கொல்ல முடியும்.

சார்ஸ் - கோவ் -2 காட்டு விலங்குகளிடம் பரவுமா இல்லையா என்பதை பொறுத்தே அதன் அடர்த்தி தீர்மானிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகள், விலங்குகளிடம் தேங்கியிருந்து மீண்டும் மனிதர்களிடம் தொற்ற அனுமதிப்பதால் தொடர்ந்து நீடித்திருக்கின்றன. மஞ்சள் காமாலை, எபோலா மற்றும் சிக்கன் குனியா ஆகிய வைரஸ்களை இந்த தொற்றுகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். பூனைகள், முயல்கள், வெள்ளெலிகள் உள்ளிட்ட பெரும்பாலான விலங்குகள் சார்ஸ் - கோவ் -2-வால் எளிதாக பாதிக்கப்படக் கூடியவையாகும். குறிப்பாக மிங்க் என்ற வகை விலங்கானது சார்ஸ் - கோவ் -2-வால் எளிதால் பாதிக்கப்படக் கூடியதாகும். டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் மிங்க் பண்ணைகளில் பெருந்தொற்று பரவியது.

ஒமிக்கிரான், பல்வேறு நாடுகளில் சீரான பரவலான வகையாக மாறியிருக்கிறது. அதன் மாதிரி ஆய்வில், அமெரிக்காவில் உள்ள கொரோனா சினாரியோ மாடலிங் ஹப் கணிப்பின் படி, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்க அலையை ஏற்படுத்தும் என்றும், இதற்கு முன்பு டெல்டா வகை கொரோனா பரவல் அலையின் அமெரிக்கா முழுவதுமான பாதிப்பைவிட இது அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டது. அதன்படி தொற்று அலை கணிசமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. மருத்துவமனை சிகிச்சை மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு ஒமிக்கிரான் தாக்கம் எப்படி இருக்கும் என்பதில் போதுமான தெளிவில்லை.

அதே போல முதன்மையான, இரண்டாவது அலையைப் போல தீவிரமானதாக இருக்குமா என்பதும் தெரியவில்லை. டெல்டா வகை தொற்று மற்றும் அதற்கு முந்தைய தொற்று வகையோடு ஒப்பிடும்போது ஒமிக்கிரான் தொற்று மேம்பாடு அடைந்த ஒன்றா என்பதும் தெரியவில்லை. ஒமிக்கிரான் தொடர்புடைய தீவிரம் எங்கே குறைந்திருக்கிறது என்பதை பொருட்படுத்தாமல், கடுமை குறையாத நோயாளிகளின் எண்ணிக்கை, எதிர்பார்க்கப்படுவதை குறிக்கிறது, தொடர்புடைய குறைந்த தாக்கம் கொண்ட ஒமிக்கிரான் வகை தொற்று கூட பெருமளவில் இல்லாவிட்டாலும் கூட, ஏற்கனவை அதிக சுமையோடு இருக்கும் சுகாதார அமைப்புகளுக்கு கணிசமான சுமையைத் தருவதாக இருக்கும். ஓமிக்ரான் பரவலை நோக்கிய ஒரு படியா அல்லது அதிலிருந்து விலகி உள்ளதா என்பதை நாம் இன்னும் பார்க்கவில்லை.

சார்ஸ் - கோவ் -2 ஒழிப்புக்கான இலக்கு நம்பிக்கை கடந்து விட்டது. பெருந்தொற்று சூழலுக்கு பின்னதான ஒரு மாறுதல் முறையானது, கொரோனா தொற்று அற்ற ஒன்றாக இருக்காது. அடிப்படையில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் உலகில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கோவிட்-19 அளவை வரையறுப்பதே சவாலாகும்.

ஒரு பெருந்தொற்று முடிவின் தொற்றுநோயியல் பண்புகள், சர்வதேச அளவில் வரையறுக்கப்படவில்லை. முந்தைய சுவாச தொற்றுகளின் முடிவுகள் பொதுவாக தெளிவற்றதாக இருக்கும் என்று விளக்குகின்றன. குறிப்பிட்ட தொற்றுநோயியல் இலக்குகளை அடைவதை விட, அந்த தொற்று நோயின் முடிவானது சமூக வாழ்க்கையின் மீட்சியாக பார்க்கப்படுகிறது. பெருந்தொற்றின் முடிவானது, தொற்று பரவல் எண்ணிக்கையின் குறைவை குறிப்பதல்ல. ஆனால், அதைவிடவும் பொதுமக்களின் கண்களுக்கும், ஊடகங்களின் பகுத்தறிவுக்கும், நமது கவனத்தையும் கருத்துக்களையும் வடிவமைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அந்த செய்தி தகுதியானதல்ல என்று தெரியும்போது தொற்று குறையும். ஒரு தொற்றுநோயின் முடிவு உயிரியலைக் காட்டிலும் வாழ்ந்த அனுபவத்தைப் பற்றிய கவலையாக உள்ளது, இது ஒரு மருத்துவ நிகழ்வு என்பதற்கு மாறாக, சமூகமாக ஆக்குகிறது.

இந்த கட்டுரையின் எழுத்தாளர் மும்பை, ஜாஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கௌரவ. நரம்பியல் மனநல மருத்துவராவார். கொரோனா வைரஸ்: உலகளாவிய தொற்றுநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (The Coronavirus: What You Need To Know About The Global Pandemic)என்ற புத்தகத்தை இன்னொரு எழுத்தாளருடன் இணைந்து எழுதியுள்ளார்.

தமிழில்; ஆகேறன்

Corona Virus Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment