Advertisment

பாஜக மற்றும் மோடிக்கு மாற்று என்பது உண்மையிலேயே இல்லையா?

அண்மைகால வரலாற்றின் ஞாபகமறதியாக, இங்கே எந்த ஒரு மாற்றும் இல்லை என்ற பிடிவாதமாக மறுக்கப்படும் பிண்ணனியில் அவநம்பிக்கை இருக்கிறது.

author-image
WebDesk
New Update
பாஜக மற்றும் மோடிக்கு மாற்று என்பது உண்மையிலேயே இல்லையா?

Pratap Bhanu Mehta 

Advertisment

Is there really no alternative to BJP and Modi? : பிரதமர், பிரிவினை என்ற விதையை விதைக்கிறார். விஷமத்தனமான பேச்சை பாதுகாக்கிறார். முரண்பாடான பொது சமூகமானது, வெறுப்பினை ஆவேசத்துடன் கட்டவிழ்த்து விடுகிறது. இது மட்டுமே அவரை தகுதியற்றவராக ஆக்கிறது. ஆனால், அவருக்கு மாற்று இல்லை என்ற பல்லவி தொடர்ந்து பாடப்படுகிறது.

வலுவான தேச பாதுகாப்பை வாக்குறுதியாகத் தந்த பிரதமர் இருக்கிறார். ஆனால், அதன் பலனோ, பிராந்திய ரீதியிலான அணுகலை இழப்பதாக இருக்கிறது. ஆனால் போதுமான திறன் இன்றி நில எல்லையில் கட்டுண்ட மற்றும் இருமுனைபோருக்கான சூழல் நிலவுகிறது. சீனா குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பக் கூட அனுமதி இல்லாத தேசத்தில் இந்த நம்பிக்கை நிலவுகிறது. அங்கே அவருக்கு மாற்று இல்லை என்ற கோரஸ் ஆன பல்லவி இன்னும் பாடப்படுகிறது.

வலுவான உள்நாட்டு பாதுகாப்பு என்ற வாக்குறுதியை அளித்த பிரதமர் இருந்தார். உண்மையில் இந்த இலக்கு மட்டுமே அடையப்பட்டது. இப்போது அனைத்தெரசா தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வழக்கறிஞர்கள், பல்வேறு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை கட்டுப்படுத்த முடியும். இந்த நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நமக்கு தெரியும். அவருக்கு மாற்று இல்லை என்று நாங்கள் உங்களிடம் சொல்ல செய்தோமா?

நமது எல்லையோர மாநிலங்களை பாதுகாப்போம் என்ற வாக்குறுதி அளித்த பிரதமர் ஒருவர் இருந்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முதன் முறையாக, பஞ்சாப்பில் வன்முறை பிசாசு தலைதூக்கியிருக்கிறது என அரசே ஒப்புக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின் ஆதாயங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. காஷ்மீரில் ஆழமான அந்நியப்படுதல் மற்றும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால், எங்களிடம் வேறு மாற்று இல்லை என்ற பல்லவி அதிகரித்திருக்கிறது.

பங்கு வர்த்தகத்தை அதிகரிக்க செய்த பிரதமர் இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் பதவியில் இருந்த அரசுகளைப் போலவே, அவரது அரசும் சில திட்டங்களை நன்றாக செயல்படுத்தியது. மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் பத்து சதவிகிதம் பேர் உண்மையில் செழிப்படைந்தனர். ஆனால், நாம் இன்னும் 2003-09ம் ஆண்டு காலக்கட்டத்தின் வளர்ச்சி விகிதத்தின் பாணியை அடையவில்லை. வறுமையில் திளைப்போரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சம உரிமை இன்மை மற்றும் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி செயல்பாடுகள் நடுத்தர அளவில் இருக்கின்றன. 1991ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டோம் எனில் நவம்பரில் மொத்த விலை பணவீக்க விகிதம் 14.3 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்த அரசின் ஆட்சிகாலம் ஏழு ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட, முந்தைய அரசின் தவறாகவோ அல்லது அமெரிக்க மத்திய வங்கியின் தவறாகவோதான் அது இருக்கிறது. எந்த ஒரு மாற்றும் இல்லை என்ற குரல்கள் ஒலிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஊழல் நடைமுறைகளை குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் இருந்தார். மூலதனச் செறிவு அதிகரித்தாலும், தேர்தல் நிதியை ஆளும் விதிமுறைகள் பின்னடைவைக் கட்டுப்படுத்தும் போதும், சரியான சித்தாந்தத்திற்கு அவர்கள் தலை வணங்கும் வரை, சில மூலதனம் மற்றவர்களை விட சமமானது என்ற சமிக்ஞையை அனுப்ப அரசின் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை நீங்கள் குறைவான ஊழலை பார்க்கலாம்.அதனை பற்றி பேசவோ அல்லது பார்க்கவோ அனுமதிக்காத வரை அரசானது மிகவும் திறன்வாய்ந்ததாக இருக்கும். அதனால்தான் அங்கே மாற்று இல்லை என்ற பல்லவி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அது தொடர்ந்து செல்லும் வரை, ஒவ்வொரு தனி அமைப்பும் அழிக்கப்படும். எனினும், மாற்று இல்லை என்று சொல்லப்படுவதை நீங்கள் பார்க்கலாம். இந்து மதத்தின் தார்மீக மற்றும் ஆன்மீக மீளுருவாக்கத்துக்குப்பதில் நீங்கள் அதன் இருண்ட மற்றும் கொடூரமான வகுப்புவாத தூண்டுதல்களை வெளிப்படுத்துகிறீர்கள். ஆனாலும் இன்னும், அங்கே மாற்று இல்லை என்று சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மறந்து விடுங்கள். இந்திய ஜனநாயகத்தின் விரிவான கவுரவம், அதன் கலாசாரம், அதன் எதிர்கால நம்பிக்கைகள் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளாக மிக சரிந்த நிலையில் உள்ளன. ஆனால், ஜெர்மன் ஹிட்லர் ஆட்சியின் பாசிசவாதிகளைப் போல உருவாக்கப்பட்ட அமைப்புகளால் இந்த உலகத்தை நம்ப வைக்க முடியும். உங்கள் சொந்த மக்களை நீங்கள் எவ்வளவு அதிகமாக அடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் உலகளாவிய பங்கு உயரும் என்று அவர்கள் உங்கள் சொந்த தலைவரை நம்ப வைத்திருக்கலாம்.உண்மையில், அதற்கு மாற்று இல்லை. அரசானது ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணர்தலை உருவாக்குகிறது. ஒவ்வொருவரையும் அது உளவு பார்க்க முடியும், யார் ஒருவரையும் அது அச்சுறுத்த முடியும் தகவல் உத்தரவுகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஆனால், ஆனால், அதற்கு மாற்று இல்லை என்ற பல்லவி இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது.

எல்லா பல்லவிகளையும் போல அங்கே மாற்று இல்லை என்ற பல்லவியும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் சில குடிமக்கள் திட்டங்களின் பயனாளிகளாகவோ அல்லது நலன்களை பெற்றவர்களாகவோ இருக்கலாம் என்பதை உடனடியாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த‍ அரசின் உண்மையான சாதனை என்பது இந்த அரசாங்கத்தின் செயல்திறனுக்கான காரணம் வெகு தொலைவில் உள்ளது. சில பகுதிகளில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒப்புக் கொண்டாலும் கூட, குடியரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அடித்தளத்தின் வழிபாட்டு மன்றத்தின் முன்பு, அந்த வெற்றியை மங்கச் செய்கிறது.

மாற்று இல்லை என்ற பல்லவியானது, எதிர்கட்சிகளின் நடத்தைக்கு உதவுவதாக இருக்கும். கடந்த கால தவறுகள் எனும் பிரச்னைகளை காங்கிரஸ் கட்சியால் தூக்கி எறியமுடியவில்லை. எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் நிறுவன நன்னடத்தையின் சரியான மாதிரிகளாகவோ அல்லது தாராளவாத மற்றும் ஜனநாயக விழுமியங்களின் கொள்கை ரீதியான பாதுகாவலர்களாகவோ இருப்பதில்லை. இந்த இரட்டைத் தன்மைதான் பெரும்பாலும் எதிர்கட்சிகளை காயப்படுத்துகிறது. இன்னொருபுறம் ஒரு இருத்தியல் நெருக்கடியை இந்திய குடியரானது எதிர்கொள்கிறது என்பதை அது கூற விரும்புகிறது. மற்றொருபுறம், குடியரசிற்கு இருத்தலியல் நெருக்கடி இருப்பது போல் செயல்படவில்லை.அது குடியரை பாதுகாக்கும் நோக்கத்தை சுற்றி ஒன்றுபடவில்லை. தூக்கி எறிய வேண்டிய உள்ளுக்குள் இருக்கும் உட்பூசல்களில் அதன் உணர்வுகள் செலவழிக்கப்படுகின்றன. பழைய ஆட்சியாளர்கள் புதிய ஆட்சியாளர்கள் உருவாவதை அனுமதிப்பதில்லை. ஆனால் இதையெல்லாம் நாம் ஒப்புக்கொண்டாலும், இந்த ஆட்சியாளர்களுக்கு மாற்று இல்லை என்ற எண்ணம் அபத்தமானது.

இந்த யோசனை சமீபத்திய வரலாற்றைப் பற்றிய ஒரு மகத்தான மறதியை அடிப்படையாகக் கொண்டது: கூட்டணி அரசியல்களின் செயல்திறன், சீர்த்திருத்தத்தின் சிக்கலான தன்மைகள் ஆகியவை இந்த நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் மென்மையான ரத்த நாளங்களாகும். அப்படியில்லை என்றால், ஒரு ஜனநாயகமானது ஆழ்ந்த வகுப்புவாதம் மற்றும் அடக்குமுறையை எதிர்கொண்டிருக்கும். அரசியல் போட்டி மற்றும் அதிகாரத்தின் சிறிய துண்டாடுதல் தானே மாற்றாக இருக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பானதாக்க குறைந்த அதிகாரம் மற்றும் அதிக போட்டியுடன் எதிர்கட்சியின் ஒவ்வொரு அங்கத்தினரும் முழு ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இதற்கு மாற்று இல்லை. இந்த பரந்த பல்லவியின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று ஒருவர் கவலைப்படலாம். இந்த பல்லவி இந்த மூன்று விஷயங்களின் அறிகுறியாக இருக்கக் கூடும்; வெற்றுப் பார்வையில் ஆபத்துக்களை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியாவின் உயரடுக்குகளை கற்பனைவாதத்தில் சிக்கவைக்கும் அரசியலின் அழகியல், கதாநாயக வழிபாட்டின் முன்னெடுப்பில் சிந்தனையின் இடைநிறுத்தமாக எளிமைப்படுத்தப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அல்லது, "மாற்று எதுவும் இல்லை" என்பது வெறும் சொற்பொழிவாக இருக்கலாம். நாங்கள் வகுப்புவாத விஷம் மற்றும் எதேச்சாதிகார அடக்குமுறையால் நன்றாக இருக்கிறோம் என்று வேறுவிதமாக சொல்வதாக இருக்கலாம். தற்போதைய போக்கு பேரழிவை நோக்கிச் செல்லும் போது, "மாற்று வழியில்லை" என்று நீங்கள் கூறினால், நீங்கள் எதார்த்தத்தை விவரிக்கவில்லை. ஏற்கனவே இறந்து விட்ட ஒரு ஜனநாயகத்துக்கு மாற்று வழியில்லை என்று ஜனநாயகத்தை வெறுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள்.

இந்த பத்தி முதலில் 2021ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதியன்று அச்சு வடிவில் There is no alternativeஎன்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் பங்களிப்பு ஆசிரியராக இருக்கிறார்.

தமிழில் ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment