Advertisment

கர்நாடகா ஹிஜாப் விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பில் இருக்கும் பிரச்சனை

ஹிஜாப் அணியவில்லை என்றால் இஸ்லாத்தில் தண்டனைகள் ஏதும் இல்லை என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றுவோம் என்றால், திருமணத்தை மீறிய பந்தம் மற்றும் ஓர்பாலின ஈர்ப்பு போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் ஏன் என்றால் இஸ்லாத்தில் இதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. குற்றமில்லை என்று கூறப்பட்டாலும் கூட மதத்தின் பார்வையில் இவை பாவங்களாகவே கருதப்படுகிறது.

author-image
WebDesk
New Update
The problem with the hijab ruling

Faizan Mustafa 

Advertisment

The problem with the hijab ruling: மனித சமூகத்தின் மையமாக மதம் பலநெடுங்காலமாகவே இருந்து வருகிறது. நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் அது இருக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி கர்நாடக மாநிலம் வெளியிட்ட சுற்றறிக்கையை உறுதிப்படுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பை வழங்கியது. ஹிஜாப் எப்படி இஸ்லாம் மதத்தின் அத்தியாவசிய பழக்கம் இல்லை என்பது குறித்து தலைமை நீதிபதி ஒரு மதத்தின் அத்தியாவசிய நம்பிக்கைகள், நடைமுறைகள் மீது நீண்ட விவாதம் நடத்த, இறுதியில் மனுதாரர்களின் வாதங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தது இந்த அமர்வு. தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான மூன்று பேர் கொண்ட முழு அமர்வு 129 பக்க தீர்ப்பை வெளியிட்டது.

வாக்காளர்களின் முடிவு சொல்வது என்ன?

சபரிமலை தீர்ப்பு (2018) மறுபரிசீலனை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு வடிவமைத்த ஏழு கேள்விகளை ஏற்றுக்கொண்டது குறித்து, நீதிபதிகள் எதையும் தெரிவிக்கவில்லை என்பது விசித்திரமானது. அத்தியாவசிய நம்பிக்கைகளில் சரி என்பது எது? மத குருமார்களின் பணியை உச்ச நீதிமன்றம் ஏற்பதா என்ற சந்தேகம் நிலவுவது சபரிமலை விவகார மறுபரிசீலனையில் தெளிவானது. பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரம் மீதான ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் இது வரலாற்று ரீதியாக மிக முக்கியமான தீர்ப்பும் கூட இது.

ஒவ்வொரு தனி மனிதனும், மனுஷியும் உள் மனத் தேடலை ஆய்வதற்கும், உண்மையை கண்டடைவதற்கும் தேவையான கண்ணியத்தைக் கொண்டுள்ளனர் என்ற அடிப்படையில் தான் மத சுதந்திரம் என்ற பதம் முன்வைக்கப்படுகிறது. ஒரு மதத்தை பின்பற்றுதல் என்பது தனிநபர்களை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமூகத்தை மேம்படுத்துகிறது. அந்த சுதந்திரத்தை மறுப்பது தேவையற்ற விரக்தி, மனசோர்வு, விலகி நிற்றல் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். சாரா ஸ்லினிங்ர் கூறிய “ஹிஜாப்பின் வரலாறு கொஞ்சம் சிக்கலானது. அது மதம் மற்றும் கலாச்சாரத்தின் தாக்கத்தினை பிரதிபலிக்கிறது” என்ற வாசகம் தீர்ப்பின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் சமூக அழுத்தத்திற்காக முக்காடு போட்டு முகத்தை மறைத்துக் கொள்கின்றனர். சிலர் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஹிஜாப் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் “விருப்பத்தின் பேரில்” என்று சில இஸ்லாமிய மாணவிகள் குறிப்பிட்டிருக்கும் பதத்தின் மீது நீதிமன்றம் சிறிது நேரம் தான் தன் பார்வையை திருப்பியுள்ளது.

டெல்லி ரகசியம்: மத்திய அமைச்சரை ஆஃப் செய்த ஓம் பிர்லா… குஷியான எதிர்க்கட்சிகள்

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25ல் குறிப்பிட்டிருக்கும் மத சுதந்திரம், இதர அடிப்படை உரிமைகளுக்கும் கீழே தான் செயல்படுகிறது என்று நீதிமன்றம் சரியாகவே முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் அடிப்படை உரிமைகளுக்கு இடையே மோதல் என்பது தொடர்பாக ஒரு கேள்வியும் வைக்கப்படவில்லை. மத சுதந்திரம் என்பது வெறுமனே ஒரு தனிமனித உரிமை என்று கூறுவது, அரசியல் சாசன பிரிவு 26-ன் கீழ் அனைத்து மத அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட உரிமை, ”குழு” உரிமை என்று கூறுவதைப் போன்றே சர்ச்சைக்குரியது. பிரிவு 25-ஐ போல், இது இதர அடிப்படை உரிமைகளுக்கு கீழ் பிரிவு 26 பட்டியலிடப்படவில்லை. உண்மையில் பிரிவு 26இல் பயன்படுத்தப்பட்ட மத விஷயங்களின் வெளிப்பாட்டு பின்னணியில் உருவானவை தான் ஒரு மதத்தின் அத்தியாவசிய நம்பிக்கைகள்.

ஷீரூர் மட விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரிவு 25ல் குறிப்பிடப்பட்டுள்ள மதம் என்பது, அந்த மதத்தின் ஒருங்கிணைந்த கூறுகளாக உள்ள அனைத்து சடங்குகள் மற்றும் நடைமுறைகளையும் உள்ளடக்கியது என்று கூறியது. இதே வகையில் மதத்தில் எது ஒருங்கிணைந்த கூறுகள், எது இல்லை என்பதையும் நீதித்துறையே முடிவு செய்துள்ளது. இப்படி செய்யும் போது அமெரிக்காவின் "உறுதிப்படுத்தல் சோதனையை" மறைமுகமாக நிராகரித்தது இந்திய நீதி அமைப்பு. அமெரிக்காவின் இந்த உறுதிப்படுத்தல் சோதனையில், ஒரு வாதி, ஒரு வழிபாட்டு அல்லது பழக்கவழக்க நடைமுறை, தன் மதம் சார்ந்த நடைமுறை தான் என்று உறுதிப்படுத்தினால் நீதிமன்றம் அது குறித்து மேற்கொண்டு விசாரிக்காது.

கர்நாடாக உயர் நீதிமன்றம் தற்போது இஸ்லாமின் உள்ளார்ந்த அம்சங்களில் ஹிஜாப் இல்லை என்று கூறுகிறது. இந்த ஆசிரியர் அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு தவறானது என்றும், இறையியல் விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு மிகவும் பரந்த அதிகாரங்களை வழங்குவதாகவும் எழுதி வருகிறார். இது இறை நம்பிக்கையை சார்ந்தது அல்லது சாராதது என்று கூறுவது மிகவும் எளிதானது. ஆனால் ஒரு நடைமுறையைக் காட்டிலும் மற்றொரு நடைமுறை சிறந்தது என்று சிறப்புரிமை நம்மால் வழங்கமுடியுமா?

ஒரு குறிப்பிட்ட மதம் உருவான காலத்திலேயே அதன் அத்தியாவசிய கோட்பாடுகளும், நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் உருவாகியிருக்க வேண்டும் என்று கூறுவது அபத்தமானது. ஆனந்த் மார்கி வழக்கில் தாண்டவ நடனம் தொடர்பான விஷயத்தில், உச்ச நீதிமன்றம் தாண்டவ நடனத்திற்கு பாதுகாப்பை வழங்க மறுத்தது. ஏன் என்றால் ஆனந்த் மார்கி நம்பிக்கை 1955இல் வந்தது, ஆனால் நடனம் 1966இல் அறிமுகமாகி பரவலாக்கப்பட்டது. மதங்கள் அனைத்தும் காலப்போக்கில் உருவாகின்றன. அவை வேதங்களிலும் ஸ்மிரிதிகளிலும் இல்லை எனவே அது இந்து மத பழக்கவழக்கங்களில் ஒன்றாக கருதப்படமாட்டாது என்று கூறுவது இந்து மக்களின் மதசுதந்திரத்தை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்தும்.

இந்திய மருத்துவக் கல்வியை பீடித்திருக்கும் நோய் என்ன?

2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட தி இந்தியன் யங் லாயர்ஸ் அசோசியேஷன் தீர்ப்பு மத நடைமுறைகளின் அடித்தளத்தை வலியுறுத்தியது. நடைமுறையின் அடித்தளம் மதத்திற்கு முன்பே இருக்க வேண்டும் அல்லது மதத்தின் தோற்றத்தில் இணைந்து நிறுவப்பட வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றமும் நம்பியது. ஆனால் இந்த நம்பிக்கை மிகவும் தவறானது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்ற மறுபரிசீலனைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. காந்தி vs பம்பாய் மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு மதத்தின் அத்தியாவசிய பாகங்கள் இவை என்று கூறும் அதிகாரம் அந்த மதத்தை சாராத வெளிநபர்கள் யாருக்கும் இல்லை என்றது. மேலும் மதசார்பற்ற அதிகாரத்திற்கு, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை தடை செய்யவோ மறுக்கவோ உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது.

ஹிஜாப் அணிவது அத்தியாவசியமானது அல்ல ஏன் என்றால் ஹிஜாப் அணியவில்லை என்றால் இஸ்லாத்தில் தண்டனைகள் ஏதும் இல்லை என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றுவோம் என்றால், திருமணத்தை மீறிய பந்தம் மற்றும் ஓர்பாலின ஈர்ப்பு போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் ஏன் என்றால் இஸ்லாத்தில் இதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. குற்றமில்லை என்று கூறப்பட்டாலும் கூட மதத்தின் பார்வையில் இவை பாவங்களாகவே கருதப்படுகிறது.

‘கல்வியும், மதமும் இரு கண்கள் போன்றவை.. இரண்டும் வேண்டும்’ – ஒலிக்கும் ஹிஜாப் குரல்

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதை குரான் கட்டாயப்படுத்தவில்லை. மேற்கூறிய 66 சுராக்களில் கூறப்பட்டிருப்பது வழிகாட்டுதல் மட்டும் தான். ஹிஜாப் அணியாமல் இருப்பதற்கான தண்டனை அதில் இல்லாத போது இந்த பார்வையை புனித குரானில் உள்ள மொழி அமைப்பு ஆதரிக்கிறது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஹிஜாப் அணிவதாகக் கூறப்படும் நடைமுறையை கடைபிடிக்காவிட்டால், ஹிஜாப் அணியாதவர்கள் பாவிகளாகிவிடுவார்கள், இஸ்லாம் அதன் மகிமையை இழந்து அது ஒரு மதமாக இல்லாமல் போய்விடும் என்று இல்லை என்று தன்னுடைய முடிவில் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது அனைத்து மதத்தினரும் பின்பற்றும் அவரவர் மதசுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஏன் என்றால் இதே வாதத்தை அனைத்து மத நடைமுறைகளுக்கும் பயன்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட நடைமுறையை அரசு அனுமதிக்காததால் எந்த மதமும் பெருமையை இழக்காது. இந்தத் தீர்ப்பு மனசாட்சியின் சுதந்திரத்தைப் பற்றிய மிகக் குறுகிய கண்ணோட்டத்தை எடுத்துக் கொண்டு பெரும் ஆதார சுமையைக் கோருகிறது.

மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு அதிகப்படியான அதிகாரங்களை இந்த தீர்ப்பு வழங்கியுள்ளதால் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு இது ஊக்கம் அளிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியைப் பொருத்தவரை இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல். பள்ளிக்கு வெளியே சிகரெட் பிடிப்பதற்காக தடியடியை ஆதரிப்பது குறித்த ரெக்ஸ் Vs நியூபோர்ட் (1929) தீர்ப்பை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நீதிமன்றம் கண்டறிந்திருக்கிறது ஆனால் சீருடை இல்லாத பள்ளிகள் இருப்பது நீதிபதிகளுக்குத் தெரியாது போல.

அடிப்படை உரிமைகள் தொடர்புடைய உள்ளடக்கம் மற்றும் அவற்றின் செயல்திறன் நிலைகள் அவை செயல்படுத்தப்பட விரும்பும் சூழ்நிலைகள் அடிப்படையில் அமைந்த்து என்று நீதிமன்ற தீர்ப்பு கூறியிருப்பது சுதந்திரமான நிர்வாக அமைப்புகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுக்களில் தனியுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் பற்றிய கோரிக்கை இல்லை என்றும், அது வெறும் வழித்தோன்றல் உரிமைகளையே கோருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது நீதிமன்றம்.

பள்ளிகள் போன்ற தகுதி வாய்ந்த பொது இடங்களில் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தனிப்பட்ட உரிமைகளை வலியுறுத்த முடியாது என்று இறுதியில் தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம். அத்தகைய இடங்களில் கணிசமான உரிமைகள் கூட ஒரு வகையான வழித்தோன்றல் உரிமைகளாக உருமாறுகின்றன என்ற முடிவுக்கு நீதிமன்றம் சென்றது. உண்மையில், நீதிமன்றம் பல இடங்களில் அடிப்படை கடமைகள் விதிகளை, அடிப்படை உரிமைகள் போலவே நியாயமானது என்று மேற்கோள்காட்டியது.

This column first appeared in the print edition on March 16, 2022 under the title ‘A narrowing of freedom’. The author is Vice-Chancellor of NALSAR University of Law, Hyderabad. The views are personal

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment