Advertisment

ஒரு இரும்பு சட்டகம் கூண்டானது; 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு தீவிர குடிமைப் பணி சீர்திருத்தம் தேவை

Slowdown of Indian Economy needs deep civil service reform: செப்டம்பர் 1984 இல், ஜே.ஆர்.டி டாடா ஓய்வுபெற்ற அதிகாரத்துவ பி.என்.ஹக்ஸரின் கடிதத்திற்கு பதிலளித்தார். அதில், இந்தியாவின் வளர்ச்சிக்கு வணிகர்கள் போதுமானதாக இல்லை என்று கடிந்துகொண்டார். “நான் வெளிநாட்டு ஆதிக்கத்தை விழுங்க முடியாமல் ஒரு கோபம் கொண்ட இளைஞனாக நான் என்னுடைய 55 வயதில் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதை நான் கோபம்கொண்ட ஒரு முதியவனாக முடிக்கிறேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian economy, economic slowdown, civil service reform, The steel frame has become a cage, இந்திய பொருளாதார மந்தநிலை, இந்திய பொருளாதாரம், A $10-trillion economy needs india, needs deep civil service reform, A $5-trillion economy of india

indian economy, economic slowdown, civil service reform, The steel frame has become a cage, இந்திய பொருளாதார மந்தநிலை, இந்திய பொருளாதாரம், A $10-trillion economy needs india, needs deep civil service reform, A $5-trillion economy of india

மனிஷ் சபர்வால், கட்டுரையாளர், டீம்லீஸெஸ் சர்வீஸ் தலைவர்

Advertisment

Slowdown of Indian Economy needs deep civil service reform: செப்டம்பர் 1984 இல், ஜே.ஆர்.டி டாடா ஓய்வுபெற்ற அதிகாரத்துவ பி.என்.ஹக்ஸரின் கடிதத்திற்கு பதிலளித்தார். அதில், இந்தியாவின் வளர்ச்சிக்கு வணிகர்கள் போதுமானதாக இல்லை என்று கடிந்துகொண்டார். “நான் வெளிநாட்டு ஆதிக்கத்தை விழுங்க முடியாமல் ஒரு கோபம் கொண்ட இளைஞனாக நான் என்னுடைய 55 வயதில் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதை நான் கோபம்கொண்ட ஒரு முதியவனாக முடிக்கிறேன்... ஏனென்றால், நம்முடைய பெரும்பான்மையான மக்களின் தொடர்ச்சியான பரிதாபகரமான விதியைக் காண்பது என் இதயத்தை உடைக்கிறது. இதில் அதிகம் நம்முடைய அரசாங்கத்தின் பல ஆண்டுகால தவறான பொருளாதாரக் கொள்கையை குற்றம் சாட்டுகிறேன். ஆற்றல்கள் மற்றும் நிறுவனங்களை விடுவிப்பதற்கு பதிலாக தனியார் துறைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உரிமங்களின் முறைகள், காரணமில்லாமல் கூடுதலாக தனிப்பட்ட வரிவிதிப்புடன் இணைத்தது ஆகியவை நெர்மையற்ற நிறுவனங்களை தண்டிப்பது முட்டுக்கட்டை போடுவது மட்டுமில்லாமல் புதிய வகையான லஞ்சப் பேர்வழிகள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் கருப்பு சந்தைப்படுத்துபவர்களுக்கு வெற்றிகளையும் செல்வங்களையும் கொண்டு வந்துள்ளது” ஜே ஆர் டி எழுதிய கடிதத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் மேற்கொண்ட சீர்திருத்தங்களாக உரிமத்தை நீக்குதல், கட்டுப்பாடு நீக்கம், ஆதார், யு.பி.ஐ, பணவீக்க இலக்கு, திவால்நிலை, ஜி.எஸ்.டி, குறைந்த கார்ப்பரேட் வரிகள் போன்றவை கொண்டுவரப்பட்டன. இவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு இந்தியாவின் வலுவான அடித்தளங்களாக உள்ளன. ஆனால், 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தையும், தனிநபர் வருமானத்தையும் சீனாவை எட்டுவதற்கு இன்று இந்தியாவின் 20 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய மனித மூலதன ஆட்சி தேவை.

இந்தியாவின் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கற்பனை செய்யலாம். அதாவது நம்முடைய தொழிலாளர் சக்தியில் எண்பது சதவிகிதம் பண்ணைகளுக்கு வெளியே வேலை செய்கின்றனர் என்று கற்பனை செய்யலாம் (விவசாயிகளுக்கு உதவ ஒரே வழியாக இருக்கும் அவர்கள் குறைவாக இருப்பதுதான்). ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் நம்மிடம் 200 நகரங்கள் இருப்பதாக கற்பனை செய்யலாம் (இன்று அப்படி நம்மிடம் 52 நகரங்கள் உள்ளன). கற்பனையில் நம்முடைய நகரங்களில் ஒருவர் வீட்டிலிருந்து பணி செய்யும் இடத்துக்கு சராசரியாக ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதை சந்திக்கிறது (மக்கள் வேலைக்காக 30 நிமிடங்கள் பயணிக்கின்றனர்). நமது அரசு 4 சதவீதத்திற்கும் குறைவாக கடன் வாங்குகிறது. நம்முடைய ஆதார்-இணைக்கப்பட்ட நிலச் சந்தைகள், வாடகை பலன்கள் மற்றும் அடமான கடன் விகிதங்களை சமப்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகளுக்கு வரி வசதி இல்லாத ஒரு சுயாதீன தாய் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் நம்முடைய கடன் 100 சதவீதம் உயர்கிறது (இன்றைய 50 சதவீதத்திலிருந்து). ஏனெனில், நம்முடைய நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது மற்றும் மீட்பது எப்படி என்று தெரியும். கற்றல் முடிவுகள் மேம்படுவதால் அரசு பள்ளி சேர்க்கை குறைவதை நிறுத்துகிறது. (எதுவும் தரத்துடன் இலவசமாக இருக்க வேண்டும் என்றால், அது பள்ளிகளாக இருக்க வேண்டும்). இன்று வியட்நாம் மற்றும் மலேசியாவுக்குச் செல்லும் சீனா தொழிற்சாலை அகதிகளை நாம் ஈர்த்துள்ளோம். வளர்ச்சியைத் தாண்டத் துடிக்கும் எதிர்மறை வட்டி விகிதங்கள் உலகளாவிய மூலதன பற்றாக்குறையை நமது முதலீட்டுத் தேவைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிதி ஒழுங்கு குறைந்த பணவீக்கத்தை வழங்குகிறது. கற்பனையில் நம்முடைய கல்லூரிக்குச் செல்லும் வயதுடைய குழந்தைகளில் ஐம்பது சதவீதம் பேர் மாறுபட்ட உயர்கல்வி முறைக்குச் செல்கிறார்கள் (இன்று 25 சதவீதம் பேர் ஒரே மாதிரியான அமைப்பில் உள்ளனர்). கொள்கை முறையான பணியமர்த்தலை ஊக்குவிக்கிறது (இன்றைய தொழிலாளர் சட்டங்கள் விவாகரத்து இல்லாத திருமணம் போன்றது). கற்பனையில் நம்முடைய சீர்திருத்தப்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்பு 60 சதவீத தொழிலாளர்களை உள்ளடக்கியது (இன்றைய பாதுகாப்பு 20 சதவீதம் மட்டுமே, ஏனெனில் வருங்கால வைப்பு நிதியம் மற்றும் இ.எஸ்.ஐ ஆகியவை பணத்திற்கு மோசமான மதிப்பை வழங்குகின்றன).

அபிவிருத்திக்கு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் தேவை. ஆனால் இந்தியாவின் மூலதனம் உழைப்பு இல்லாமல் ஊனமுற்றுள்ளது. உழைப்பு மூலதனமின்றி ஊனமுற்றுள்ளது. ஏனென்றால், நம்முடைய கொலஸ்ட்ராலை ஒழுங்குபடுத்துவது போல தொழிலாளர்கள் 57, 000 இணக்கமாக உள்லனர். இதில் 3100 வருமான வரி தாக்கல் ஆகிறது. ஆண்டுக்கு 4000 அளவில் மாற்றம் இருக்கிறது. மேலும் விவரங்களை இந்த தளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்: http://www.teamleasecompliance.com and Rulezbook App). இந்த கொடூரமான விரோதம் தனியார் நிறுவனங்களுக்கு விஷமத்தனமான குடிமைப் பணி சிந்தனை உலகங்களிலிருந்து வருகிறது. அவை அனுமதிக்கப்படும் வரை தடைசெய்யப்பட்டதைப் போன்றது. அனைத்தையும் கற்றுக்கொள்வதைக் காட்டிலும் அனைத்தையும் தெரிந்து கொள்வது போன்றது. பெரிய விஷயங்களுக்கு மிகவும் சிறியதாகவும், சிறிய விஷயங்களுக்காக மிகவும் பெரியதாகவும் அளிப்பது போன்றது. மேலும், யோசிக்காமல் வேகமான தரமில்லாத சட்டவரைவு, சிக்கலான செயல்படுத்தலுக்காக அவமதிப்பு, தொடர்ச்சியாக முன்னேற்றம் அடையும் தூய்மைவாத கருத்தாக்கம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தைவிட தனியார் துறையை பெரிய நிறுவனங்களாக மாற்றுவது, அதிகார வரம்பு நிபுணத்துவத்தால் இயக்கப்படும் வடிவமைப்பைக் காட்டிலும் கொள்கையைச் செயல்படுத்த தண்டனையைப் பயன்படுத்துதல், செல்வத்தை உருவாக்குபவர்களை தேசிய சொத்துகளாகப் பார்க்காதது போன்றவை அவை.

பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளில் 150 பில்லியன் டாலர் மதிப்பை அழித்துள்ளன என்று குஜராத்தி கூறுகையில் “ஜஹான் ராஜா வியாபாரி, வாகன் பிரஜா பிகாரி” (ராஜா ஒரு தொழிலதிபர், மக்கள் தொகை ஒரு பிச்சைக்காரன்) என்று கூறுகிறார். இந்த கொலஸ்ட்ராலை ஒழுங்குபடுத்து முறையை நீக்குவதற்கு குடிமைப் பணியாளர்களுக்கு ஒரு காலநிலை மாற்றம் தேவை. ஒரு புதிய மனித மூலதன ஆட்சி கட்டமைப்பு, பணியாளர்கள், பயிற்சி, செயல்திறன் மேலாண்மை, இழப்பீடு மற்றும் கலாச்சாரம் ஆகிய ஆறு துறைகள் தலா இரண்டு திட்டங்களுடன் தொடங்குகிறது. கட்டமைப்பு திட்டம் 1 பகுத்தறிவாக்கத்தை உள்ளடக்கியது: 55 மத்திய அமைச்சகங்களில் நமக்கு நூற்றுக்கணக்கான பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துறைகள் தேவையில்லை. (ஜப்பானில் 9, அமெரிக்காவில் 14, இங்கிலாந்தில் 21 உள்ளது). கட்டமைப்பு திட்டம் 2 என்பது ஈபிள் கோபுரமாக மாறுவதற்கான வழியில் சிலிண்டரை ஒரு பிரமிடாக மாற்றுவதை உள்ளடக்குகிறது (டெல்லியில் 250-க்கும் மேற்பட்டோர் செயலாளர் பதவியில் உள்ளனர்).

இந்த இணைப்பில் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கலாம்.

https://indianexpress.com/article/opinion/columns/economic-slowdown-civil-service-reform-6059630/

பணியாளர்கள் திட்டம் 1 அனுமதிக்கப்பட்ட மற்றும் உண்மையான வலிமை இடைவெளியை நீக்குகிறது. ஏனென்றால், இது அதிக வேலை செய்யும் நல்ல நபர்கள், அவசரமற்ற வேலையை புறக்கணித்தல், அத்தியாவசிய பதவிகளில் அமர்த்துவது போன்றவற்றால் மட்டுமே சாத்தியம். பணியாளர் திட்டம் 2 அறிவாற்றல் பன்முகத்தன்மையையும் போட்டியையும் 20 சதவீத பக்கவாட்டு நுழைவுடன் உருவாக்குகிறது. பயிற்சித் திட்டம் 1 என்பது பாடநெறிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றன (வழங்குதலை விட தேவையை செயல்படுத்த வேண்டும்). பாடநெறி பரிந்துரைகள் மக்களை எவ்வாறு தேர்வு செய்கின்றன, படிப்புகள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன, மற்றும் பாடநெறி முடிவுகள் செயல்திறன் நிர்வாகத்துடன் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன. பயிற்சி திட்டம் 2 என்பது பகுதியாக என்பதைவிட கற்றலை தொடர்ச்சியாக உருவாக்குவதை உள்ளடக்குகிறது.

செயல்திறன் மேலாண்மை திட்டம் 1 -இல் நிலுவையில் உள்ள (20 சதவீதம்), நல்ல (60 சதவீதம்) மற்றும் குறைவான (20 சதவீதம்) மதிப்பீடுகளுக்கு கட்டாய வளைவு உள்ளது. ஏனெனில் 98 சதவீத மக்கள் நிலுவையில் இருக்க முடியாது. செயல்திறன் மேலாண்மை திட்டம் 2 என்பது இராணுவ வரம்புகளை பிரதிபலிப்பதை உள்ளடக்கியது, அங்கு மக்கள் 50 வயதில் ஓய்வு பெறுகிறார்கள், பதவி உயர்வு பட்டியலிடப்படவில்லை. இழப்பீட்டுத் திட்டம் 1 என்பது நன்மைகளை நாணயமாக்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு செலவுக்குச் செல்வதை உள்ளடக்குகிறது. இழப்பீட்டுத் திட்டம் 2 என்பது கீழே சம்பளத்தை முடக்குவது (நாம்அதிகமாக செலுத்துகிறோம்) மற்றும் அவற்றை மேலே உயர்த்துவது (நாம் மிகக் குறைவாகவே செலுத்துகிறோம்).

இரண்டு கலாச்சாரத் திட்டங்கள் மிகவும் கடினமானவை - ஊழல் மற்றும் வேறுபாட்டைச் சுற்றியுள்ள மேலே இருப்பவர்களின் தொனி. பல குடிமைப் பணி தலைவர்கள் தங்களுக்கு கீழ்படிந்தவர்களிடையே ஒட்டுண்ணியாய் இருப்பவர்களைக் கவனிக்கவில்லை அல்லது புதிய வகை ஊழலை வளர்க்கும் செயல்முறைகளை கேள்வி கேட்கவில்லை. கழுதைக்கும் குதிரைக்கும் இடையே செயல்திறனில் வேறுபாடு செய்யாமல் பணி மூப்பின் அடிப்படையில் வேலைகளை வழங்குவது, தானாகவே பதவி உயர்வு அளிப்பது ஒரு பதவி உயர்வு வாய்ப்பை ஏற்படுத்தும். ஆனால், பதவியில் அமர்த்த இயலாது. வேறுபாடு குறித்த அச்சத்தின் குறைவும் நம்பிகை உயர்வும் அவசியம் தேவை.

தற்போதைய பொருளாதார மந்தநிலை நீண்ட கால பலனுக்கான குருகிய கால வலி ஆனால் அது அதிகப்படியான நிவாரணத்தை கோருகிறது. முதலாளிகளுக்கான இந்த காலநிலை மாற்றம் - திறன் மற்றும் மூலோபாயம் போட்டி மற்றும் திவால்நிலையுடன் மட்டுமே மதிப்புமிக்கதாக மாறும் என்ற வாதத்திற்கு குடிமைப் பணியாளர்களுக்கு பதில் தேவை. மிகவும் புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி பொருளாதார பார்வை வளர்ச்சியை கிறுக்கும் விளையாட்டாக கருதுகிறது. அங்கே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உயிரெழுத்துக்கள் தனியார் துறைக்கு அதிக சொற்களையும் நீண்ட சொற்களையும் உருவாக்க உதவுகின்றன. தற்போதைய குடிமைப் பணி போதுமான உயிரெழுத்துக்களை வழங்கத் தவறிவிட்டது; எஃகு சட்டகம் ஒரு கூண்டாக மாறிவிட்டது. நீண்ட காலமாக, இந்திய அரசின் மூளை அதன் முதுகெலும்புடன் இணைக்கப்படவில்லை. அது இப்போது மாறிவிட்டதால், முதுகெலும்பை அதன் கை கால்களுடன் இணைக்க வேண்டிய நேரம் இது.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment