Advertisment

இந்தியாவின் ஆரோக்கியம், மக்கள்தொகைக் கண்ணோட்டம்

ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதத்தின் தற்போதைய அளவானது, இந்தியாவின் மக்கள் தொகை வலுவாக தொடங்கியிருப்பதற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
இந்தியாவின் ஆரோக்கியம், மக்கள்தொகைக் கண்ணோட்டம்

2050ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை வலுவடையும் என்று என்எச்எஃப்எஸ்-5 தரவு நம்பிக்கை தருகிறது. ஆனால், சில மாநிலங்களில் நிலவும் பொது சுகாதாரத்தின் அபாயங்களை சரி செய்ய கொள்கையளவிலான அவசர தலையீடு தேவைப்படுகிறது.

Advertisment

அண்மை கால தேசிய குடும்ப நல சர்வே(என்எச்எஃப்எஸ்)யின் வாயிலாக, இந்தியாவில் கருத்தரித்தல் என்பது தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம்-பெண் ஒருவர் தன் வாழ்நாளில் எதிர்பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை என்பது 2.2-ல் இருந்து (என்எச்எஃப்எஸ்-4,2015-16) 2.0 ஆக குறைந்திருக்கிறது. மாற்று விகிதம் 2.1-க்குக் கீழேஉள்ளது, ஒரு தாய்க்கு பதிலாக ஒரு மகள் என மாற்று விகிதம் இருக்கிறது. கருத்தரித்தல் விகிதம் தொடர்ந்து குறையுமா? 1951ம் ஆண்டு ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் 6 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மாதிரி பதிவு அமைப்பின் அறிக்கையின் படி இந்த விகிதம் 1971ம் ஆண்டு 5.2 ஆக குறைந்தது. 1991ம் ஆண்டு 3.6 ஆகவும், 2011ம் ஆண்டு 2.4 ஆகவும் குறைந்தது. 2000ம் ஆண்டில் இருந்து ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் மெதுவாக இருந்திருக்கக் கூடும். 2015-16 மற்றும் 2019-21(அட்டவணை1) காலகட்டங்களில் பெரும்பாலான மாநிலங்களில் ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் குறைந்திருக்கிறது. இந்த சரிவு என்பது சில காலத்துக்கு தொடரும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.  

எனினும், மிகவும் குறைந்த கருத்தரித்தல் நிலைக்கு சில எதிர்ப்புகள் இருந்திருக்கக் கூடும் என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த காலகட்டத்தில் கேரளா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் என்பது 1.6 மற்றும் 1.7 என்ற நிலையில் இருந்து முறையே 1.8 ஆக இருந்தது. பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய சில பெரிய மாநிலங்களில் ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் 1.7 –க்கு குறைவாக இருந்தது.  பீகார்(ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் 3.0), உத்தரபிரதேசம்(ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் 2.4) இரு மாநிலங்கள் குறித்து ஒன்றிணைந்த சிறப்பு கவனம் தேவை. இந்த மாநிலங்களில் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் தொகை இருக்கிறது. 2000ம் ஆண்டு வரையிலும் உ.பியின் ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் பீகாரை விட அதிகமாக இருந்தது. அப்போதில் இருந்து உ.பி-யில் ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் தாய் மற்றும் குழந்தைகள் நல (MCH) திட்டங்கள், அதே போல பெண்களின் அந்தஸ்தில் முன்னேற்றம் ஆகியவை கருவுறுதல் குறைவின் முக்கிய காரணங்கள் என்று அறியப்படுகிறது.

பீகார், உ.பி இரண்டு மாநிலங்களும் தங்கள் திட்டங்களை வலுப்படுத்த வேண்டிய தேவையைக் கொண்டுள்ளன. நவீன முறைகளைக் கொண்ட கருத்தடை பரவல் விகிதம் இரண்டு மாநிலங்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக சுமார் 44.5 சதவிகிதமாக இருக்கிறது. இதோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ஒட்டு மொத்த சதவிகிதம் 56.5 சதவிகிதமாக இருக்கிறது. எனினும், அனைத்து முறைகளையும் கொண்ட கருத்தடை பரவல் விகிதம் உ.பி-யில் (62.4 சதவிகிதம்)அதிகமாக இருக்கிறது. பீகாருடன் ஒப்பிடும் போதும்(55.8 சதவிகிதம்) ஆயினும் இரண்டும் இந்திய அளவை (66.7 சதவீதம்)விட குறைவாக இருக்கின்றன.

பெண்களின் அந்தஸ்து குறித்த மதிப்பீட்டில் பீகாரை ஒப்பிடும்போது உ.பி-யில் பெண்கள் நிலை உயர்வாகவே இருக்கிறது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவுடன் ஒப்பிடும் போது உ.பி-யில் பெண்கள் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பீகாரில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கல்வியறிவு 57.8 சதவிகிதமாக இருக்கிறது. உ.பி-யில் இது 66.1 சதவிகிதமாக இருக்கிறது. இரு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்திய அளவில் இது 71.5 சதவிகிதமாக இருக்கிறது. பீகாரில் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் குழந்தைகளில் 28.8 சதவிகிதம் பேர் பள்ளிக்கு செல்கின்றனர். இது உ.பி-யில் 39.3 சதவிகிதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவில் இது 41.0 சதவிகிதமாக இருக்கிறது. இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயான முக்கியமான வித்தியாசமாக இருப்பது, கருத்தரித்தல் விகிதத்தில் வித்தியாசமாக இருக்கலாம். 20-24 வயதுள்ள பெண்களில் 18 வயதுக்கு முன்பே திருமணம் ஆனவர்கள் விகிதம் தோராயமாக பீகாரில் 40.8 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இது உ.பி-யில் 15.8 சதவிகிதமாக இருக்கிறது.

நவீன கருத்தடை முறைகளை உபயோகிப்பது என்பது என்எச்எஃப்எஸ்-4ல் 47.8 சதவிகிதமாக இருந்தது என்பது என்எச்எஃப்எஸ்-5-ல் 56.5 சதவிகிதமாக அதிகரித்தது. இதுதான் கருத்தரித்தல் குறைவுக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது. நீண்டகாலமாகவே பெண்கள் கருத்தடை செய்து கொள்வதுதான் கருத்தடைக்கான அதிக மேலாதிக்க முறையாக இருந்தது. மொத்த என்எச்எஃப்எஸ்-5-ல் இது 67 சதவிகிதமாகும். திட்டத்தில் சேரும் தம்பதிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முறை எவ்வாறு இருக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. எனினும், பெண்கள் கருத்தடை செய்யும் விகிதம் என்எச்எஃப்எஸ்-4ல் 75 சதவிகிதத்தில் இருந்து குறைந்தது. இது பயனர்களின் விருப்பத்தை சந்திப்பதில் சில முன்னேற்றங்களைக் குறிக்கிறது. மொத்த கருத்தடை பயன்பாட்டில், ஆண்கள் கருத்தடையை பயன்படுத்துவது (ஆணுறை, கருத்தடை) 17 சதவிகிதமாக இருக்கிறது. கருத்தடையின் சுமையை பெரும்பாலும் பெண்களே ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் இருக்கிறது.  பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல் கருவுறுதல் ஒரு நிலையான சரிவுக்கு பங்களிக்கும்.

ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதத்தின் தற்போதைய அளவானது, இந்தியாவின் மக்கள் தொகை வலுவாக தொடங்கியிருப்பதற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. சீராக சரிந்து வந்த இறப்பு விகிதம் 1981ம் ஆண்டு முற்றிலும் தடுக்கப்பட்டதன் காரணமாக, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்தது. 2018ம் ஆண்டின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின் வாயிலாக இப்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.37 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து குறையும். ஆனால் மக்கள்தொகை உத்வேகம் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிக்கும்.

15-49 வயதுடைய மக்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்க வயதிற்குள் நுழைவதில் இருந்து, இந்த வயதை விட்டு வெளியேறுபவர்களுடன் ஒப்பிடும்போது முந்தைய உயர் கருவுறுதலில் வயது கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  நீண்டகாலத்துக்கு முன்னரே மக்கள் தொகை அளவை கணிப்பது சிக்கலான விஷயமாகும். ஐநா மக்கள்தொகைப் பிரிவின் மக்கள்தொகை மதிப்பீட்டின் நடுத்தர-கருவுறுதல் மாறுபாடு 2050ல் 165 கோடியாக உயரும். இருப்பினும், நாம் இன்னும் நம்பிக்கையுடன் இருக்க முடியும். மாதிரி பதிவு முறையின்படி பிறப்பு விகிதம் அதிகம், மாதிரி அளவீட்டை விட இறப்பு விகிதம் குறைவு. எனினும், என்எச்எஃப்எஸ்-5ல் ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகித மதிப்பீடு, மாதிரியில் கணிக்கப்பட்டதை காட்டிலும் குறைவானதாகும். இது சில சமநிலை விளைவுகளை அளிக்கக்கூடும்.

பிறப்பு பாலின விகித மதிப்பீடுகளில், 1000 ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. 2018ம் ஆண்டின் மாதிரி பதிவேடு முறை அறிக்கையின் மதிப்பீட்டில் இது 2011ம் ஆண்டில் 906 ஆக இருந்தது 2018ம் ஆண்டில் 899 ஆக குறைந்தது.எனினும், என்எச்எஃப்எஸ்-4ன் மதிப்பீடு 2015-16-ல் இது 919 ஆக இருந்தது. என்எச்எஃப்எஸ்-5 மதிப்பீட்டின்படி, அப்போதிருந்து பிறப்பு பாலின விகிதம் 929 ஆக அதிகரித்துள்ளது ஊக்கமளிக்கிறது.இதே போன்று இந்த முன்னேற்றத்தின் வேகம் நிர்வகிக்கப்பட முடிந்தால்,  பத்தாண்டுக்குள் நாம் 950 என்ற இயற்கையான உயிரியல் விகிதத்தை அடைவதை எதிர்பார்க்கலாம். இந்த விகிதம் பல மாநிலங்களில் முன்னேற்றம் பெற்றுள்ளது. எனினும், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, இமாச்சல் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பெரிய மாநிலங்கள் மத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 5 வயதுக்கு  உட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் 38.4 சதவிகிதத்தில் இருந்து 35.4 சதவிகிதமாக ஓரளவு குறைந்துள்ளது. இமாச்சல் பிரதேசம், கேரளா மற்றும் தெலுங்கான போன்ற பெரிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதை தவிர்த்து பிற அனைத்து மாநிலங்களிலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை 23 மாத வயதுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டசத்து குறைபாடு, இதற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். தாய் பால் குடிக்கும் குழந்தைகள் மற்றும் தாய் பால் குடிக்காத 6-23 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தரப்படும் போதுமான ஊட்டச்சத்தானது, முறையே 12.7 சதவிகிதம் மற்றும் 11.3 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசிடம் பல திட்டங்கள் உள்ளன. எனினும், குழந்தைகளுக்கான ஊட்டசத்துக்குறைபாடு என்பது அதிகமாக இருக்கிறது. இது நீண்டகாலத்துக்கு நீடித்து வருகிறது. . ஊட்டசத்து திட்டங்களை வலுப்படுத்த அரசின் அனைத்து மட்டத்திலும் சமூக அளவிலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.  

என்எச்எஃப்எஸ்-5-ன் முடிவானது, உடல் பருமன், புகையிலை உபயோகம் ஆகிய இரண்டு பொதுசுகாதார கவலைகளை சுட்டிக்காட்டியது. இந்த இரண்டுமே தொற்றாத நோய்களுக்கான அபாயங்கள் என்று அறியப்படுகிறது. அனைத்து பெண்கள்,  ஆண்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு  ஆண்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர் (உடல் நிறை குறியீட்டெண் = 25.0 கிலோ/m2).இந்த விகிதம் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆண்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல்(38 சதவிகிதம்) சில வகையான புகையிலை உபயோகிப்பதாக தெரிய வருகிறது.

இறுதியாக, என்எச்எஃப்எஸ்-5-ன் முடிவுகளானது, ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை  சுட்டிக்காட்டுகிறது. எனினும் பீகார், உ.பி ஆகியவை தங்களது குடும்ப கட்டுப்பாட்டு,  தாய் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரத் திட்டங்களை வலுப்படுத்த  வேண்டிய தேவையைக் கொண்டிருக்கின்றன. அதே போல பெண்களின் நிலையை மேம்படுத்தி ஒட்டு மொத்த கருத்தரித்தல் விகிதத்தை  மாற்று நிலைக்கோ  அல்லது அதற்கும் கீழோ கொண்டு வர வேண்டும். இரண்டாவதாக பிறப்பில் பாலின விகிதத்தை முன்னெடுப்பதற்கான  முன்னேற்றத்தின் வேகத்தை நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மூன்றாவதாக குழந்தைகள் நுண்ணூட்ட சத்து திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்பட  வேண்டிய தேவையிருக்கிறது. இந்த முக்கிய பிரச்னைக்கு தீர்வு காண சமூகம் மேலும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. நான்காவதாக அதிக புகையிலை உபயோகம், அதிகரிக்கும் உடல் பருமன் நிலையால் எழும் பொது சுகாதார அபாயத்தை குறைக்க வேண்டியதன் அவசியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஆவார். சத்யா, இந்திய பொது சுகாதார நிறுவனம், காந்திநகர் (IIPHG) பேராசிரியராக உள்ளார்.

தமிழில்; ஆகேறன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment