போட்டி இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதியின் கூட்டணி யுக்தியை பின்பற்றுவாரா?

ஸ்டாலின் கடந்து வந்த பாதை - ஒரு பார்வை

By: Updated: August 12, 2018, 05:20:53 PM

அருண் ஜனார்தனன்

ஸ்டாலின் எனும் புதிய தொடக்கம் : 1967ல் தொடங்குகிறது ஸ்டாலினின் அரசியல் பயணமும். திமுக கட்சியின் பிரச்சாரத்திற்காக தன் அரசியல் பணியை தொடங்கிய ஸ்டாலின் 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்தார். அவரின் பெயரைச் சுற்றி எப்போதுமே ஒரு கதை ஓடும்.

ஸ்டாலின் என்ற பெயர் ஏன் வந்தது என்று? ரஷ்ய தலைவர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தயாளு அம்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் அக்குழந்தைக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டார் என்றும் சொல்வார்கள். ஆனால் ஸ்டாலின் பிறந்த நான்கு நாட்கள் கழித்தே ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். இருப்பினும் ரஷ்யாவின் ஸ்டாலினுடைய பெயரை தன் மகனுக்கு வைத்ததிற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கருணாநிதியின் நண்பர் நாகநாதனிடம் கருணாநிதிக்கு அடுத்து கட்சியின் தலைமை யாராக இருப்பார் என்பது தொடர்பாக பேசிய போது அவர் 25 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வினை நினைவு கூறுகிறார். “வடக்கு மற்றும் மத்திய தமிழக மாவட்டங்களில் பிரச்சாரத்திற்காக போகும் போது கருணாநிதியின் ஆதரவு யாருக்கு? என்று நாகநாதன் கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர் “நான் யாருக்கும் எந்த ஆதரவினயும் தரமாட்டேன். யார் உழைக்கின்றார்களோ அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு தானாக வந்து சேரும்” என்று குறிப்பிட்டார். தனக்குப் பின் தலைமைக்கு யார் வருவார் என்று மாவோ குறிப்பிடாததைப் போல் கருணாநிதியும் குறிப்பிடவில்லை.

ஆனால் கலைஞருக்குத் தெரியும் ஸ்டாலினுடைய திறமை என்னவென்று. அதற்காக ஸ்டாலினை நினைத்து பெருமிதம் அடைந்தார் கருணாநிதி.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்

2016ம் ஆண்டு மிகவும் முனைப்புடன் கட்சிப் பணிகளையும் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டார். அப்போதும் கூட கருணாநிதி, இயற்கை எனக்கு ஏதாவது செய்தால் நிச்சயம் இம்முறை ஸ்டாலின் முதல்வராவார் என்றார். 2017ல் தன்னுடைய 93வது பிறந்தநாள் முடிந்த சில நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்பு செயல் தலைவராக பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 7ம் தேதி தன்னுடைய 94 வயதில் காலமடைய திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

அவர் கடந்து வந்த பாதை

1990களின் பிற்பாதியில் தூர்தசன் தொலைக்காட்சியில் குறிஞ்சி மலர் என்ற நாடகத்தில் ஸ்டாலின் நடித்து வந்தார். 2006 – 2011ம் ஆண்டில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவி வகித்தார். இந்த கட்சித் தலைமை என்பது மிகவும் பெரிய பொறுப்பாகும். இதற்காக ஸ்டாலின் காத்துக் கொண்டிருந்த காலங்களும் மிக நீண்டது. இவர் கலைஞர் போல் அதிகமாக படிப்பவரும் இல்லை, எழுதுபவரும் இல்லை என்பதையும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கலைஞருக்கு பின், இந்த தலைமையில், மக்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. சென்னை மக்களுக்கு இவரை மேயராக தெரியும். தமிழக மக்களுக்கு ஸ்டாலினை துணை முதல்வராக நன்றாக அறிவார்கள். 1996 – 2001ற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை மேயராக இருந்தார். அவர் துணை முதல்வராக பணியாற்றிய காலத்தில் ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு ஒதுக்கிய அமைச்சரவையை சரியாக பயன்படுத்திக் கொண்டு சுய உதவிக் குழுக்களை பிழைகள் இன்றி நடத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் ஸ்டாலின். சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியை மணிக்கணக்காக மேடையின் நின்று வழங்கியிருக்கிறார்.

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். பின்பு ஆர்.கே. நகர் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியுற்றது திமுக. 2016ம் ஆண்டு தோல்வியுற்றிருந்தாலும் 89 எம்.எல்.ஏக்களைப் பெற்று பெரிய எதிர்கட்சித் தலைவராக சட்டசபை செல்லும் அளவிற்கு ஸ்டாலினிற்கு செல்வாக்கினைக் கொடுத்ததும் அந்த தேர்தல் தான். ஆனால் ஆர்.கே நகர் தேர்தல் மீண்டும் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு ஸ்டாலினை அதிகமாக குறை கூறுகிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

மீண்டும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் திமுகவின் மீதான அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். அதில் வெற்றி பெற்று தன்னுடைய பலத்தினை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் திமுகவின் புதிய தலைவர்.

கூட்டணி ஆட்சியில் கலைஞரின் பாதையை பின்பற்றுவாரா ஸ்டாலின்

2004ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது பாமக. பாமக 7 தொகுதிகளில் இடம் கேட்க திமுக 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த இரண்டு தொகுதிகளுக்குப் பதிலாக ராமதாஸின் மகன் அன்புமணிக்கு ராஜ்யசபாவில் இடம் அளிப்பதாக கூறியிருந்தார் கருணாநிதி. லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தாலும், அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக கூறப்பட்டது. அதேபோல கருணாநிதி கொடுத்தார். கலைஞரிடம் இருந்து அவர் மகன் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாஜகவுடன் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள திமுக தலைமை விரும்பியதும் கிடையாது மேலும் அது திமுக கொள்கைகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் லோக்சபாவில் அதிக இடங்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் என யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும் குறிப்பிடுகிறார்கள் திமுக கட்சியினர்.

மற்ற கட்சித் தலைவர்கள் ஸ்டாலினின் தலைமைப் பற்றி என்ன சொல்கிறார்கள்.?

அதிமுக கட்சித் தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கூறும் போது “ஸ்டாலினின் தலைமையில் திமுக எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே அரசியலில் இருந்து ஆர்காட் என்.வீராசாமி வெளியேறிவிட்ட நிலையில் துரைமுருகன் மட்டும் தான் ஸ்டாலினின் வட்டத்தில் இருக்கிறார். அவர் ஸ்டாலினை சிறப்பாக வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இருப்பது போலவே ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவாரானால் அவரை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் யாருக்கும் இல்லை என்றும் சொல்லும் நபர்களும் கட்சியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குடும்ப அரசியல்

முரசொலி மாறன் கருணாநிதி காலத்தில் எப்படி டெல்லியில் இருந்து செயல்பட்டாரோ அப்படியே கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ. ராசா ஆகியோர் ஸ்டாலினிற்காக செயல்படுவார்கள்.

ஆ.ராசா ஸ்டாலின் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தயாநிதி மாறன் நிலைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

அழகிரி மற்றும் கனிமொழி என இருவருடனும் பயணிக்கவே விரும்புகிறார் ஸ்டாலின். அழகிரியால் புதிய தலைமைக்கு எந்த ஒரு பங்கமும் வராது.

கனிமொழி இது குறித்து பேசும் போது நான் திமுக கட்சியின் உறுப்பினராகவே நான் செயல்படுகிறேன். இங்கு ஸ்டாலினின் தங்கையாக நான் வேலை செய்யவில்லை. அதனால் இது குடும்ப அரசியலின் கீழ் ஒரு போதும் வராது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் கனிமொழிக்கும் ஸ்டாலினிற்கும் இடையேயான பாசப்பிணைப்பினை கட்சியினர் அறிவர். கலைஞரின் மரணத்திற்கு அழுத ஸ்டாலின் அதற்கு முன்பு வெடித்து அழுதது கனிமொழி சிறையில் அடைக்கப்பட்ட போது தான். கட்சியினர் அனைவரும் “கனிமொழிக்கு ஒன்றும் ஆகாது என்று கூறிய போதும் கூட, எனக்குத் தெரியும் சிறை வாழ்க்கை எவ்வளவு கொடியது” என்று கூறி அழுதாராம் பாசக்கார அண்ணன். எமெர்ஜென்சி நேரத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினிற்கு பிறகு யார் ?

இவர் இன்று கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள இருக்கும் காலத்தில் நாற்பது வயதாகிய தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினை அரசியலில் களமிறக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்.

இப்படியாக ஒரு முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் ஸ்டாலினிற்கும் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் அவர்களுக்கும் இடையில் அதிக அளவு மனக் குழப்பம் ஏற்படும் என்று திமுக வட்டாரம் குறிப்பிட்டிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Thalapathis time mk stalin finally emerges as the undisputed chief of dmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X