Advertisment

இன்னும் சிறிது காலம் இந்திய நுகர்வோர் செலவழிக்க வேண்டும்

திப்தி தேஷ்பாண்டே : விவசாயப் பொருட்களின் விலை மீதான அழுத்தம் தணிய நேரம் பிடிக்கும். ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் தீவிரமடைந்து, அதன் தாக்கம் படிப்படியாக மறைந்த பிறகு இத்தகைய சூழல் இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்னும் சிறிது காலம் இந்திய நுகர்வோர் செலவழிக்க வேண்டும்

உணவு நுகர்வை மாற்றுவதில் குடும்பங்களுக்கு அதிக விருப்புரிமை இல்லாததால், அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் என்பதானது  பொருட்களின் பணவீக்கத்தை விட நுகர்வோரை அதிகம் பாதிக்கிறது.

Advertisment

தற்போதைய பணவீக்கத்தை இயக்குபவை வெளிப்புற காரணிளுடன் தொடர்புடையவையாக உள்ளன.  ஆனால் அவற்றின் இரண்டாம் சுற்று விளைவுகள் என்பது, உள்நாட்டு தேவை மேம்படுதல் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளுக்கு ஊட்டமளிக்கும் போது, ​​கவலைக்குரியதாகி வருகிறது. செலவினத்தின் பங்களிப்பைக் காட்டிலும் நுகர்வோர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாங்குதல் என்பது பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகளை வடிவமைக்கிறது என்று ஆராய்ச்சி சுட்டிகாட்டுகிறது.

உதாரணமாக, உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கான மொத்த நுகர்வோர் செலவிடுவது சுமார் 40 சதவீதம் மட்டுமல்ல, அடுத்தடுத்து தொடர்ச்சியாக  கொள்முதல் செய்வதும் அதிகமாக உள்ளது. இதனால் விலைவாசி உயர்வு பணவீக்க எதிர்பார்ப்புகளில் ஒரு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே, உணவுப் பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 6 சதவீதமாக இருந்தது, கொரோனா தொற்றுக்கு முந்தைய ஐந்தாண்டு சராசரியான 3.5 சதவீதத்தை விட கணிசமாக அதிகமாக உள்ளது. இது சமீபத்திய மாதங்களில் உயர்ந்துள்ளது, பணவீக்கத்துக்கான கணிப்புகளை தடுத்து நிறுத்துவதற்கான பணவியல் கொள்கை கடினமாக உள்ளது.

அப்படியென்றால் உணவுப் பணவீக்கம் ஏன் உயர்கிறது? என்ற கேள்விக்கு மூன்று காரணங்கள் பதிலாக உள்ளன: ஒன்று, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு; இரண்டு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு; மற்றும் மூன்று, உலக அளவில் உணவு விலை உயர்வு. முதல் இரண்டு காரணங்கள் ஏற்கனவே சில்லறை விலையில் எதிரொலிக்கின்றன.

ரஷ்யா-உக்ரைன் போர் எல்லாவற்றையும் பாதிக்கிறது, ஒரு நாட்டில் நுகரப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்பட்டாலும் கூட உணவு பொருட்களின் விலை கூட உயருகின்றன,. ஏப்ரல் மாதத்தில், உணவுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 8.4 சதவீதத்தை எட்டியது. இது தலைப்புச் செய்தியாக இருக்கும்போது, இந்த வகைக்குள் ​​பணவீக்கமும் பரந்த அடிப்படையில் உள்ளது. ஆரம்பத்தில், அது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதே அதிகரிக்கத் தொடங்கியது - போர் தொடங்கியதில் இருந்து உலக அளவில் உணவு பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன, சமையல் எண்ணெய்கள்,  உணவு தானியங்கள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. ஆனால், தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களும்  விலை உயர்வு எனும்  தீயில் சிக்கி வருகின்றன. முக்கியமாக, அங்குள்ள சிறிய பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் முதன்மையான வெளிப்புற காரணிகளை குறுகியகாலத்துக்கு மென்மையாக வைத்திருக்க முடியும்.

உதாரணமாக, போக்குவரத்துச் செலவுகளின் கூர்மையான உயர்வு விவசாயப் பொருட்களின் சில்லறை விலையை உயர்த்தியுள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்தது, அதிக அடிப்படை மற்றும் தொடர் விலை உயர்வு ஆகிய இரண்டின் காரணமாகவும். போக்குவரத்துக்கான அதிக சரக்கு கட்டணங்கள் சில்லறை விலையை உயர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.  CRISIL ஆராய்ச்சியின் CRISFrex குறியீட்டின்படி, விவசாயப் பொருட்களுக்கான சரக்குச் செலவுகள் ஏப்ரல் மாத நிலவரப்படி ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் சரக்குக் கட்டணங்களை உயர்த்தி, அதன் மூலம் அதிக டீசல் விலை கடத்துகின்றனர். .

இதேபோல், காய்கறிகளைத் தவிர, கோதுமை மற்றும் அதன் தயாரிப்புகள், தானியங்கள், இறைச்சி போன்ற உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்களிலும் பணவீக்கம் வலுப்பெற்று வருகிறது.  குறைந்த அடிப்படை விளைவைத் தவிர, இந்தக் கூறுகளில் தொடர்ச்சியான விலை உயர்வு உள்ளது. இவ்வாறு பலவற்றில், டீசல், உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கால்நடைத் தீவன விலை உயர்வால் உணவு உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ளன.

சமீப மாதங்களில் மொத்த மற்றும் சில்லறை உணவுப் பணவீக்கத்திற்கு இடையே உள்ள இடைவெளி குறைவதை பார்க்கமுடிகிறது. இது உள்ளீட்டுச் செலவுகள் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது. வெயிலின் தாக்கம் மேலும் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

உணவு நுகர்வை மாற்றுவதில் குடும்பங்களுக்கு அதிக விருப்புரிமை இல்லாததால், அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் மற்ற பொருட்களின் பணவீக்கத்தை விட நுகர்வோரை அதிகம் பாதிக்கிறது. சில நுகர்வோர் பிரிவுகளின் விளைவுகள் மிகவும் பாதகமானவையாக உள்ளன. உணவுக்காக நகர்ப்புற மக்களை விட (சுமார் 30 சதவீதம்) கிராமப்புற மக்கள் அதிக பங்கை (சுமார் 47 சதவீதம்) செலவிடுகின்றனர். இதேபோல், கீழே உள்ள 20 சதவீதம் பேர் உணவு நுகர்வு மீது அதிக பங்கை (60 சதவீதம்) செலுத்துகிறார்கள். இந்தப் பிரிவினர்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக உணவுப் பணவீக்கத்தின் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அரசின் கொள்கையானது எப்போதெல்லாம் சாத்தியமோ அப்போதெல்லாம் உணவுப் பணவீக்கத்தின் மீதான அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

செயல்முறை தொடங்கியுள்ளது. நாணயவியல் கொள்கையானது ரெப்போ விகிதம், ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தி, எளிதான பணப்புழக்க நிலைமையை படிப்படியாகக் குறைப்பதன் மூலம் முதல் நகர்வை மேற்கொண்டது. இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மேலும் 75-100 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

சமீபகாலமாக, அரசின் நிதிக் கொள்கையும், நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, உரம் மற்றும் சமையல் எரிவாயு மானியங்கள் அதிகரிப்பு மற்றும் சமையல் எண்ணெய்களின் வரியில்லா இறக்குமதியை அனுமதிப்பது ஆகியவை அடங்கும். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை செப்டம்பர் மாதத்திற்கு மேல் நீட்டிப்பது போன்ற கூடுதலான நடவடிக்கைகள் தேவைப்படலாம்.

விவசாயப் பொருட்களின் விலை மீதான அழுத்தம் தணிய நேரம் எடுக்கும். ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் தீவிரமடைந்து, அதன் தாக்கம் படிப்படியாக மறைந்த பிறகு இது இருக்க வேண்டும். அதுவரை, இந்திய நுகர்வோர் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்த கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் கடந்த மே 27 ம் தேதிய அன்று ‘Note to the consumer’ என்ற தலைப்பில் வெளியானது.  எழுத்தாளர் கிரிசில் லிமெட்ட் நிறுவனத்தின் (CRISIL) ஒரு முதன்மை பொருளாதார நிபுணராவார்.

தமிழில்; ரமணி 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment