Advertisment

அரசியலமைப்பு சட்டம் எனும் கலங்கரை விளக்கம்

Celebrate the Constitution : இந்தியா எனும் தேசத்தில், தீவிர தேசியவாதம், மத சகிப்புத் தன்மையின்மை ஆகியவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதை உலகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
republic day, citizenship act, constitution, democracy, shaheen bagh, caa protests, nrc, development, narendra modi, amit shah

republic day, citizenship act, constitution, democracy, shaheen bagh, caa protests, nrc, development, narendra modi, amit shah

இந்தியா எனும் தேசத்தில், தீவிர தேசியவாதம், மத சகிப்புத் தன்மையின்மை ஆகியவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதை உலகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது. அதே போல கடந்த வாரம் டோவாஸ் நகரில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ,நாசிக்களின் ஈர்ப்பில் Hindu-vata’ எனும் கொள்கையை இந்தியா விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று முக்கியமான சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டுப்போனார்.

Advertisment

தவ்லீன் சிங்

ஷாகீன் பக் போராட்டக்களத்தில் கடந்த வாரம் நான் காலை நேரங்களில் இருந்தபோது பல்வேறு விஷயங்கள் என்னை ஈர்த்து கடந்து சென்றன. எவ்வளவு தெளிவாக பெண்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்று நினைத்து வியப்பால் ஈர்க்கப்பட்டேன். பிரதமர் நரேந்திரமோடி, அவருடைய அமைச்சர்கள் சொன்னதை விடவும், குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் தனிப்பட்ட முறையில் அதிருப்தி தருவதாக இருக்கிறது என்ற அவர்களுடைய போராட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு மாதம் முழுவதும் கடும் குளிரில் இரவும், பகலும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களின் அர்ப்பணிப்பு, ஊக்கம், உறுதிப்பாட்டினை நான் கடந்து சென்றேன். அரசியலமைப்பின் பாதுகாலவர்கள் என்ற வாசகத்துடன் மேடையில் இருந்த போஸ்டரால் மேலும் ஈர்க்கப்பட்டேன். அரசியலமைப்பு சட்டம் பிறந்து 70வது ஆண்டில், ஜனநாயகத்துக்கான ஒரு உத்திரவாதம் என்ற அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்திய அரசிலமைப்பு சட்டம் பார்க்கப்பட வேண்டும், அதைப்போலவே இந்திய அரசியலமைப்பு சட்டம் காணப்பட்டதால், அதை நான் கடந்து சென்றேன். இதை எழுதியவர்கள், அதனை கனவாக மாற்றி அதை ஒரு ஆவணமாக வைத்தனர். மாதவ் கோஸ்லாவின் குறிப்பிடத்தக்க புதிய புத்தகமான இந்தியா நிர்மாணிக்கப்பட்ட தருணம்(India’s Founding Moment) என்ற புத்தகத்தில் இருந்து சில வார்த்தைகளை பார்க்கலாம்.

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, ஜனநாயகத்தன்மையாக்கப்பட்டது ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான தருணத்தில், அதன் இருப்புக்கு தகுதியற்றதான ஒரு சூழலில் ஜனநாயகம் பற்றிய கேள்வி எழுந்திருக்கிறது. ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாதோர், மதம், மொழி, ஜாதியால் பிரிவினை, நூற்றாண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம் எனும் சுமை ஆகியவற்றின் சிக்கலான அமைப்பில் ஜனநாயகமானது நிறுவப்பட்டிருக்கிறது. ஆச்சர்யத்துக்கு இடமின்றி, இந்தியாவின் ஆரம்பகாலகட்டங்களில் பெரும்பாலானவை நவீன தேசமாக இருந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியான ஒரு குழப்பமாக எப்போது ஜனநாயகம் மரணிக்கப்போகிறது என்ற கேள்வியும் இருந்தது. அந்த இருண்டகாலங்களில் எழுதவும் படிக்கவும் தெரிந்த ஒரு சில இந்தியர்கள், நீண்டகாலத்துக்கு முன்பே ஜனநாயகம் மரணித்துவிடும் என்று உண்மையில் விரும்பினர். இப்படியானவர்களில் யாராவது ஒருவர், அந்த பெரும்பாலான ஆண்டுகளில் ராணுவ நகரங்களில் வசித்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ ஆட்சி போல இந்தியாவுக்கும், ஒரு பத்து ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சி தேவை.அப்போதுதான் நாடு செழித்தோங்கும் என்ற வார்த்தைகளை அடிக்கடி நான் கேட்டதை நினைவு கூர்கின்றேன். ஆனால், இன்றைக்கு இதை நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும். பாகிஸ்தானின் ஆரம்பகாலகட்ட ராணுவ ஆட்சியில் உண்மையில் பொருளாதாரமானது, சோஷலிச இந்தியாவை விட நன்றாக இருந்தது. இந்திரா காந்தி காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனகாலத்தை விட ஜனநாயகம் அங்கு பிழைத்திருந்தது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 70-வது பிறந்த நாளின்போது, அந்த அரசியலமைப்பு சட்டத்ததையே போராட்டத்தின் அடையாளமாக உபயோகித்து நமது குடியுரிமையில் கொண்டு வரப்படும் பாரபட்சமான மாற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு, இன்றைக்கு அது மிகவும் அற்புதமாகத் தோன்றும். அண்மையில் மும்பையில் நீதிமன்றத்துக்கு வெளியே கூடிய வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மத்தியில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை சத்தம்போட்டு வாசித்தனர். மகாராஷ்டிரா அரசு, பள்ளிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை கட்டாயப்பாடமாக்கி உள்ளது. நமது காலகட்டத்தின் இளம் தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத், ஷாகீன் பக் போராட்ட களத்துக்கு வந்தபோது, அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடன் வந்தார். இதை எழுதியவர்கள் கண்ட கனவு நனவாகி உள்ளது. அதில் ஏதோ ஒன்று கொண்டாடப்படுவதாக இருக்கிறது.

இந்தியா எனும் தேசத்தில், தீவிர தேசியவாதம், மத சகிப்புத் தன்மையின்மை ஆகியவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதை உலகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது. அதே போல கடந்த வாரம் டோவாஸ் நகரில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ,நாசிக்களின் ஈர்ப்பில் Hindu-vata’ எனும் கொள்கையை இந்தியா விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று முக்கியமான சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டுப்போனார். கடந்த 30 ஆண்டுகளாக பெரும் அளவில், ஜிகாதி தீவிவாரத்தின் மையமாக இருக்கும் நாட்டில் இருந்து வந்த அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் இந்த ஆண்டு முன்எப்போதையும் விட பொருளாதாரத்தில், அரசியலில் இந்தியாவின் நிலை மோசமாகி இருந்த து என்ற கருத்தொற்றுமை தோன்றியதன் விளைவாக அதை அவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஜார்ஜ் சொரெஸ் போன்ற புகழ்பெற்ற ஒருவர் “லட்சகணக்கான முஸ்லீம்களின் குடியுரிமையைப் பிடுங்கிக் கொள்ளும் வகையிலான அச்சுறுத்தல், பாதியளவு தன்னாட்சி கொண்ட முஸ்லீம் பகுதியாக இருந்த காஷ்மிரில் தண்டனை நடவடிக்கைகள் என இந்து நாட்டை மோடி உருவாக்குவதால், இந்தியாவுக்கு பெரிய, அச்சுறுத்தலான பின்னடைவு நிகழ்ந்துள்ளது,” என்று சொல்லி இருப்பார்.

ஒரு வாரத்துக்கு போதுமான மோசமான செய்தியாக இது இருக்காத நிலையில், சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்று தலைப்பிடப்பட்ட கவர் ஸ்டோரியுடன், இந்த பத்திக்கான என்னுடைய காலக்கெடு நாளில் அண்மை இதழான த எக்னாமிஸ்ட் வந்தது. அதன் அட்டையில், பா.ஜ.க-வின் காவி நிறத்திலான தாமரை சின்னம், முள்வேலி சுருள்களால் சூழப்பட்டிருப்பது போன்ற படம் இருந்தது. புத்தகத்தினுள் இருந்த நீண்ட கட்டுரை என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. அரசியல் இதழியலின் நீண்ட ஆண்டுகளில் ஏறக்குறைய , வேறு ஒரே ஒரு முறை மட்டும், அதாவது அவசரநிலை காலகட்டத்தின்போது இந்தியாவைப் பற்றிய மிகவும் மோசமான செய்தியைப் படித்தேன். இப்போதைக்கு அது மோசமான செய்தியாக தெரியவில்லை, ஏனெனில் சமூக தளங்களின் விரைவுகாரணமாக மோசமான செய்திகள் சில நொடிகளில் பரவி விடுகின்றன.

என்னை நான் உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக, என்னுடைய குறிப்பேட்டை திறந்து, ஷாகீன் பக் பெண் ஒருவருடனான உரையாடல் குறிப்பைப் படித்தேன். அவர்கள் அரசியலமைப்பு சட்டம் பற்றி அதிகமாக பேசி இருக்கின்றனர். வேறு எதையும்விட அதில் உறுதியான உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் பேசி இருக்கின்றனர். பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம், ஷாகீன் பக் ஒரு மினி பாகிஸ்தான் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் அவர்களை விமர்சித்தபோதும், மோசமாக ஏதும் நடந்து விடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் நம்புகின்றனர். இந்தவகையான பேச்சு அதிக அளவுக்கு உள்ளது. இத்தகைய பேச்சுக்கள் பாகிஸ்தானை விட இந்தியாவை இழிவுபடுத்தும். ஆனால், இந்த குடியரசு தினத்தில் நமக்கெல்லாம் எது தெளிவாகத் தெரிகிறது என்றால், இந்த பிரச்னைக்குரிய நேரத்தில் நமது அரசியலமைப்புச் சட்டம் பிரகாசமான கலங்கரைவிளக்கமாக இருக்கிறது.

Narendra Modi Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment