Advertisment

தமிழில்: த. வளவன்

கொரோனா இறப்பு, வறுமை மற்றும் வரி வசூலில் தவறான கணக்கீடுகள் – ப.சிதம்பரம்

author-image
WebDesk
New Update
தமிழில்: த. வளவன்

ப சிதம்பரம், மூத்த காங்கிரஸ் தலைவர்

Advertisment

Counting death, poverty and taxes: இந்தியாவில் கடந்த 2019 ல் 664369 கிராமங்கள் இருந்தன.அவற்றில் சுமார் இருபது சதமானத்துக்கும் அதிகமான கிராமங்கள் நகர்ப்புறத்தை விட்டு ஒதுங்கி இருந்ததால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்தன. ஆனால் மீதமிருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதில் ஒரு கிராமத்துக்கு இருவர் இறந்ததாக வைத்துக் கொண்டால் கூட மொத்த இறப்பு எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.  

கொரோனா பெருந்தொற்றால் இந்தியா முழுவதும் ஏராளமான மக்கள் இறந்தனர். இதில் அனைவருக்கும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. சிலர் இருந்த இடத்திலும் பலர் ஆற்றுப் படுகைகளில் இறந்து கிடந்தனர்.  மருத்துவமனைகளில் இறந்ததாக சொல்லப் படுபவர்களுக்கு எந்த கணக்கீடும் இல்லை. 

அன்றாட வாழ்வில் நாம் அனைத்தையும் எண்ணுகிறோம். நேரம், பணம், கிரிக்கெட்டில் கிடைக்கும் ரன்கள் கால்பந்து விளையாட்டில் எடுக்கப் படும் கோல்கள் என அனைத்தும் இதில் அடக்கம்.அதே போல வாழ்க்கையில் அடைந்த வெற்றி தோல்விகளையும் நாம் நினைத்துப் பார்க்கிறோம்.இது தவிர தேர்தல் தோல்வியையும் தேர்தலில் நமக்கு கிடைத்த வாக்குகளையும், தொகுதிகளையும் கூட நாம் எண்ணுகிறோம். இப்படி பலவிதமான எண்ணிக்கைகள் நமது வாழ்வில் உள்ளன.

அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை தவிர மற்றவற்றை துல்லியமாக எண்ணுவதில் அரசுக்கு வெட்கம் இல்லை. கொரோனா பெருந்தொற்று நோய் பலரையும் மரணக் குழியில் தள்ளியது. எத்தனை பேருக்கு இந்த நோய் வந்தது என்பதையும் அதில் எவ்வளவு பேர் பலியானார்கள் என்பதையும் நாம் இதிலிருந்து உணர முடியும்.

இன்னும் சொல்லப் போனால் எத்தனை பேருக்கு பெருந்தொற்று நோய் ஏற்பட்டது, அதில் எத்தனை பேர் சிகிச்சை பெற்றனர், இதில் எத்தனை பேர் உயிருடன் மீண்டனர், இறப்புக்குப் பின்னர் எத்தனை பேர் சடலங்கள் பரிசோதிக்கப்பட்டன எனும் எண்ணிக்கை இருந்தால் தான் இந்த நோயால் இறந்த மொத்த நபர்களின் எண்ணிக்கையை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.மக்கள் தொகை குறைந்த நாடுகளிலும், அதிநவீன மருத்துவ வசதிகள் படைத்த நாடுகளிலும் தான் இது சாத்தியம். இந்தியாவில் கடந்த 2020 இது மாதிரியான வசதிகள் இல்லை.

இறப்புகள் எத்தனை?

கொரோனா பெருந்தொற்றால் இந்தியா முழுவதும் ஏராளமானோர் இறந்தனர்.இதில் அனைவருக்கும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. சிலர் இருந்த இடத்திலும் பலர் மருத்துவமனைகளிலும் இறந்ததாக சொல்கின்றனர். ஆனால் அது உண்மை அது இல்லை. நதிக்கரைகளில், நதியிலும் ஏராளமான சடலங்களை நாம் கண்டோம். இறந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப் படவில்லை.  அரசை தவிர இந்த உண்மையை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். கடந்த 2022 ஏப்ரல் வரையில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து அறுபத்தைந்து பேர் மட்டுமே என்கிறது அரசு.

ஆனால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அரசு சொன்ன எண்ணிக்கை தவறு என்பதை அம்பலப்படுத்தின.  இந்த விவரம் சரியல்ல என்கிற உண்மை முதலில் குஜராத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.கொரோனா காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு முந்தைய இறப்பு விகிதத்தை விட மிக அதிகம் என்பதை மாநில அரசு வழங்கிய இறப்பு சான்றிதழ்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு நாளிதழ் அம்பலப்படுத்தியது. இப்படி அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் கொரோனா தான் என்பதே உண்மை. அரசின் அதிகாரப்பூர்வமான சாவு எண்ணிக்கைக்கும், அரசால் வழங்கப்பட்ட இறப்பு   சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகம். இது குஜராத்தில் மட்டும் நடக்கவில்லை. பிற மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்தும் இது தெரியவந்தது.  வழங்கப் பட்ட இறப்பு சான்றிதழ்கள் எண்ணிக்கையையும், தகனம் செய்யப்பட்ட உடல்கள் எண்ணிக்கையையும் கூட்டிய பொது அரசு சொன்ன எண்ணிக்கையை விட பல மடங்கு மக்கள் கொரோனாவால் சாவை தழுவியது தெளிவானது.

பொது அறிவும் அறிவியல் உண்மையும்

இந்த வேளையில் பொது அறிவும் அறிவியலும்  களத்துக்கு  வந்தன. கடந்த 2022 ஜனவரி மாதத்தில் வெளியான அறிவியல் மாத இதழில் இந்திய கொரோனா உயிரிழப்பு 30 லட்சம் என குறிப்பிடப் பி பட்டுள்ளது. லான்செட் என்ற இதழோ இந்திய கொரோனா பலி 40 லட்சம் என்கிறது. இதையே உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்கிறது. உலக அளவில் கொரோனா நோய்க்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 90 லட்சம்.

இதையும் படியுங்கள்: உள்ளடி அரசியல்: பலன் தரும் பலியாடு

இந்த அளவுக்கு இறப்பு எண்ணிக்கை 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை என்றால் இந்திய அரசின் சுகாதார துறை எந்த அளவுக்கு செயல் பட்டுள்ளது என்பதை அறிய முடியும் என்பதுடன் அரசை நம்மால் குற்றம் சாட்டவும் முடியும். ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாஜக கட்சி. ஆனால் சுகாதார துறையில் போதிய அளவு அக்கறை காட்டவில்லை.

கொரோனா பெருந்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியதால் உயிர்ப்பலிகள் அதிகரித்தன. அரசு முழு முடக்கத்தை செயல்படுத்தியது. போக்குவரத்தை தடை செய்தது. தற்காலிக மருத்துவ முகாம்களை நிறுவியது. ஆனால் அனைத்திலுமே தேவையற்ற தாமதத்துடன் செயல் பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றால் இறந்தவர்கள் அரசின் அதிகார பூர்வமான எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை என்பது கவலை தரும் விஷயம். அதே நேரத்தில் ஆராய்ச்சிகளில் உள்ள குறைபாடுகளை கண்டு பிடிப்பதில் நேரத்தை செலவழிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்களை கொண்டு உலக சுகாதார நிறுவனம் கடைப் பிடித்த இறப்பு தொடர்பான எண்ணிக்கை தவறு என்று மல்லுக்கு நிற்கிறது.

அது போகட்டும். நமது பொது அறிவைக் கொண்டு நாமே இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிடுவோம். இந்தியாவில் கடந்த 2019 ல் 664369 கிராமங்கள் இருந்தன. அவற்றில் சுமார் இருபது சதமானத்துக்கும் அதிகமான கிராமங்கள் ஒதுக்கு புறமாக இருந்ததால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்தன.ஆனால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதில் ஒரு கிராமத்துக்கு இருவர் இறந்ததாக வைத்துக் கொண்டால் கூட மொத்த இறப்பு எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகம். அதனுடன் நகரங்களிலும் பெருநகரங்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டினால் நமக்கு கிடைப்பது சுமார் 15 லட்சம். இந்தியாவில் சுமார் 35 சதமான மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்.

வறுமையும் வரிவிதிப்புகளும்

இவை தவிர மற்றொரு புள்ளிவிவரம் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. ஆனால் இந்த புள்ளி விவரத்தில் அரசுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. உலக வங்கியின் ஒரு அறிக்கையின்படி கடந்த 2011ல் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 22.5 சதவீதத்தில் இருந்து 2019ல் 10.2 சதவீதமாக குறைந்து விட்டது என்கிறது அந்த புள்ளி விவரம். கிராமப்புறங்களில் ஏழைகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் குறைந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. வறுமை குறைந்துள்ளது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு முன்னதாக வேறு சில பரிசீலிக்க வேண்டியவையம் உண்டு என்ற நிபந்தனையுடன் இந்தியாவில் வறுமை குறைந்திருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

முக்கியமாக இந்த ஆய்வு கடந்த 2019ம் ஆண்டுடன் நின்று விட்டது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட அழிவுகளை அது கணக்கில் எடுக்கவில்லை. இரண்டாவதாக 2020 ம் ஆண்டு மார்ச்சுக்கு பின்பு கிடைத்த அனைத்து விவரங்களும் நாட்டில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றனர். இது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2019ம் ஆண்டில் முன்னெடுத்து செல்லப்பட்டதாக சொல்லப் பட்ட வறுமை ஒழிப்பு என்பது இரண்டு ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விட்டது. மூன்றாவதாக கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் இன்னும் தொடர்கின்றன. பொது முடக்கம் காரணமாக இழந்த வேலை வாய்ப்புகள் பெரும் பகுதி மீண்டும் வேலை இழந்தவர்களுக்கு கிடைக்க வில்லை. புதிய வேலை வாய்ப்புகள் இன்றும் சரி செய்யப்பட வில்லை.  

அடுத்ததாக நமது நிதி அமைச்சர் வாஷிங்டனில் பேசிய பொது பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய வரிகள் ஏதும் மக்கள் மீது விதிக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கப் பட வில்லை என்று கூறியுள்ளார். அதாவது கோவிட் வரி என்று எவர் மீதும் புதிதாக வரி விதிக்கப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார். இது உண்மைக்கு புறம்பானது. கடந்த 2020-21 முதல் 2021-22 வரை மட்டும் அரசு 816126 கோடி வரி வசூல் செய்துள்ளது. இது பெட்ரோல், டீசல் மீது போடப்பட்ட வரிகள். எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைத்த லாபத்தில் இருந்து அரசுக்கு கிடைத்த வருவாய் மட்டும் 72531 கோடி. 

கொரோனா பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை குறைத்து கட்டுதல், வறுமையை ஒழித்து விட்டதாக பெருமை படுவது, எரிபொருள் வருவாய் குறித்து வாய் திறக்க மறுப்பது போன்றவை குறித்து இந்த அரசுக்கு எந்த வெட்கமும் இல்லை.



தமிழில் : த. வளவன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram Corona Dead
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment