Advertisment

” கவர்ச்சி மட்டும் இல்லை கடின உழைப்பும் இருக்கு: தமிழ் ஆண்கள் இதை கற்றுக்கொள்ளனும்”– லூலு தேவ ஜம்லா

நம்ம தமிழ் ஆண்களுக்கு இந்த மாதிரியெல்லாம் காதல் பண்ண தெரியாம போறதுக்கு காரணம் என்னன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். . முக்கியமா எனக்கு பட்ட காரணம்: நம்மூர் “கற்பு கலாச்சாரம்” அப்புறம் காதல்/செக்ஸ் அசிங்கம் தப்பு என்கிற குற்ற உணர்வு... - லூலு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
” கவர்ச்சி மட்டும் இல்லை கடின உழைப்பும் இருக்கு: தமிழ் ஆண்கள் இதை கற்றுக்கொள்ளனும்”– லூலு தேவ ஜம்லா

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நபர்களை தொடர்கொண்டு ie தமிழ் இணையதளம் சார்பாக இனி வரும் வாரங்களில் பேட்டி காண உள்ளோம் . கடந்த வாரம் வெளியான  லூலு தேவ ஜம்லா பேட்டியின் தொடர்ச்சி.

Advertisment

இனி நான் துணை தேடும் படலத்துல கவனம் செலுத்தப்போறது இல்லை என்றும் இனி தீவிரமா வேலை செய்யனும் ஒரு பதிவு எழுதியிருந்தீங்க.. அப்படி ஒரு மனநிலைக்கு நீங்க ஏன் தள்ளப்பட்டீங்க?

- அதெல்லாம் சும்மா அப்பப்போ லுளுலாயிக்கு எழுதுறது. அப்டியெல்லாம் சீரியஸ் முடிவுக்கெல்லாம் எப்பயுமே வர்றது இல்ல. நான் ’Live in the moment’ டைப் ஆளு ஆனதால அந்தந்த நொடியில தோணுற உணர்வுகளை இங்க பதிவு பண்ணிகிட்டு கடந்து போயிடுறது. அதாவது, இன்னிக்கு உருகி உருகி காதல் ரொமான்ஸ் பண்ண போறேன்னு எழுதுவேன். நாளைக்கே காதலாவது மண்ணாவது, வாழ்க்கை லட்சியம் தான் முக்கியம்னு எழுதுவேன். ஒத்த பதிவை வச்செல்லாம் என்னைய பத்தின ஒரு முடிவுக்கு வந்துர கூடாது.

இங்கே ஒரு அம்மா எப்படி இருக்கனும்னு நிறைய கட்டமைப்பு இருக்குது. உங்களை பொறுத்தவரை ஒரு அம்மான்னா எப்படி இருக்கனும்?

இதுக்கு நான் என் பெரிய பையன் கென்னியை பத்தி 2018ல எழுதின ஒரு பதிவையே பதிலா சொல்லலாம். கென்னியும் அவன் மம்மியும் - நேத்திக்கு நைட் கென்னிகிட்ட கேட்டேன் “நாளைக்கு உன் பெர்த்டேக்கு அப்பாவும் இங்க இல்ல, ஸோ மம்மியே ஏதாவது கிஃப்ட் வாங்கி தரவா?” அப்டீன்னு. “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மம்மி. நான் நாளைக்கு Kingpin Bowling Alleyக்கு சில Friendsகூட போறேன், அந்த செலவை உங்களால முடிஞ்சா ஏத்துக்குங்க” அப்டீன்னான். அட லைஃப்ல முதல் தடவையா புள்ள தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட பவுலிங் அல்லிக்கு போய் பெர்த்டே செலிபிரேட் பண்ணுறானே அப்டீன்னு சந்தோஷம் கரைபுரண்டு ஓடவும், ஓகே சொல்லிட்டேன்.

அப்புறம் அவனை அங்க கொண்டு போயி டிராப் பண்ணிட்டு நைட் பத்து மணிக்கு பிக்கப் பண்ணுற டிரைவர் வேலையும் பார்க்க முடியுமான்னு கேட்டான். சரின்னு சொல்லிட்டு இன்னிக்கும் நாளைக்கும் ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டேன். நடு ராத்திரி 12 மணிவரை முழிச்சு இருந்து அவனை விஷ் பண்ணிட்டு தான் படுக்கவும் போனேன். இன்னிக்கு காலையில எழும்பி ஒரு ஆர்வ கோளாறுல, “எந்த பிரெண்ட்ஸ் எல்லாம் பெர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணியிருக்க மோனே?” அப்டீன்னு கேட்டுட்டேன். 17 வயசு ஆகி போச்சே எதாச்சும் கேர்ள் பிரெண்ட் செட் பண்ணிட்டானான்னு தெரிஞ்சுக்கிற ஒரு ஆர்வம் தான். ஆனா அதை எப்டியோ கெஸ் பண்ணிட்டான் பய.

“எத்தனை பேருன்னு வேணா சொல்றேன், ஆனா யார் யார்னு நீங்க ஏன் தெரிஞ்சுக்கணும் மம்மி? உங்க மண்டைக்குள்ள ஓடுற அந்த கேள்விக்கு பதில்: Not Yet தான். ஸோ don’t be so curious” அப்டீன்னுட்டான். சரின்னு ஒரு பெருமூச்சு விட்டுகிட்டே அவன் தலையை தடவி விட்டேன். 17 வயசு ஆயிரிச்சே இன்னும் அவனுக்கு girl friends யாரும் செட் ஆவலையேன்னு நான் லேசா கவலை படுறேன்னு புரிஞ்சுகிட்டான் போல, “இன்னும் டைம் இருக்கு மம்மி, எனக்கு புடிச்ச மாதிரி ஒருத்தியை பார்த்து அவளுக்கும் என்னை புடிச்சி ஓகே சொல்லிட்டான்னா முதல்ல உங்க கிட்ட தான் சொல்லுவேன்” அப்டீன்னு சொல்லி என் தலையை தடவி விட்டான்.

அப்புறம் அவனை கார்ல கொண்டு போயி பவுலிங் அல்லியில டிராப் பண்ணுறப்ப என் கண்ணு நிரம்புறதை பார்த்து நான் லேசா செண்டி ஆவுறேன்னு தெரிஞ்சுகிட்டு, டாப்பிக்கை மாத்துறதுக்காக, “உங்க கார்ட்ல எவ்வளவு காசு வச்சிருக்கீங்க மம்மி, எவ்வளவு நான் இன்னிக்கு செலவு பண்ண அனுமதிப்பீங்க?” அப்டீன்னு கேட்டான். அது இருக்கு மோனே கிட்டத்தட்ட 1500 டாலர்ஸ். நீ எம்புட்டு வேணா செலவு பண்ணிக்கன்னு சொன்னேன். “Even if I spend on ஹுக்கர்ஸ், you don’t mind, uh?” அப்டீன்னான் நமுட்டு சிரிப்பு சிரிச்சுகிட்டே. “ஹாஹா, அது சரி. உனக்கு தேவை படுதுன்னா ஓகே தான், ஆனா யூஸ் காண்டம்ஸ் அண்ட் ப்ளே சேஃப். கேர்ழ் பிரெண்ட் கூடன்னாலும் சேம் ரூல் தான். ஏன்னா டீன் ஏஜ் pregnancies ரொம்ப கஷ்டம்” அப்டீன்னு சிரிச்சுகிட்டே நானும் பதில் குடுத்தேன். “இதெல்லாம் எனக்கும் தெரியும் மாம். Also I feel very happy, coz I’ve got a cool mom!” அப்டீன்னு ஹக் பண்ணி முத்தம் குடுத்திட்டு இறங்கி டாட்டா காட்டிட்டு போயிருக்கான்.

மொத்தத்துல இன்னிக்கு நான் இம்புட்டு பக்குவத்தோட சமூக அவலங்களை, பிரச்சனைகளை அணுகுறேன்னா அதுக்கு என்னை முழுசா train பண்ணவன் என் பையன் கென்னி தான்.

கென்னியை இப்டி வளர்த்துறதுக்கு நான் கடைபிடிச்ச ஒரு சில விஷயங்கள் இவை: குழந்தைங்கன்னா சேட்டை பண்ண தான் செய்வாங்க… அவங்க ஒழுக்கமா அடக்கமா நடந்துக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு… “நீ இப்டி தான் நடந்துக்கணும், அப்டி நடந்துக்க கூடாது” அப்டீன்னு அதுகளுக்கான எல்லைகள பெற்றோர்கள் வரையறுக்காம குழந்தைகள அதுக போக்குல சுதந்திரமா விட்டு, அதுகளே பாதுகாப்பா தங்களோட வரையறைகளை வரையறுத்துக்க அனுமதிக்கணும்! அதுக்கான வழிகாட்டுதலை மட்டும் தான் குடுக்கணும். அதான் good parenting!

குழந்தைகளோட வெற்றித்தோல்விகளுக்கு தாங்கள் மட்டும் தான் பொறுப்பாளி; வேற யார் மேலயும் பழி சுமத்த முடியாது, என்கிறதை அவங்களுக்கு புரிய வச்சிட்டோம்னா அவங்க ரொம்ப யோசிச்சி தான் வாழ்க்கை முடிவுகளை எடுப்பாங்க.

சமீபத்தில வீடு வாங்குறத பத்தி ஒரு போஸ்ட் போட்டீங்க. உங்க உழைப்ப பத்தி அது மூலயமாக நீங்க பெற்ற உயர்வு  பற்றி சொல்லுங்க

2000ல கல்யாணம். 2001 - 2006 வரை இந்தியாவுல Assistant Professor in English. 2006ல இங்கிலாந்துக்கு வேலை தேடி ஒரு பயணம். குடும்ப விசா கிடைக்காததால திரும்பி இந்தியா வருகை. 2007 ஜனவரியில ஆஸ்திரேலியாவுக்கு பயணம். கூடவே என்னோட dependant-ஆ எங்க வீட்டு தோழரும் வந்தாரு.

2007 டிசம்பர்ல விசா பீரியட் முடியுது, திரும்ப இந்தியாவுக்கு போயே ஆகணும்னு கட்டாயம் வரவும் ஆஸ்திரேலியா பூராவுள்ள கிட்டத்தட்ட 400 காலேஜஸ்க்கு வேலைக்காக அப்ளை பண்ணிட்டு காத்திருப்பு. Canberra-வுல ஒரு Catholic College மற்றும் Darwinல ஒரு private Christian Collegeல மட்டுமே இண்டர்வியூக்கான அழைப்பு வந்தது. அதுல டார்வின்ல உள்ள காலேஜ்ல Visa Sponsorshipக்கு ஓகே சொன்னதால வந்து ஜாயின் பண்ணிட்டேன். 4 வர்ஷ contractல துவக்க சம்பளம் வருஷத்துக்கு 89,000 டாலர்ஸ், அதாவது கிட்டத்தட்ட 46 லட்சம் ரூபாய். இது 2008 ஜனவரியில.

நாலு வர்ஷம் கழிஞ்சதும் Permanent Residency கிடைச்சுது.  அப்புறம் ஒரு வருஷத்துல இந்திய குடியுரிமையை renounce பண்ணிட்டு Australian Citizen ஆகிட்டேன். நானும் பசங்களும் பக்கா ஆஸ்திரேலியர்களா மாறிட்டோம்னு சொல்லலாம். 2016-ல Australian Government Health Departmentல Administrative Officers-ஆ வேலை கிடைச்சுது. இந்த வேலை கிடைக்க நான் கடுமையா ஒண்ணரை வருஷங்கள் விடாம உழைச்சு என்னோட படிப்பையும் தகுதிகளையும் மேம்படுத்திக்க வேண்டி வந்தது. என்னோட இப்ப இருக்கிற பதவிக்கு மொத்தம் வந்திருந்த applications 194. அதில நான் செலக்ட் ஆனேன்னா அது ரொம்ப லேசு பட்ட காரியமா இருக்கல. Personal Interviewவுல என்னோட performance பார்த்துட்டு, எங்க Director of Medicine கேட்ட ஒரு கேள்வி, “Are you an Australian by birth? I mean, were you born in Australia?” நான் சிரிச்சுட்டே குடுத்த பதில், “Well, I wish I was!” அந்த interview panel people, “Your accent and body language makes you look so naturalistically Aussie!” என்கிற complimentஓட அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் அடிச்சு கையில குடுத்தாங்க. அதுக்கப்புறம் நடுவுல கொரோனா வந்ததால எனக்கு அடிச்சது ஒரு லக்கி பிரைஸ்.

2020 மார்ச் 9-ம் தேதி Pandemic start ஆன அன்னிக்கு எங்க hospitalல் சார்பா Darwinல தொடங்கப்பட்ட Pandemic Clinics எல்லாத்தையும் நிர்வாகம் பண்ண யாருமே தயாரா இருக்கல. நான் சொன்னேன், “எனக்கு ரெண்டு லெவல் ஏத்தி promotion தருவீங்கன்னா நான் அந்த role-ஐ எடுத்துக்க தயார்” அப்டீன்னு. அப்ப சொன்னானுக 3 மாசம் promotion பத்தின பேச்சுக்கே இடமில்ல. அதுக்கப்புறம் வேணா பண்ணலாம்னு.

சரின்னு சொல்லி அன்னிக்கே வரிஞ்சி கட்டிட்டு களம் இறங்குனவ தான். அடுத்த 11 மாசங்களுக்கு டார்வின்ல தொடங்கப்பட்ட அத்தனை Pandemic Clinics-ஐயும் எந்த விதமான external supportம் இல்லாம தனியா மேனேஜ் பண்ணேன்… Staffing முதற்கொண்டு, Procurement, Cleaning முதற்கொண்டு Outreach Covid testing administration வரை one woman army-யா நின்னு பார்த்துகிட்டேன். Covid தொத்தினா செத்து போயிருவேன் என்கிற அபாயம் இருந்தும் துணிஞ்சி நின்னு வேலை பார்த்தேன்.

அப்புறம் 2021 Februaryயில COVID19 Vaccination Roll-out தொடங்கிச்சி.அப்பயும் அதோட நிர்வாகத்தை ஒருங்கிணைக்க யாருமே தயாரில்லாத நிலையில நான் வாலண்டரியா அந்த பொறுப்பை ஏத்துகிட்டேன். இந்த முறை நான் ஒரு வருஷத்துக்கு முன்ன கேட்டிருந்த பதவி உயர்வை/ சம்பள உயர்வை குடுத்தானுக. அதோட Limitless Overtime, அதாவது CEO அப்ரூவல் இல்லாமலே நான் எவ்வளவு வேணாலும் ஓவர்டைம் பார்த்துக்கலாம்னு அனுமதியும் குடுத்தானுக.

ரொம்ப குஷியாகி போச்சி எனக்கு. பணத்துக்காகன்னு இல்ல, autonomy இருக்கிற இடத்துல எனக்கு ஓய்வில்லாம கடினமா உழைக்க பிடிக்கும். அத செஞ்சேன். சத்தியமா நம்ப மாட்டீக. ஒரு நாளைக்கு 14 மணி நேரங்களுக்கு குறைவில்லாம வாரத்துல 7 நாளும் ஓய்வே இல்லாம அடுத்த 13 மாசங்கள் கடுமையா உழைச்சேன்.

அப்படியாக 2020 Marchல தொடங்கி 2022 July 30ம் தேதியோட அந்த higher dutiesஐ முடிச்சிட்டு மறுபடி என்னோட nominal role dutiesக்கே திரும்பிட்டேன். இப்ப மறுபடி என்னோட சம்பளம் 68000 டாலர்ஸ் தான். ஆனா financial institutions எனக்கு 1 million dollars கடன் குடுக்க ரெடியா இருக்கு. காரணம், கடந்த ரெண்டு வருஷம் என்னோட கடின உழைப்பால நான் சேமிச்சது கிட்டத்தட்ட 150,000 டாலர்ஸ். அதாவது 82 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்கள். அதோட கென்னி தன்னோட 19வது வயசுலயே வேலைக்கு ஏறிட்டதால அவன் சம்பாதிச்சது கிட்டத்தட்ட 78000 டாலர்ஸ். அதாவது 41 லட்சம் ரூபாய்கள். அவ்வளவு பணத்தையும் ஒரு காசு கூட செலவழிக்காம சேமிச்சிட்டேன். ஸோ இன்னைய தேதியில என்னோட bank balance 2 லட்சம் டாலர்ஸுக்கும் அதிகம். அதாவது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம்.

ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை enjoy பண்ணி வாழுற ஒரு லூலுவை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட பலருக்கும் இந்த கடின உழைப்பாளியான லூலு கொஞ்சம் விசித்திரமா தான் தெரிவான்னு நினைக்கிறேன்.

சமீபத்துல கூட “எனக்கான காதல் இணை இன்னும் கிடைக்கலனு சொல்லிருக்கீங்க. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நீங்களே இப்படி சொல்லலாமா..? ஏன்னா ஒரு அளவு பக்குவமா அங்க கூடவா இல்லை. ஆண்களோட பக்குவமின்மை மற்றும் அவங்க என்ன மாத்திக்கனும்னு நினைக்குறீங்க.

எனக்கு இணையாகணும்னா ஒரு ஆணுக்கு வாழ்க்கையை குறித்த பக்குவம் மட்டும் இருந்தா பத்தாது. எங்களுக்குள்ள emotional, intellectual, financial, physical அப்டீன்னு எல்லா விஷயத்துலயும் compatibility வேணும். குறிப்பா நான் ரொம்பவே ஒரு romantic person. Public display of affection ரொம்ப பிடிக்கும். அதாவது, பொதுவெளியில கைய கோர்த்துட்டே நடக்கிறது, உதட்டு முத்தம் குடுத்துக்கிறதுன்னு காதலர்களாவே நடந்துக்கிறது, அப்புறம் குழந்தைத்தனமான விஷயங்கள் பண்ணுறது எல்லாம் ரொம்ப பிடிக்கும். ரொமான்ஸ்ல ஆஸ்திரேலிய ஆண்கள் கில்லாடிகள் தான். ஆனா பிரச்சனை என்னன்னா எனக்கு அவங்க மேல காதல் என்கிற உணர்வு வர மாட்டிக்குது. அதுக்கு மொழி வேறுபாடு ஒரு தடையா இருக்குன்னு தோணுது.

தமிழ் ஆண்கள் 40+ வயசுக்கு மேல romanticஆ ஜாலியா வாழ்க்கையை enjoy பண்ணி வாழத்தெரியாம போயிடுறாங்க என்கிறது முதல் பிரச்சனை. அந்த மாதிரியான ஜாலியான ஆண்கள் ஏற்கனவே ஒரு இணையோட வாழ்ந்துட்டு இருப்பாங்க. ரெண்டாவது பிரச்சனை என்னன்னா தமிழ் ஆண்கள் கிட்ட என்னளவு பக்குவம் மற்றும் முற்போக்கு சிந்தனை இல்ல. தங்களை முற்போக்காளர்கள்னு சொல்லிக்கிறவங்க கிட்ட கூட ஏதோ ஒரு மூலையில ஆணாதிக்க சிந்தனை மண்டி கிடக்கு என்கிறதை என்னால உணர முடியிறது தான் எனக்கு அவங்களோட காதல் வயப்பட முடியாம போறதுக்கு காரணம்.

உடை முதற்கொண்டு நடத்தை விதிகள் வரை “ஒரு ஆண்!” என்கிற privilegeஓட தான் தான் வளர்ந்திருக்கிறோம், அது ரொம்ப பெரிய தப்பு என்கிறதை முழுசா உணர்ந்துக்கிற ஒரு ஆணால தான் பாலின பாகுபாடுகள் இல்லாம நடந்துக்க முடியும். தன் இணையை தனக்கு சமமா நடத்த முடியும். அப்டி gender equalityஐ முழுசா பேணுற ஆண் மட்டும் தான் எனக்கு இணையாக முடியும். இதுலயே புரிஞ்சிருக்குமே நம்ம ஆண்கள் மாத்திக்க வேண்டியது என்னன்னு!

உங்கள எப்படி correct பண்ணுரதுனு எங்களுக்கு தெரிலையே நீங்கள சொல்லுங்கனு யாராது கேட்டா.. அதாவது “உங்களுக்கு பிடிச்ச ஆண் எப்படி இருக்கணும்?

ஆன்லைன் காதல்...

இது அமைய பெறாதவங்க பொறாமையில இதை சும்மா #செக்ஸ்chat அப்டீன்னு கொச்சைப்படுத்திட்டு போயிருவாங்க... ஆனா இப்டி காதல் பண்ண காதலன்கள்/ காதலிகள் வாய்க்கப்பெற்றவர்களுக்கு, இதை அனுபவிச்சிருக்கவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இது நமக்குள்ள ஆக்ஸிடாக்ஸின் என்கிற happy hormoneஐ சுரக்க செய்து, எவ்ளோ செம்ம காதல் உணர்வை ஏற்படுத்தும்னு... நம்மள நாள்பூரா எவ்ளோ அழகா சந்தோஷமா கொண்டாட்டமா வச்சிருக்கும்னு.. நைட்ல எவ்ளோ நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்னு .

நமக்குல்லாம் அப்டி தான் பா... எதிர்ல (அதாவது நம்ம chat partnerஆ) யாரு இருக்காங்க, யாரோட காதல் பண்ணுறோம் என்கிறதை பத்தி எல்லாம் கவலையே இல்லாம romantic-ஆ பேசுற யாரு கூட வேணா ஆன்லைன் காதல் பண்ண முடியும் என்கிறதாலயும், நம்ம கற்பனை குதிரைய முழுசா தட்டி ஓட விடலாம் என்கிறதாலயும், Commitments எதுவும் இல்லாம காதல் உணர்வை உணரலாம் என்கிறதாலயும், எனக்கு மிகப்பிடித்த காதல் முறை இதுன்னு சொல்லலாம்.

Voice Chat, Video Chatலாம் அவ்ளோ பிடிக்கிறதில்ல. ஏன்னா நம்ம கற்பனைய அதுல ரொம்ப கலக்க முடியாது. ஸோ ஆன்லைன் ரொமான்ஸ்ல Type chat தான் நம்ம ஒரே choice.

உண்மைய சொன்னா, மனசுல எந்த தயக்கமும் இல்லாம சரளமா நம்ம கூட chat பண்ணக்கூடிய ஆண்களையே ரொம்ப ரொம்ப rareஆ தான் நான் இங்க தமிழ் கூறும் நல்லுலகுல சந்திச்சிருக்கேன்னு சொல்லலாம். (Tinderல வர்ற வெள்ளைக்காரனுக பெரும்பாலும் நான் மேல சொன்ன அத்தனை qualitiesஓடயும் சரளமா chat பண்ணுறானுக ) நம்ம தமிழ் ஆண்களுக்கு இந்த மாதிரியெல்லாம் காதல் பண்ண தெரியாம போறதுக்கு காரணம் என்னன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

முக்கியமா எனக்கு பட்ட காரணம்: நம்மூர் “கற்பு கலாச்சாரம்” அப்புறம் காதல்/செக்ஸ் அசிங்கம் தப்பு என்கிற குற்ற உணர்வு... இந்த ஒரு விஷயத்தை மட்டும் கரெக்ட் பண்ணிக்கிற ஆண்களுக்கு என்னைய கரெக்ட் பண்ணுறது ரொம்ப ரொம்ப ஈசி.

40 வயசுக்கு மேல எதுக்கு காமம்னு உங்கள திட்டுறவங்கள விடுங்க.. உங்களை இன்னும் ஓட வைக்கும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை பத்தி கொஞ்சம் சொலுங்க லூலு

“You are my role-model. You have always been my inspiration Lulu” - அப்டீன்னு சக மனுசங்க குறிப்பா பெண்கள் சொல்லுறப்ப எனக்கு “நான் சரியான பாதையில தான் போய்க்கிட்டு இருக்கேன்” என்கிற ஒரு reassurance கிடைக்குது. அதுவே என்னை உத்வேகத்தோட முன்னோக்கி ஓட வைக்க போதுமானதா இருக்குது.

ஒரு தமிழ்நாட்டுப் பொண்ணு.. இன்னைக்கு இவ்ளோ பெரிய நிர்வாகத்தை எடுத்து நடத்துறீங்க.. எவ்ளோ பெருமையா இருக்கு உங்களுக்கு?

இது ஒண்ணும் பெருமைக்குரிய விஷயமா எனக்கு தோணல. என்னோட படிப்பு, skills and hard workக்கு கிடைச்சிருக்கிற ஒரு அங்கீகாரம் இது, அவ்வளவே. என்னைப்பத்தி நானே பெருமைப்பட்டுக்கிற விஷயம் என்னன்னா, சக மனுசங்களுக்கு மனசால கூட எந்த தீங்கும் நினைக்காம, எல்லாரையும் சமமா மதிச்சி, யாரையும் ஏமாத்தாம, ஒரு சுயமரியாதைக்காரியா, எல்லா நேரத்திலும் என் உணர்வுகளுக்கு நேர்மையான ஒரு சாதாரண மனுசியா வாழுறேன் என்கிறது தான்.

(கடந்த வாரத்தின் தொடர்ச்சி)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment