Advertisment

நிதிப் பற்றாக்குறை முதல் இட ஒதுக்கீடு வரை... யார் ஆட்சிக்கு வந்தாலும் இத்தனை பிரச்னைகள்!

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்றே நான் கருதுகிறேன். திமுகவின் முயற்சி வெற்றி பெறும் என்று நான் கருதவில்லை

author-image
D. Elayaraja
New Update
நிதிப் பற்றாக்குறை முதல் இட ஒதுக்கீடு வரை... யார் ஆட்சிக்கு வந்தாலும் இத்தனை பிரச்னைகள்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை தங்கவைக்க அதிமுகவும், இரண்டுமுறை தவறவிட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த இரு திராவிட கட்சிகளும், மக்களை கவரும் வகையில் அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினர்.

Advertisment

தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாள் நெருங்கி வரும் நிலையில், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், இந்த தோதலில் ஆட்சியை பிடிக்கும் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி என்பவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

  • புதிய அரசு எதிர்கொள்ளும் சவால்கள் :

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், என்னுடய அரசியல் கணிப்பின்படி இந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். இதற்கு காரணம் 2011 மற்றும் 2016-ம் ஆண்டு ஆட்சியில் இல்லாதபோது திமுகவிற்கு எதிர்ப்பு வாக்குகள் இல்லை. மேலும் மக்களவை தேர்தலில் திமுக பலமான வெற்றியை பெற்றுள்ளது. இதில் மக்களவை தேர்தலில் திமுகவிடம் தோற்ற அணியைதான் சட்டசபை தேர்தலில் சந்திக்கின்றனர். எனது அரசியல் கணிப்பின்படி திமுகவிற்கு இருக்கும் வாக்கு வங்கி, அதிமுகவிற்கு இருக்கும் வாக்கு வங்கி மற்றும் மற்ற 3 கட்சிகளுக்கும் இருக்கும் வாக்கு வங்கியை கணக்கிடும் போது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நான் கருதுகிறேன்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் கருணாநிதி மாதிரி பெரிய பேச்சுத்திறமை உள்ள ஒரு தலைவர் கிடையாது. அப்படி இருக்கும்போது அவர் தனது செயலில் மட்டுமே திறமையை காட்ட முடியும். அவர் தனது செயல்களின் மூலம் தான் ஒரு செயல் தலைவர் என்பதை நிரூபிப்பார் என்று நான் கருதுகிறேன். தேர்தல் அறிக்கையில் இரு கட்சிகளுமே குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஊக்கதொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த முயற்சி செய்வார்கள். அறிவித்த முழு தொகை இல்லை என்றாலும் பகுதி தொகையாக கொடுக்க முயற்சி செய்வார்கள் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

  • தமிழக அரசின் 5 லட்சம் கோடி கடன் :

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 5 லட்சம் கோடிக்கு அதிகமான கடனில் உள்ளது. இந்த நிலையில், குடும்ப பெண்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க நிதி ஆதாயங்களை உருவாக்க அரசு முயற்சிக்க வேண்டும். இதில் தேர்தல் அறிக்கையில் நிதி ஆதாயங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்த அரசு முயற்சிக்கும். தற்போது பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. புதிதாக ஆட்சிக்கு வரும் கட்சி பெட்ரோல் டீசல் மீதான மாநில வரிகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இந்த முயற்சி மேற்கொள்ப்படுமா என்பது தெரியவில்லை.

  • நீட் தேர்வு ரத்து :

நீட் தேர்வை நீக்குவோம் என்று திமுக அறிவித்துள்ளது. அதிமுக நீட் தேர்வு குறித்து அறிவிக்க முடியாது என்பதால் திமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்றே நான் கருதுகிறேன். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறியுள்ளது. அதனால் நீட் தேர்தவில் தற்போதைய நிலையே தொடரும். இதில் திமுகவின் முயற்சி வெற்றி பெறும் என்று நான் கருதவில்லை.தமிழகத்திற்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளதால், நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து.

  • வன்னியர்கள் இடஒதுக்கீடு :

தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை விக்கிரவாண்டி தேர்தலிலேயே திமுக அறிவித்திருந்தது. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது போல மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சமூகத்தினருக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை. இவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எது உங்களை தடுத்தது. ஏன் இந்த இடத்தில் எடப்படி அரசு சறுக்கிவிட்டது.  இதனை செய்ய தவறிய எடப்பாடி அரசை கண்டிக்கிறேன்.

  • மத்திய மாநில அரசு இணக்கம் :

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசுடன் இணக்கம் இருக்கத்தான் செய்யும். மத்திய மாநில அரசு நல்லுறவாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டிலே பிரதமர் மோடி மதித்த தலைவர் ஸ்டாலின்தான். அவசர சட்டத்தை எதிர்த்த ஒரே நபர் கருணாநிதி மகன் ஸ்டாலின் என்தால் அவர் மீது பிரதமர் மோடிக்கு மரியாதை இருக்கிறது. இடதுக்கீடு தொடர்பாகவும் ஸ்டாலின் தான் மோடியிடம் பேசினார். மேகதாது அணை தொடர்பாக ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை தான் மோடி மதித்தார். மோடி ஸ்டாலினை பெரிய அளவில் மதிக்கிறார். அவசர சட்டத்தை எதிர்த்தவர்கள் மீது மோடிக்கு மரியாதை உண்டு. அந்த வகையில் கருணாநிதியின் குடும்பத்தின் மீது மோடிக்கு தனி மரியாதை உள்ளது. இந்த மரியாதை மத்திய மாநில அரசுக்கு இடையேயான நல்லுறவுக்கு ஊன்றுகொலாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  • எய்ம்ஸ் மற்றும் காவிரி மேகதாது அணை :

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் கோரிக்கை, எய்ம்ஸ் எங்களுக்கு தேவை. சிறப்பாக மருத்துவ வசதி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு தேவை. இந்தியாவில் அதிகமாக ஜி.எஸ்.டி வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. அதனால் எய்ம்ஸ் மருத்தவமனை எங்களுக்கு தேவை என்பது குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  காவிரி மேகதாது அணை இரு மாநில உரிமைகள் மற்றும் சட்ட சிக்கல்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து தமிழகத்தில உரிமைகைளை நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கர்நாடக மாநில அரசு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரு மாநில அரசுடன் பேச்சுவாத்தை நடத்தி மத்திய அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment