Advertisment

எண்ணெய் பனைமர விவசாயத்திற்கு அழுத்தம் தரும் இந்தியா; இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகள் என்ன?

அரசு சலுகைகளுடன் விவசாயிகள் பாரம்பரிய பயிர்களான அரிசி மற்றும் மக்காச்சோளத்திலிருந்து பாமாயிலுக்கு மாறுவதால் வனப்பகுதியை இந்த கொள்கை பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றார். சமையல் மற்றும் இதர தேவைக்காக வடகிழக்கு மாநிலத்தவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தமாட்டார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oil palm tree cultivation push, india news, biodiversity

Sudhir Kumar Suthar

Advertisment

India palm oil cultivation push : பாமாயில் உற்பத்திக்காக ரூ. 11 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பாமாயில் மரம் எனப்படும் எண்ணெய் பனை மரங்களை வளர்க்க கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டெர் நிலப்பரப்பை அரசு அடையாளம் காணும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பு நாட்டின் ஒட்டுமொத்த பாமாயில் தேவைக்காக இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளை நம்பி இருப்பது குறையும் மேலும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும் என்று பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு இந்தியா 18.41 மில்லியன் டன் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.

தாவர எண்ணெய் உற்பத்தியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பனை தேசிய மிஷன் செயல்பட்டு வருகிறது. 90களில் ஏற்பட்ட மஞ்சள் புரட்சி எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரித்தது. நிலக்கடலை, ராப்சீட் மற்றும் கடுகு, சோயாபீன் - பல்வேறு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தொடர்ச்சியான அதிகரிப்பு இருந்தபோதிலும், அது அதிகரித்து வரும் தேவைக்கு ஈடு செய்யும் வகையில் இல்லை. இந்த எண்ணெய் வித்துகளில் பெரும்பாலானவை குஜராத், ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் புஞ்சை நிலங்களில் வளர்க்கப்படுகின்றன.

பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் பாம் (NMEO-OP) தேசிய மிஷன் தொடங்குவதற்கான ஊக்கத்தை இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெற்றிக் கதைகளில் இருந்து பெற்றுள்ளது. இந்தோனேசியா கடந்த 10 வருடங்களில் பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளில் மிக முக்கிய ஒன்றாக மாறி, மலேசியாவை பின்னே தள்ளி முன்னேறியுள்ளது. உலக அளவில் 80% பாமாயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் இவை இரண்டும் ஆகும். இந்தோனேசியா தன்னுடைய உற்பத்தியில் 80%-த்தை ஏற்றுமதி செய்கிறது

ஆனால், இந்த திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளின் கிராமப்புற மற்றும் விவசாய நிலங்களின் தன்மையை மாற்றும் தன்மை கொண்ட இந்த கொள்கை முன்வடிவை கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். எண்ணெய் பனை சாகுபடி மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தும். தென்கிழக்கு ஆசியாவில் விவசாய மாற்றம் குறித்த ஆய்வுகள், எண்ணெய் பனை தோட்டங்களின் அதிகரிப்பு இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் குறைந்தது ஒரு முக்கிய காரணம் என்பதைக் காட்டுகிறது. எண்ணெய் பனைமரங்களை வளர்க்கும் நோக்கில் இந்தோனேசியா கடந்த 2020ம் ஆண்டு மொத்தமாக 1,15,495 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் இருந்த காடுகளை இழந்துள்ளது. 2002 முதல் 18 வரையிலான காலகட்டங்களில் 91,54,000 மில்லியன் ஹெக்டெர் வனங்களை இந்தோனேசியா இழந்துள்ளது. நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தை மோசமாக பாதிப்பதோடு, அது நீர் மாசுபாட்டை அதிகரிக்க வழிவகுத்தது. காடுகளின் பரப்பளவு குறைந்து வருவது கார்பன் உமிழ்வு அளவை அதிகரிப்பது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பது என குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது.

பாமாயில் தோட்டங்கள் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வழக்கமான நில உரிமைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில உரிமைகளே காடு சார்ந்து வாழும் இனத்தவர்களுக்கு வாழ்வாதாரம். பனை மரங்களை வளர்ப்பதற்காக மரங்கள் மற்றும் காடுகளை வெட்டுவதற்கு அனுமதிக்கும் சட்டம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அரசு அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் விவசாய வணிக குழுக்களுக்கு இடையே நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழி வகை செய்தது. வடகிழக்கு மாநிலங்கள் அரசியல் உணர்திறன் கொண்ட பகுதிகள், மற்றும் எண்ணெய் பனை மர தோட்ட முயற்சிகள் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற முயற்சிகள், சமுதாய சுயசார்பு கருத்துகளுக்கு எதிராக உள்ளது. இது போன்ற முயற்சிகளுக்கு அரசு ஆரம்பத்தில் தரும் ஊக்கம் ஏற்கனவே இருக்கும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரும். மேலும் விவசாய-சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் உணவுத் தேவைகளுடன் ஒத்திசைவாக இருக்காது. வேளாண் கொள்கைகளின் தாக்கத்தை புரிந்து கொள்ள 2020ம் ஆண்டில் நடத்தப்பட்ட சிறிய ஆராய்ச்சி ஒன்றின் போது, வேளாண் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவர் பாமாயில் தோட்டங்களுக்கு வன நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அருணாச்சல அரசின் மாற்றுக் கொள்கையைப் பற்றி எனக்குத் தெரிவித்தார். அரசு சலுகைகளுடன் விவசாயிகள் பாரம்பரிய பயிர்களான அரிசி மற்றும் மக்காச்சோளத்திலிருந்து பாமாயிலுக்கு மாறுவதால் வனப்பகுதியை இந்த கொள்கை பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றார். சமையல் மற்றும் இதர தேவைக்காக வடகிழக்கு மாநிலத்தவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தமாட்டார்கள். இந்த எண்ணெய் தொழிற்சாலைகளால் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் மருந்துகள், சோப்பு மற்றும் அழகு பொருட்களுக்கு மட்டுமே பயன்படும் என்றும் கூறினார்.

தற்போதைய முயற்சி உண்மைகளை புறக்கணிக்கிறது. வடகிழக்கு பிராந்தியம் 850 விதமான பறவைகளின் வீடாக இருக்கிறது. இங்கே மருத்துவ குணங்கள் கொண்ட பழங்கள், செடிகள் மற்றும் மூலிகைகள் உள்ளன. 51 வகையான காடுகள் உள்ளன. அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகள் வடகிழக்கு வளமான பல்லுயிரியலை எடுத்துக்காட்டுகின்றன. பாமாயில் கொள்கை இப்பகுதியின் இயற்கை செல்வத்தை அழிக்கக்கூடும்.

நிலையான விவசாயத்திற்கான தேசிய மிஷனின் கீழ் அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளுக்கும் முரண்பாடாக உள்ளது இந்த அறிவிப்பு. இருப்பிடம் சார்ந்த ஒருங்கிணைந்த மற்றும் கலப்பு விவசாய முறைகளை பயன்படுத்தி விவசாயத்தை அதிக உற்பத்தி, நிலையான, ஊதியம் பெறும் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அரசு கூறியது, ஆனால் இதற்கு மாறாக, வடகிழக்கு இந்தியாவின் வ்இவசாய முறையின் முழுமையான மாற்றத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது பனை மர வளர்ப்பு திட்டம்.

பாமாயில் சாகுபடி மலேசியாவில் வறுமை ஒழிப்பில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமான அளவை அதிகரிக்கிறது. இருப்பினும், உலகளாவிய பாமாயில் விலையில் மாறுபாடுகள் ஏற்பட்டால், பாமாயில் சாகுபடியைச் சார்ந்திருக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. முன்கூட்டியே அரசின் தலையீட்டின் உதவியுடன் அவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். கணிசமான எண்ணிக்கையிலான சிறிய நில உரிமையாளர்கள் மற்ற வருமான ஆதாரங்களைச் சார்ந்து இருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அத்தகைய விவசாய மாற்றம் தன்னிறைவு பெறாது மற்றும் உள்ளூர் சமூகங்களை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிரியலைப் பாதுகாக்க, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஏற்கனவே பனை மரம் நடவு செய்வதில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. 2018 ஆம் ஆண்டில், இந்தோனேசிய அரசாங்கம் பாமாயில் உற்பத்தி செய்வதற்கான புதிய உரிமங்களுக்கு மூன்று வருட தடை விதித்தது. அண்மையில், இலங்கை அரசு எண்ணெய் பனை செடிகளை நீக்க உத்தரவு பிறப்பித்தது.

இதே போன்ற சூழலை இந்தியாவில் நிராகரிக்க முடியாது. பாரம்பரிய எண்ணெய் வித்துகளை குடும்பங்களில் பயன்படுத்தினாலும் சில மாநிலங்களில் எண்ணெய் பனை மர வளர்ப்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாமாயில் மீது அதிகரித்து வரும் கவனம் படிப்படியாக மழைநீர் எண்ணெய்களிலிருந்து விலகும். வடகிழக்கு இந்தியாவில் ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகளைத் தவிர, இத்தகைய போக்குகள் நீண்ட காலத்திற்கு நாட்டின் பிற பகுதிகளில் விவசாயிகளின் வருமானம், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஆகஸ்ட் 26, 2016 அன்று வெளியான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் Slipping on palm oil என்ற தலைப்பின் கீழ் இந்த கட்டுரை வெளியானது. கட்டுரையின் ஆசிரியர் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment