பட்ஜெட் உரையில் இருந்தும், பட்ஜெட் கணக்குகளில் இருந்தும் பார்க்கும்போது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை அல்லது வளர்ச்சி விகிதத்தை துரிதப்படுத்துதல் அல்லது தனியார் முதலீடுகளை முன்னெடுத்தல் அல்லது திறனை அதிகரித்தல் அல்லது வேலை வாய்ப்பை உருவாக்குதல் அல்லது உலகில் அதிக பங்கை வென்றடுத்தலை பா.ஜ.க கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.
ப.சிதம்பரம்
குடியரசுத் தலைவர் உரை, பொருளாதார ஆய்வறிக்கை, நிதி நிலை அறிக்கை ஆகிய மூன்று ஆவணங்கள் மட்டுமின்றி, கிடைக்கின்ற பல வாய்ப்புகளின்போதெல்லாம் இந்த அரசின் கொள்கைகள், குறிக்கோள்கள் குறித்து கூறப்பட்டுள்ளன.
இதர விஷயங்களை எல்லாம் தூர வைத்து விட்டு, குடியரசுத் தலைவரின் உரையில், இந்த அரசு கடுமையான பொருளாதாரச் சரிவில் இருந்து மீளும் நோக்கத்துக்கான அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். என்னால் அப்படி ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பொருளாதார ஆய்வறிக்கையை புரட்டிப் பார்த்தேன். இந்த ஆண்டு இதனை புதிய நபரான கே.வி சுப்பிரமணியம் தயாரித்திருக்கிறார். பொருளாதாரத்தை விடவும் அவர் தமிழ் வசனங்களை மிகவும் விரும்பியிருக்கிறார் என்று தெரிகிறது. சொத்து உருவாக்குதல் நன்றாக இருக்கிறது. சொத்து உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது மையக்கருத்தாக இருக்கிறது. ஆலோசனை என்ற வகையில் பொருளாதார ஆய்வறிக்கயானது, ஒன்றும் ஒரு நூதனமானது அல்லது சர்ச்சைக்குரியது அல்ல. சந்தையில் அரசின் தலையீடு என்பது சந்தைக்கு உதவுவதை விடவும் காயத்தையே ஏற்படுத்தும் என்பதுதான் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள சவாலான அத்தியாயமாகும். ஆனால், அதற்கு அடுத்த நாள், நிதி அமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையின் ஆலோசனையை புறக்கணித்தார். கட்டமைப்பு ரீதியிலான இதர மறுசீரமைப்புகள் குறித்த பரிந்துரைகளையும் அவர் புறக்கணித்தார்.
2020-21-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் பார்ப்போம். இலக்கை அடையும் திறன், அடிப்படைத் தத்துவம், சீர்த்திருத்தங்கள் என்ற மூன்று தலைப்புகளில் பட்ஜெட்டின் கணக்குகள், முன்னெடுப்புகள், உரை ஆகியவற்றை ஆய்வு செய்ய விழைகின்றேன்.
மோசமான இலக்கு
2019-ம் ஆண்டு ஜூலையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்ட பின்னர், பெரும் அழுத்தங்கள் காரணமாக, பல விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2019-20-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையின் பட்ஜெட் மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பிடித்துக் கொண்டிருப்பது நியாயமல்ல. பல்வேறு தலைப்புகளில் அவர் தோல்வியடைந்து விட்டார் என்பது அவசியம் பதிவு செய்யப்படவேண்டும்.
ஜி.டி.பி 12 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று திட்டமிடப்பட்டதற்கு மாறாக (பெயரளவில்). 2019-20-ம் ஆண்டு ஜி.டி.பி 8.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி இருந்து வருகிறது. 2020-21-க்கான ஜி.டி.பி 10 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
3.3 சதவிகிதமாக பட்ஜெட் மதிப்பீடு இருக்கும் என்பதற்கு மாறாக, நிதிப்பற்றாக்குறை 2019-20 ம் ஆண்டு 3.8 சதவிகிதமாக இருக்கும். 2020-21-ல் 3.5 சதவிகிதமாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.16,49,582 கோடியாக வரிவருவாய் இருக்கும் என்ற மதிப்பீட்டுக்கு மாறாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.15,04,587கோடி மட்டுமே அரசால் வசூலிக்க முடியும். ரூ.1,05,000 கோடி முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் என்ற இலக்குக்கு எதிராக, இந்த செயலால் 65,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். 2019-20-ல் ரூ.27,86,349 கோடியாக மொத்த செலவினம் இருக்கும் என்ற நோக்கத்துக்கு எதிராக , கூடுதல் கடன் ரூ.63,086 கோடியுடன், ரூ.26,98,552 கோடியை அரசு செலவிட உள்ளது.
அடிப்படைத்தத்துவம் இல்லை
அனைத்திலும், ஒரு பொருளாதார அடிப்படைத்தத்துவத்தை பா.ஜ.க அரசு கொண்டிருக்கிறதா என்பது, கடுமையான சந்தேகத்துக்கு உரிய விஷயமாக இருக்கிறது. அடிப்படையில் அவர்களின் வழிகாட்டும் கொள்கைகள் நம்பிக்கை, பாதுகாப்பு வாதம், கட்டுப்பாடு, வர்த்தகர்களுக்கு ஆதரவான சார்பு (உற்த்தியாளர் மற்றும் நுகர்வோருக்கு எதிராக) தீவிர வரி விதிப்பு, அரசு செலவினங்களில் நம்பிக்கை ஆகியவையாகத் தோற்றமளிக்கின்றன.
அரசின் சிந்திக்கும் முறையில் மாற்றத்துக்கான அறிகுறி ஏதும் 2020-21 நிதி நிலை அறிக்கையில் காணப்படுகிறதா? என்றால் அதற்கு பதில் என்பது இல்லை என்பதாக இருக்கிறது. எனினும், நாடு எதிர்நோக்கிய நுண்ணிய பொருளாதார பிரச்னை குறித்த அரசின் எண்ணங்களை நிதி அமைச்சர் தெரிவிக்கவில்லை. கட்டமைப்பு காரணிகள் அல்லது சுழற்சி காரணிகளால் சுழற்சி ஏற்பட்டதாக அரசு நினைக்கிறதா என்பதையும் அவர் சொல்லவில்லை. அரசு தொடர்ச்சியாக இதனை மறுக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அரசு மறுப்பதாக இருப்பதால், பொருளாதாரமானது தேவைக்கட்டுப்பாடு மற்றும் முதலீட்டு பட்டினியில் இருக்கிறது. மறுப்புத் தெரிவித்தபடியே இருப்பதால், அரசானது இரட்டை சவால்களுக்கான திட்டமிட்ட தீர்வுகள் அல்லது அக்கறையான சீரமைப்பு நடவடிக்கைகளை பார்க்க மறுக்கிறது.
சீரமைப்புகள் குறித்த அரசின் ஆலோசனை என்பது வரிசெலுத்துவோருக்கு வரிசலுகை என்ற பெயரில் சிறிய ஆகாரம் கொடுப்பதுதான். சில மாதங்களுக்கு முன்பு பெருநிறுவனங்களுக்கு அது கொடுக்கப்பட்டது. பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி செலுத்துவோருக்கு 40,000 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெருநிறுவனங்களின் அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு, ஈவு தொகை விநியோக வரியை (Dividend Distribution Tax) நிதி அமைச்சர் விலக்கிக் கொண்டிருக்கிறார். ஈவு தொகை விநியோக வரியானது திறன்மிக்க வரியாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஈவுத்தொகை வருவாயானது, அனைத்துவிதமான வரி ஏய்ப்பையும் தடுக்கக் கூடியது. இதனை ரத்து செய்ததன் மூலம் வருவாயில் நிச்சயமான ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் இரண்டு வரி விதிகளை அறிமுகம் செய்திருக்கிறார். (ஒன்று விதி விலக்குகளுடனும், ஒன்று விதி விலக்குகள் இல்லாமலும் இருக்கிறது.) பல்வேறு விகிதங்களில் தனிநபர் வருவாய் வரி கட்டமைப்பு சிக்கலாக இருக்கிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது செய்த அதே தவறை இந்த அரசு செய்துள்ளது.
சீர்திருத்தங்களை விட்டுக் கொடுத்தல்
நிதி அமைச்சர் மூன்று கருத்தாக்கங்களை சுட்டிக்காட்டினார். ஒவ்வொன்றிலும் பல்வேறு பிரிவுகள், பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு இந்தியாவின் அபிலாஷை என்ற கருத்தாக்கத்தின் கீழ் மூன்று பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதே தொனியில், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி , அக்கறையான சமூகம் என மேலும் இரண்டு கருத்தாக்கங்கள் குறித்து ஒருமணி நேரம் பேசினார். அவர் பேசியபோது, கருத்தாக்கங்கள், பிரிவுகள், திட்டங்களின் எண்ணிக்கையை குறித்து வைக்காமல் விட்டு விட்டேன். பேச்சை கேட்டுவிட்டு, பட்ஜெட்டை பின்னர் படித்தேன், எந்த ஒரு துறையிலும், ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தும் சீர்த்திருத்தத்துக்கு சமமான எதையும் நான் கண்டுபிடிக்கவில்லை. தலைமைப் பொருளாதார ஆலோசகரின் உழைப்பு என்ன ஆனது என்று நான் ஆச்சர்யம் அடைந்தேன்.
மறுபுறம், தீவிரமான முகத்துடன் நிதி அமைச்சர் கூறியதை நினைவு கூர்கின்றேன்.
1.நாங்கள் 2006-16 ஆண்டு காலகட்டத்தில் 271 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கின்றோம்.
2.நாங்கள் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்.
3. தூய்மை இந்தியா இயக்கம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
4. ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வசதி கொடுத்திருக்கின்றோம்.
5. 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவாக்குவோம். (பொருளாதார ஆய்வறிக்கை, இந்த காலக்கெடுவை யாருக்கும் தெரியாமல் 2025-ம் ஆண்டுக்குள் தள்ளி விட்டது)
விவசாயத்துறை முதல் தனிநபர் நிதி வரை இந்தியன் எக்ஸ்பிரஸ் முழுமையாக நிதிநிலை அறிக்கையை கொடுத்துள்ளது.
பட்ஜெட் உரையில் இருந்தும் , பட்ஜெட் எண்களில் இருந்தும் எடுத்துக்கொண்டால், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை அல்லது வளர்ச்சி விகித த்தை துரிதப்படுத்துதல் அல்லது தனியார் முதலீடுகளை முன்னெடுத்தல் அல்லது திறனை அதிகரித்தல் அல்லது வேலை வாய்ப்பை உருவாக்குதல் அல்லது உலகில் அதிக பங்கை வென்றடுத்தலை பா.ஜ.க கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.
2020-21-ம் ஆண்டில், திருப்தியற்ற வளர்ச்சியுடன் நொண்டி அடித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரத்துடன் உங்களை நீங்களே இணையுங்கள். நீங்கள் தகுதியற்றவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதுதான் உங்களுக்கு பட்ஜெட்டில் கிடைத்தது என்று நான் அச்சப்படுகின்றேன்.
இந்த கட்டுரை முதலில், பிப்ரவரி 2-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Does the Finance Minister know her onions?’ என்ற தலைப்பின் கீழ் வெளியானது.
தமிழில்; கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.