Advertisment

அடூர் கோபாலகிருஷ்ணன்: மகாத்மா காந்தியிடமிருந்து விலகிச் செல்கிறோம்

Turning away from Mahatma: நம்முடைய நினைவு அவ்வளவு குறுகியதா? காந்திஜியின் ஆன்மீக வழிகாட்டுதல் இல்லாத இந்தியாவைப் பற்றி சிந்திக்க முடியுமா? அவர் தலைமை தாங்கி போராடிய இந்திய சுதந்திர இயக்கத்திற்கு வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahatma gandhi, gandhi's role in freedom, mahatma gandhi's assassination, mohandas karamchand, Tamil, Mahatma Gandhi assassination, Mahatma Gandhi commemorate celebrate, மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள், மகாத்மா காந்தி, அடூர் கோபாலகிருஷ்ணன், Those who denigrate his legacy today must answer, Is it possible to imagine India without Gandhi? filmmaker Adoor Gopalakrishnan, Tamil indian express

mahatma gandhi, gandhi's role in freedom, mahatma gandhi's assassination, mohandas karamchand, Tamil, Mahatma Gandhi assassination, Mahatma Gandhi commemorate celebrate, மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள், மகாத்மா காந்தி, அடூர் கோபாலகிருஷ்ணன், Those who denigrate his legacy today must answer, Is it possible to imagine India without Gandhi? filmmaker Adoor Gopalakrishnan, Tamil indian express

அடூர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

Advertisment

தமிழ்நாடு காந்தி கிராம் நிறுவனத்தில் படித்தவர்,

Turning away from Mahatma: இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தியின் படுகொலையை நினைவுகூரும் நாளில் ஒரு பெண்ணின் தலைமையிலான ஒரு குழு காந்திஜியின் பெரிய கட் அவுட்டுக்கு முன் நின்றனர். அந்த பெண் ஒரு ஏர் கன் துப்பாக்கியைப் பயன்படுத்தி அந்தப் படத்தை குறிவைத்து வெற்று பரப்பில் சுட்டார். அது நாதுராம் கோட்சே செய்த உண்மையான படுகொலையை நினைவூட்டியது. பின்னர், குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அதையே செய்தனர். இதைதொடர்ந்து அந்த நிகழ்வு வருடாந்திர நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் நம்பமுடியாத வீடியோ கிளிப்பைப் பார்த்து அது நாடு முழுவதும் பரப்பப்பட்டதால் என் இதயம் நொறுங்கியது. தேசத்தின் தந்தைக்கு அவமரியாதை மற்றும் அவதூறு விளைவிக்கும் தீவிர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்ட விரோத செயலுக்காக பிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று என் அப்பாவி மனம் கற்பனை செய்யத் தொடங்கியது.

திருவனந்தபுரத்தில் நம்மில் சிலர் அரசு செயலகத்தின் முன்பு ஒன்றுகூடிய பின்னர், அவமதிப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு கேமராவில் படம்பிடிக்கப்பட்டு அனைவரின் நுகர்வுக்காகவும் அது சுற்றுக்கு விடப்பட்டதால், எங்கள் தோழர்கள் காந்திஜியிடம் மன்னிப்பு கோருவதற்காக நாட்டு மக்களின் நன்றியுணர்வுக்காக ஒரு கூட்டத்தை நடத்தினார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய தீவிரமான நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் தங்களுடைய வழியின் தவறை அடையாளம் காண்பார்கள் என்று நாங்கள் நம்புவது மிகவும் தவறானது: இதேபோன்ற தீவிரமான நம்பிக்கைகளைக் கொண்ட மற்றொரு பெண் மக்களவைக்கு வியக்க வைக்கும் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்திஜி, ஒரு நாள், அவர் போராடி இறந்த இந்த நாட்டில் தீமை மற்றும் வெறுப்பின் பொருளாக மாற முடியும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்: காந்தியின் 150வது பிறந்த நாளை உலகெங்கிலும் உள்ள நகரங்களின் சதுக்கங்களில் அவருடைய சிலைகள் நிறுவப்படுகிறது. தெருக்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்படுகிறது இந்த கொண்டாட்டங்களுக்கு எதிராகத்தான் இந்த நடவடிக்கைகள் காணப்படுகிறது.

நம்முடைய நினைவு அவ்வளவு குறுகியதா? காந்திஜியின் ஆன்மீக வழிகாட்டுதல் இல்லாத இந்தியாவைப் பற்றி சிந்திக்க முடியுமா? அவர் தலைமை தாங்கி போராடிய இந்திய சுதந்திர இயக்கத்திற்கு வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லை. பிரிட்டிஷ் ராஜ் போன்ற வலிமைமிக்க சாம்ராஜ்யத்திற்கு எதிரான அகிம்சை மற்றும் ஒத்துழையாமை ஆயுதங்களுடன் போராடியதால் அது குறிப்பாக காவியத் தன்மையைக் கொண்டது. காந்தியின் போராட்டத்தில் இந்தியர் என்று நினைக்கும் ஒவ்வொரு பெருமையையும் ஆதரவையும் ஈடுபாட்டையும் பெற முடியும். காலனித்துவத்திலிருந்து விடுபடுவது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிறப்புரிமை என்று அவர் அறிவித்தார்.

அவர் அத்தகைய முழுமையான சிக்கனமான மற்றும் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்தார். பார்த்த எவரும் கற்றுக் கொள்ள முடியும். ஊக்கம் பெற்றிருக்க முடியும். காந்திஜி அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தி என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் அவர் கூறியது மற்றும் கடைப்பிடித்தது குறித்து இரட்டைத்தன்மை இல்லை. அவருடைய சுயசரிதையான சத்திய சோதனை ஒரு அகச் சிந்தனையாளர் எவ்வாறு தடைகளை முறியடித்தார் என்பதற்கும் அவரை எவ்வாறு நேர்மையும் கடைபிடித்த தனிப்பட்ட விழுமியங்களும் சமூகத்துக்காகவோ அல்லது அவருடைய நாட்டுக்காகவோ போராட பயப்படாத ஒரு நபராக மாற்றியமைத்தது என்பதற்கும் சான்றாக உள்ளார்.

பகைமைக்கும் வெறுப்புக்கும் அவர் மனதில் இடமில்லை. ஆங்கிலேயர்களுடனான ஒவ்வொரு கடினமான மோதலிலும், வன்முறை முனைப்புடன் மத வெறியர்களின் மத்தியில் சிக்கும்போது கூட, எந்தவொரு பொய்யையும் கோபத்தையும் மனசாட்சியைத் தூய்மைப்படுத்த அவர் சத்தியாக்கிரகத்தை நாடினார்.

அவர் ஒரு பக்தியுள்ள இந்து. அவர் எப்போதும் மற்ற மதங்களுடன் இதயப் பூர்வமான நல்லுறவு இருப்பதை நம்பினார். அவர் தான் ஒரு இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் என்று ஒரே நேரத்தில் வலியுறுத்தினார். அவர் கிறித்துவம் மற்றும் இஸ்லாமிலிருந்து படிப்பினைகளையும் சீக்கியம், சமணம் பௌத்தம் போன்ற நெருக்கமான வீடுகளிலிருந்து நம்பிக்கைகளையும் பெற்றார். இந்த மதங்களை அவர் சனாதன தர்மத்தைப் பின்தொடர்வதற்கு விரோதமானதாக ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் அத்தியாவசிய இந்தியராக இருந்தார்.

காந்திஜியின் விருப்பமான இந்து கடவுள் ராமர். ஆனால் அவர், ஒரு திறமையான அரசியல்வாதியாகவும், சிக்கலான உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரும் தந்திரோபாயம் மிக்கவராகவும் இருந்த கிருஷ்ணரால் மிகவும் செல்வாக்கு பெற்றவர் என்று நான் நினைக்கிறேன்: காந்திஜியின் ஆளுமை இந்த இரண்டு புராண புருஷங்களின் தனித்துவமான கலவையாகும். இல்லையென்றால், நாம் சுதந்திரம் அடையும் வரை அவர் ஆங்கிலேயர்களுடன் இவ்வளவு நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க முடியாது. முதலாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பது குறித்து காந்திஜி எடுத்த நிலைப்பாட்டை மட்டுமே படிக்க வேண்டும். போர் முடிந்ததும், இந்தியாவின் சுதந்திரத்திற்கான உரிமைகோரல் பரிசீலிக்கப்படும் என்ற பிரிட்டிஷ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தடையின்றி, பேரம் பேசுவதற்கான ஒரு தந்திரோபாய வழிமுறையாக இரண்டாம் உலகப் போரில் இந்திய பங்களிப்பை உறுதிசெய்தார். இந்த முறை, போர் முடிந்தபின், ஆங்கிலேயர்கள் மனந்திரும்ப வேண்டியிருந்தது. மேலும் அவையில் உரையாடலைத் தொடங்கியது.

மகாத்மா என்ற சிறப்பு பெயர் அவருக்கு ரவீந்திரநாத் தாகூர் என்ற மிகப்பெரிய ஆளுமையால் வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காந்தி சாந்திநிகேதனுக்கு விஜயம் செய்தபோது, காந்திஜி தாகூரை குருதேவ் என்று குறிப்பிட்டு உரையாற்றியபோது, தாகூர் அவரை மகாத்மா என்று உரையாற்றினார். காந்திஜி அதன்பிறகு முழு நாட்டிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் மகாத்மா ஆனார்.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காந்தி அவரது நெருங்கிய கூட்டாளிகளான ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பல தலைவர்கள் - ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரத்திற்கான தாகத்தையும் தியாகம் செய்வதற்கான விருப்பத்தையும் ஊக்குவித்தனர். அவர்களிடையே வலிமையான விருப்பமும், எப்போதாவது பிடிவாதமும் கொண்டவர் காந்தி. ஆனால், அவர் மிகவும் மென்மையாகவும் பேசும் விதமாகவும் இருந்தார். அவர் பேசும் பகுதியைப் பொறுத்து குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார். அவரது மொழி எளிமையானது மற்றும் நேரடியானது, அதன் வேண்டுகோள் எப்போதும் ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தது.

காந்தியின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பல தொண்டர்களை ஈர்த்தன. உலகத் தலைவர்களான நெல்சன் மண்டேலா மற்றும் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் போன்ற பலர் அதில் அடங்குவர். ஒரு நோபல் பரிசை வெல்லாமல், அவர் பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களைக் கொண்ட மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அப்போஸ்தலரானார்.

சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம் ஆணி வேரிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று காந்தி உறுதியாக நம்பினார். கிராம பஞ்சாயத்துகள் அவரது கனவு. வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆண்களும் பெண்களும் மாசற்ற தன்மை கொண்ட தலைவர்களாக இருக்க வேண்டும், மக்களுக்கு பக்தியுடனும் தன்னலமற்ற தன்மையுடனும் சேவை செய்ய வேண்டும் என்று அவர் நம்பினார்.

ஒவ்வொரு இந்தியரும் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் விரும்பிய பெரிய மந்திரம் தன்னம்பிக்கை. உதாரணமாக, பருத்தியில் இருந்து பருத்தி நூல் தயாரிக்க முடியும். மேலும், அவற்றிலிருந்து வழக்கமான ஆடைகளைத் தயாரிக்க ஒவ்வொரு கிராமமும் அதன் வட்டாரத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உணவு உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை உருவாக்குவதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று அவர் நம்பினார். இயற்கையானது நமக்குத் தேவையானதைக் கொடுக்க முடியும், ஆனால் அது நம் பேராசைக்கு உணவளிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு சிக்கலான பிரச்சினைக்கும் அவர் ஒரு எளிய தீர்வைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பொருட்களை தயாரிப்பதில் ஈடுபடுவதற்கு அவர் எப்போதும் நம் கைகளை விரும்பினாலும், மனித உழைப்பை எளிதாக்கும் மற்றும் உதவி செய்யும் இயந்திரமயமாக்கலுக்கு அவர் ஒருபோதும் தயங்கவில்லை. சிங்கர் நிறுவனத்தால் தையல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவர் அதை “மனிதன் கண்டுபிடித்த மிகவும் பயனுள்ள இயந்திரம்” என்று கூறினார்.

மகாத்மா காந்தியின் சிறந்த மனிதநேய தத்துவம் என்றென்றைக்குமானதாக இருக்கிறது. அவரது பங்களிப்புகளைப் பற்றி கண்மூடித்தனமாக இருப்பது மனிதகுலத்திற்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் நல்லதல்ல. இந்தியாவின் பெருமகனாரின் புகழை நாம் கொண்டாடுவதையும் பெருமைப்படுத்துவதையும் குறைக்ககூடாது.

தமிழில் - பாலாஜி எல்லப்பன்

India Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment