Advertisment

இந்து- இந்துத்துவவாதி விவாதத்தின் வரம்புகள்

பிரதாப் பானு மேத்தா; ஒரு உண்மையான இந்துவை வரையறுக்கும் மனோதத்துவ திட்டம் ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் பூனைக்கு மணி கட்டுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்

author-image
WebDesk
New Update
இந்து- இந்துத்துவவாதி விவாதத்தின் வரம்புகள்

இந்துத்துவாவின் அபிரிதமான உயர்வுக்குப் பின்னர், இந்து மதத்தை இந்துத்துவத்துடன் நெருக்கமாக கையாண்டு, கேவலமான இந்துத்துவவாதிகளுக்கு நல்லொழுக்கமுள்ள இந்துவை எதிர்ப்பதற்கான ஆசை அதிகரித்திருக்கிறது.இந்த பொருளின் மீது ராகுல் காந்தி விடாபிடியாக பேசி வருகிறார். ஆனால், தவிர இது ஒரு புதிய கலாசார யுகமாக இருக்கிறது. இந்த சலனம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்துத்துவத்தை பிரதிநித்துவப்படுத்தும் ரத்தம், பூமி ஆகியவை பற்றிய பிரசங்கத்தை விடவும், இந்து மத த்தை அதன் தார்மீக மதிப்புகளுக்காக வரிசைப்படுத்துவது இன்னும் நல்லதாக இருக்கும். இந்து பாரம்பர்யம் அரசியல் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாக மீட்டெடுப்பது நல்லது. ஆனால் இந்த சலனம் வரலாற்று ரீதியாக தொலைநோக்கு இல்லாதது மற்றும் தார்மீக ரீதியாக குழப்பமானதாகும்.

இந்த அணுகுமுறையைப் பார்க்கும்போது, இந்த பிரச்னையை சரி செய்து தீர்க்க விரும்புவது போல தெரிகிறது. நீங்கள் பார்த்த ஒரு உண்மையான இந்து, சகிப்புத்தன்மையற்றவராகவோ அல்லது அதிகாரத்துக்காக சலனப்படுபவராகவோ ஒருபோதும் இருக்க முடியாது. இந்து பாரம்பர்யத்தில் எந்த காலத்திலும் சிறந்த சிவ பக்தியாக கருதப்படுவது ராவணனைத்தான். அவரின் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்பது பளபளக்கும் கோயில்கள், குபேரின் நன்மை, சிறந்த யோக சக்திகள் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றுடன், மேம்பாடு மற்றும் மரபு இரண்டின் அதீத எழுச்சிமிக்க வெளிப்பாடாகும். தவிர அவர் அதர்ம செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். அவருடைய அகங்காரம் மற்ற அனைத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கிறது. இதனால், அவருடைய சிவ பக்தி குறைந்து விட்டதா? இல்லை. சிவ பக்தியை கொண்டிருக்கும் அவரை, அவரது சிவ பக்தியானது அதர்மத்தில் இருந்து பாதுகாக்கிறதா? இல்லை.

இந்த பாரம்பர்யம் இந்த சிக்கலான தன்மையை புரிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் நீங்கள் மக்களை வேறுபடுத்தி வரையறுக்க முடியாது. அசிசியின் பிரான்சிஸ் அல்லது போப் பியஸ் XI கிறிஸ்தவர்கள் என்பதைப் போல, ஒசாமா பின் லேடன், முல்லா சத்ரா இருவரும் இஸ்லாமியர்கள் என்பதைப் போல காந்தி, கோட்சே இருவரும் இந்துகள்தான். மதம் மிக உயர்ந்த அருட்கொடையைக் குறிக்கிறது. ஆனால், தவிர இது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவுவதாக இருக்கிறது.

ஒரே கிரேக்க அன்பின் கடவுள் நல்லதை நோக்கி உங்களை தள்ளமுடியும், எளிதில் நோயியல் வடிவத்தை எடுக்க முடியும். அவர்கள் இந்துகள் அல்ல என்பது சொல்வதன் மூலம் கோட்சே அல்லது ராவணனில் இருந்து நீங்கள் விடுபட முடியாது. அதே போல அவர்கள் நமது ஒட்டு மொத்த பொறுப்புடையவர்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் உண்மையில் இது ஒரு மலிவான சைகையாகும். "இந்துத்துவாவாதிகள் இந்துக்கள் அல்ல" சரியாக யார் இது என்று வற்புறுத்துவதற்காகவா?

இந்த அணுகுமுறைக்கு நேர்மை, தார்மீக நம்பகத்தன்மை மற்றும் செயல்படுவதற்கான இலக்கணம் ஆகியவை தேவை. உண்மையான இந்து மதம் என்பது சகிப்புத்தன்மை கொண்டது என்ற ஒரு கூற்றின் சலனம் எளிதான கலாசாரம் ஆகிவிட்டது. இது அதன் முன்னுதாரணமாக இயற்றப்பட்டதாக இருக்கிறது. முரண்பாடு இல்லாமல் அல்லது அன்னையின் மீதான பக்தியை தியாகம் செய்யாமல் பல்வேறு மத வாழ்க்கை வாழ்தல் குறித்து ராமகிருஷ்ண பரமஹம்சர் வரையறை செய்துள்ளார்.

விவரிக்க முடியாத வன்முறைக்கு நடுவே வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமின்றி பிறருடைய வலியை தாங்கிக்கொண்டும் காந்தியால் நிற்கவும் முடியும் தார்மீக சக்தியை பயன்படுத்தவும் முடியும். தார்மீக அறியாமை நிலையில் இருக்கும் இந்து, ஜவஹர்லால் நேருவால் ஒரு கூட்டத்தின் நடுவே குதிக்க முடியும். வகுப்புவாத வெறுப்பாளர்களுக்கு அறிவுரை கூற முடியும். ஆனால், அந்த பாத்திரத்தை இப்போது வகிப்பது யார்? வாரம் தோறும் கூர்கானில் நடைபெறும் தொழுகை இடையூறு செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொந்தரவு செய்யும் இந்துக் குண்டர்களுக்குப் பொது இடங்கள் அல்லது கொள்கைகள் மீது அக்கறை இல்லை என்பதை தெளிவாக கூறுவோம்.

ஒரு கீழ்தரமான மேலாதிக்கத்தை செலுத்துவது என்ற பாசாங்குடன்தான் இதனை அவர்கள் உபயோகிக்கின்றனர். வெள்ளிக்கிழமை யாருடைய பிரார்த்தனைக்கு இடையூறு விளைவிக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்? “என்ன மாதிரியான சிதைந்த கற்பனை, என இந்தக் கூட்டத்தினரிடம் நேரில் வந்து முகத்தோடு முகம் பார்த்து சொல்லும் தைரியம் உண்மையான இந்துவுக்கு இருக்குமா? சகிப்புதன்மை கொண்ட இந்து தலைவர்கள் எங்கே இருக்கின்றனர். ஒரு தார்மீகத்தை பிரதிபலிக்க அல்லது பிரார்த்தனை செய்பவர்களை பாதுகாக்க தங்கள் சகோதரத்துவத்தை காட்ட வேண்டும்.

இதனை சொன்னதற்காக நீங்கள் எதையும் அபாய படுத்தவில்லை என்றால், இது முழுவதும், "ஒரு உண்மையான இந்து சகிப்புத்தன்மையற்றவராக இருக்க முடியாது" என்பது ஒரு தார்மீக மழுப்புதல் மட்டுமே. இந்து மையக்கருத்தின் தொடர்ச்சியாக, நமது தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை விட கோழைத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

உண்மையான இந்து மதம் என்ற வழியை இதற்கு முன்பு நாம் முயற்சித்தோம். விவேகானந்தர், காந்தி மற்றும் வினோபா மற்றும் எண்ணற்றவர்களை கொண்ட தலைமுறையாக அது இருந்தது. ஆழமான மற்றும் பரவலான வகுப்புவாதத்தை 1930களில் ஏற்பட்ட இந்து மதத்தின் ஆன்மீக அடித்தளத்தை மறுவடிவமைக்கும் திட்டத்தால் தடுக்க முடியவில்லை.

இந்திய இஸ்லாமியவாதம் அந்த வகுப்புவாதத்தை தடுத்தது என்ற வாதம் இந்திய இஸ்லாமியத்தில் விவாத பொருளாக இல்லை. வரலாற்று நினைவுகள் குறுகியவை. ஆனால், ராஜிவ் காந்தி மேலும் சந்தர்ப்பவாதியாகவும், பி.வி.நரசிம்மராவ் மிகவும் நேர்மையாக ஆனால் வஞ்சகமாக, "இந்து மதத்துடன் ஈடுபடுவோம்" என்ற தளத்தை ஆக்கிரமிக்க முயன்றார். அமெரிக்காவில் "மிதமான" கிறிஸ்தவம் வன்முறையான ட்ரம்பிசத்துடன் சமாதானம் செய்து கொள்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். உண்மையான நம்பிக்கையாளர் மற்றும் போலியான ஒருவர் ஆகியவற்றுக்கு இடையே கோடிட்டவர் யார்?

நல்லது மற்றும் கெட்டதற்கு இடையே இந்த கோடுகளை வரைந்து விளம்பரம் தேடும் முயற்சியில், விசுவாசிகள் சகிப்புத்தன்மையை பெரிதுபடுத்துவதில்லை. யார் அதிகாரம் படைத்தவர் என்பதற்கான மோதலை இது தீவிரப்படுத்துகிறது. எந்த பொது தார்மீக வாத்திலும் ஒரு இந்துவாக அல்லது முஸ்லீம் ஆக பேசுகின்றேன் என்பதை முன்னெடுக்கும்போது, பொதுவாக ஏற்கனவே நீங்கள் இடத்தை இழந்திருக்கலாம். அங்கே அடையாளம் காரணத்தை காலனித்துவப்படுத்தும். இந்த அனைத்தும் தொடர்ந்து அடையாளத்தை வலுப்படுத்தும். தார்மீக அனுதாபங்களை அதிகரிக்காது.

ஒவ்வொருவரும் தங்களின் உண்மையான மதம் குறித்து வெறுமனே பின்வாங்கும்பட்சத்தில் நல்லிணக்கம் உருவாகும். தவிர இது முட்டாள் தனமான நடத்தை சிந்தனையை ஊக்குவிக்கும். ஒரு மனோதத்துவ உணர்வில், ஒருவேளை நடக்கலாம். ஆனால், இந்த விதமான சிந்தனையானது, அரசியலில் உண்மையான சர்ச்சைகள் பற்றி சிந்திக்க உதவாது.

சமூகத்துக்குள் பிரதிநிதித்துவம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்? பொது இடங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும்? வரலாற்றின் சர்ச்சைக்குரிய பிரதிநிதித்துவங்களை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார்?மக்களை சரிசமமாக நடத்தும் அமைப்புகளை நாம் எவ்வாறு உருவாக்குவது? இது யாருடைய தேசம்? அனைத்து விதமான நிந்தனைச் சட்டங்களுக்கும் எதிராக நாம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியுமா? இந்த வகையில்தான் ரத்தம் சிந்தப்பட்ட அரசியல் சர்ச்சைகள் உள்ளன. உண்மையான மதம் அல்லது மனோதத்துவத்துக்கு மீண்டும் திரும்பினால், அரசியல் உலகை நீங்கள் வெற்றிடமாகத்தான் விட வேண்டியிருக்கும். தவிர இந்து மதம் குறித்தான விவாதமானது, பாஜக விரும்பிய குழப்பத்தை சரியாக உருவாக்குகிறது.

இறுதியாக, மத மனோதத்துவத்தில் இந்த சரிவு, மண்வெட்டியை மண் வெட்டி என அழைப்பதை தவிர்க்கிறது. மதவெறியை தூண்டும் அல்லது மோசமான தப்பெண்ணத்தை பரப்பும் நபர்களின் பிரச்னை அவர்கள் "கெட்ட இந்துக்கள்" என்பதல்ல.தீவிரமாக யாருக்கு கவலை? பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் கூட்டு நாசீசிஸத்தை அடிப்படை மனித ஒழுக்கத்தின் வழியில் வர அனுமதித்துள்ளனர்.

மேலும் தனிநபரின் அடிப்படை கண்ணியத்தை மதிக்கும் சமூக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதற்கு தயாராக உள்ளனர்.இந்தியா ஒரு இந்துக்களின் தேசம் என்ற கூற்றானது, பதில்களை விடவும், அதிக அளவு கேள்விகளை உருவாக்குகிறது. ஒரு அற்பமான உண்மை பொருளில், இது ஒரு ஹிந்து தேசத்தை ஆட்டிப்படைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது வெறுமனே ஒரு பின்னணி உண்மையாக இருக்கிறது. அதில் இருந்து நாம் என்ன பின்பற்றுகின்றோம்.

இது முஸ்லீம்கள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள், தாராளவாதிகள் மற்றும் இந்துத்துவவாதிகளைக் கொண்ட நாடு அல்லவா? தவிர, இது அவர்களின் தேசமும் கூட. அவர்களுக்கென உரிமைகள் உள்ளன, அதை வடிமைக்க ஒரு குரல் உள்ளது. இந்த உரையாடலை நிர்வகிக்கும் பரஸ்பர அடிப்படை விதிமுறைகள் யாவை? நம்பகத்தன்மை உள்ளவர்களை யார் பாதுகாப்பது? என்பதுதான் சவாலாக இருக்கிறது.

நமது அரசியலின் பெரும் குழப்பத்தில், பெரும் அளவில் விஷம் உற்பத்தியாகிறது. காசி காற்றில் இருப்பதால், துளசிதாஸின் புகழ்பெற்ற ருத்ராஷ்டகத்தை தூய உணர்வின் பேரின்பமாக சிவனை நாம் தியானிக்கலாம்.வாழ்க்கையில் உயர்ந்தபட்ச முடிவை இது வரையறுக்கிறது. ஆனால் மகாதேவாவும் கிசுகிசுக்கிறார் என்று நான் சந்தேகிக்கிறேன்.

ஒரு உண்மையான இந்துவை வரையறுக்கும் மனோதத்துவ திட்டம் ஒரு ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் பூனைக்கு மணி கட்டுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். வரையறைகள் வகுப்புவாத விஷத்தை உறிஞ்சாது. அதை யார் செய்வார்கள் என்பது வெளிப்படையான கேள்வியாக இருக்கிறது.

இந்த கட்டுரை டிசம்பர் 16ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘Hindus after Hindutva’ என்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் த இந்தியன் எக்ஸ்பிரஸின் பங்களிப்பு ஆசிரியராவார்.

தமிழில் ஆகேறன்

Hindutva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment