Advertisment

இந்தியாவின் மக்கள் தொகை மாற்றத்துடன் வரும் சவால்கள்

ஏற்கனவே சிறிய குடும்பங்களை விரும்பிய தம்பதியினருக்கு, குடும்பக் கட்டுப்பாடு சேவைகளின் தரத்தை மேம்படுத்துதலுக்கு அப்பால் கொஞ்சம் செயல்பட வேண்டிய தேவையிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் மக்கள் தொகை மாற்றத்துடன் வரும் சவால்கள்

Sonalde Desai , Debasis Barik 

Advertisment

India’s demographic transition : மக்கள் தொகை ஈவுத்தொகை சிறியதாக இருக்கிறது. ஆனால் கருவுறுதல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் பிராந்திய மாறுபாடு காரணமாக இது நீண்ட காலம் நீடிக்கும்.முதியோர்களை ஆதரித்தலில் உள்ள சுமை அதிகரிப்பதால் தென்னிந்திய மாநிலங்கள் போராடுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான பணியாட்களை வடமாநிலங்கள் விநியோகிக்க உள்ளன.

வெற்றியானது அதன் சவால்களை கொண்டிருக்கும். வெற்றியை ஏற்றுக் கொள்ளுதல் முதல் சவாலாக இருக்கிறது. அதற்குள் வாழப் பழகுவது இரண்டாவது சவாலாக இருக்கிறது. தேசிய குடும்பநல சர்வே-5ல் வெளியிடப்பட்ட முடிவுகளில் இதுபோன்ற சவால்களை எல்லாம் முறியடிப்பதற்கான புதிய யுகத்தில் நாம் நுழைய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. என்எஃப்எச்எஸ்-5 என்பது மொத்த கருத்தரித்தல் விகிதத்தை 2.0 ஆக வைத்திருக்கிறது. இரண்டு பெற்றோர் இரண்டு குழந்தைகளைக் கொண்டுள்ளனர். நாம், கருத்தரித்தல் நிலை மாறுதலை அடைந்திருக்கின்றோம். பல்வேறு இளம் மக்கள் தொகையினர் காரணமாக மக்கள் தொகையானது தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால், கருவுறுதல் நிலை மாற்று என்பது இந்தியாவின் மக்கள் தொகை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இலக்கை அடைந்திருக்கிறது. இந்த சரிவானது, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த கருத்தரித்தல் விகிதம் 1.9 அல்லது அதற்கும் குறைவாகவும், ஏழு மாநிலங்களில் 1.6க்கு குறைவாகவும் நாடு முழுவதும் சீராக பரந்திருக்கிறது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களும் ஸ்வீடன் நாட்டைப் போல மொத்த கருத்தரிதல் விகிதமாக 1.7-1.8 என்ற விகிதத்தைக் கொண்டிருக்கின்றன. மாற்று கருவுறுதலை அடையாத பீகார், உத்தரபிரதேச மாநிலங்கள் கூட இந்த பாதையில் பயணிக்கின்றன. 2015-16 மற்றும் 2019-20க்கு இடையே உத்தரபிரதேசத்தின் மொத்த கருத்தரித்தல் விகிதம் 2.7ல் இருந்து 2.4 ஆக குறைந்திருக்கிறது. பீகாரில் மொத்த கருத்தரித்தல் விகிதம் 3.4ல் இருந்து 3.0 ஆக குறைந்திருக்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரண்டு பின்தங்கிய மாநிலங்களின் அசல் குழுக்களின் ஒரு பகுதியின் மொத்த கருத்தரித்தல் விகிதம் 2.0 என ஆகியிருக்கிறது.

எனினும் இந்த வெற்றியானது, அதன் சவால்களைக் கொண்டு வந்துள்ளது. கருத்தரித்தல் விகிதம் குறைந்திருக்கும் நிலையில், முதியோர்களின் விகிதம் அதிகரித்திருக்கிறது. சரியும் பணியாளர் தொகுதியைக்கொண்டு வயதானவர்கள் தொகையினை ஆதரிப்பது என்பது சமூகம் எதிர்கொள்ளும் சவாலாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் மக்கள் தொகை மாற்றத்தின் தொடக்கமானது, தலைவர்களுக்கு பெரிய சவாலை கொடுத்துள்ளது. தேசிய புள்ளி விவர அலுவலகத்தின் கூற்றுப்படி, 60 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகை விகிதம் இந்தியா மொத்தத்துக்கும் 2011ம் ஆண்டில் 8.6 சதவிகிதமாகும். இது கேரளாவில் 12.6 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் 10.4 சதவிகிதமாகவும் இருக்கிறது. இது 2031ம் ஆண்டில் கேரளாவில் மேலும் 20.9 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் மேலும் 18.2 சதவிகிதமாகவும் அதிகரிக்கக் கூடும் என்றும் மதிப்பிடப்படுகிறது. ஆச்சர்யகரமாக இவை இந்தியாவின் அதிக வளமான மாநிலங்கள் வரிசையில் இருக்கின்றன. இந்த மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகள் பெருகி வருவதை அடுத்து இதர மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். புலம்பெயர்தல் குறித்த குறைவான புள்ளிவிவரத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை தோராயமாக மதிப்பிடுவது எளிதல்ல. ஆனால், கொரோனா தொற்று பரவலின்போது பெரும் அளவில் புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த பணியாளர்கள் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தென் மாநிலங்களில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானத்தொழில் ஆகியவை பகுதி திறன் வாய்ந்த புலம் பெயர் தொழிலாளர்களை நம்பியிருப்பது தெரியவந்தது.ஒப்பந்த ஏற்பாட்டின் பேரில் வாகனங்களின் மூலம் வடமாநிலங்கள் மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்களில் இருந்து குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்தும் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதியவர்களை கொண்ட மாநிலங்கள் தங்களது பொருளாதார செழுமையை நிர்வகிக்க, இளம் தலைமுறையினரை அதிகம் கொண்ட மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை நம்பியிருக்கின்றன. இந்தியாவின் கூட்டாட்சியின் முக்கியமான பரிமாணங்கள் குறித்த நமது மனப்பான்மை மாறுவதற்கு நமக்கு சிறிது காலம் ஆகலாம். வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு அரசியல் அதிகாரத்தை மற்றும் மத்திய வளங்களை பகிர்ந்து கொள்வதற்கான வடிவம், மக்கள் தொகை வளர்ச்சி குறித்த, சரியாக செயல்படாத மாநிலங்களுக்கு விருதளிக்கக்கூடாது என்ற ஆசையுடன், கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான உறவு வடிவம் பெற்றிருக்கிறது.

தொகுதிகள் வரையறை ஆணையத்தின் வாயிலாக, மாநிலங்களின் மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாக க் கொண்டு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படுவதை இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டாயமாக்குகிறது. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலகட்டத்தின்போது 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் மக்கள் தொகை பங்கு அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்குவது 42வது திருத்தச்சட்டத்தின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரத்தானது உண்மையில் 2001ம் ஆண்டு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2031ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை 84வது திருத்தம் வரை மேலும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் தென்மாநிலங்களை விடவும் வடமாநிலங்களில் ஒரு தொகுதியின் மக்கள் தொகை மேலும் அதிகரிப்பதை நோக்கி செல்லும். 2011ம் ஆண்டில் உத்தரபிரதேசம் சராசரியாக ஒரு தொகுதியில் 25 லட்சம் பேரைக் கொண்டிருந்தது. தமிழ்நாடு 18.5 லட்சம் பேரை கொண்டிருந்தது.

மாநிலங்களுக்கு மத்திய ஒதுக்கீடுகளை பகிர்ந்தளிப்பதில், சரிவிகித த்தை கருத்தில் கொள்வதில் இன்னொரு பகுதியாக மக்கள் தொகை குறித்த தாக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது. பல்வேறு நிதி ஆணையங்களின் பரிந்துரைகளின் வாயிலாக மத்திய-மாநிலங்களுக்கு இடையேயான வருவாய் பகிர்வு நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு 1971ம் ஆண்டின் மக்கள் தொகை பகிர்வை உபயோகித்து 6 முதல் 14வது நிதி ஆணையம் வரை, மாநிலங்களுக்கு வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 15வது நிதி ஆணையம், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை புள்ளி விவரத்தை உபயோகித்தது. குறைந்த மொத்த கருத்தரித்தல் விகிதத்தைக் கொண்ட மாநிலங்களுக்கு வழங்குதல் என்ற அடிப்படையில் மக்கள் தொகை செயல்பாடு தகுதியாக இணைக்கப்பட்டிருக்கிறது.

பசுமை இந்தியா : எதிர்காலத்தை நோக்கிய பயணம்

அனைத்து மாநிலங்களிலும் நீடித்த கருத்தரித்தல் சரிவு மற்றும் தேசிய அளவிலான மாற்று மட்டத்திலான கருத்தரித்தல் ஒட்டுமொத்த சாதனை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், டிரம்ப்பின் சம உரிமை கொள்கையை தொடர்ந்து மக்கள் தொகை செயல்பாட்டை நோக்கமாக கொண்டிருக்க வேண்டுமா? இந்திய மக்கள் தொகையின் எதிர்காலம் குறித்த நமது கண்ணோட்டத்தை பொறுத்தே இதற்கான பதில் இருக்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்கள் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொண்டன அல்லது மாற்று கருவுறுதலில் சுமார் 1.7-1.8 என்ற மிதமான விகிதத்திற்கு கீழே நாம் திருப்தியாக இருக்கிறோமா? கூர்மையாக குறைந்த கருத்தரித்தலைக் கொண்ட சீனாவின் பாதையை இந்தியா பின்பற்ற வேண்டுமா? பிந்தையதுதான் எனில், இந்த பாதையை நோக்கி நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம். ஏற்கனவே சிறிய குடும்பங்களை விரும்பிய தம்பதியினருக்கு, குடும்பக் கட்டுப்பாடு சேவைகளின் தரத்தை மேம்படுத்துதலுக்கு அப்பால் கொஞ்சம் செயல்பட வேண்டிய தேவையிருக்கிறது.

நமது கருத்தளவில், மொத்த கருத்தரித்தல் விகிதம் 1.5க்கு கீழே மிகவும் குறைவாக இருப்பதற்கான இலக்கு தவறானதாக இருக்கக் கூடும். சீனாவின் அனுபவம் வெளிப்படுத்துவது, மிகக் குறைந்த கருவுறுதல், குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களை சார்ந்திருப்பது ஒரு தற்காலிக மக்கள்தொகை ஈவுத்தொகையை வழங்குகிறது. முதியோர்களை பாதுகாத்தலுக்கான சுமை அதிகரிப்பது நீண்டகாலத்துக்கு மிகையாக மாறலாம். இந்தியாவின் மக்கள் தொகை ஈவுதொகை சிறியதாக இருக்கலாம். அதனால், இந்தியா பாக்கியசாலியாக இருக்கலாம். ஆனால், கருத்தரித்தல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் பிராந்திய மாறுபாடான இது மேலும் நீண்டகாலத்துக்கு நீடிக்க வேண்டும். தென்மாநிலங்களைப் பொறுத்தவரை முதியோர்களை பாதுகாப்பதில் அதிகரிக்கும் சுமையைக் கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பணியாட்கள் தேவையை வடமாநிலங்கள் வழங்குகின்றன. தெற்கில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவதால், இதர மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்களின் அதிகரிக்கும் வேகம் தெற்கில் பொருளாதாரம் விரிவாக்கம் பெற உதவும்.

மக்கள்தொகை ஈவுத்தொகையின் மாநிலங்களுக்கு இடையேயான பகிர்தலுடன் மிதமான கருவுறுதல் வீழ்ச்சியின் இந்தப் பாதையை நாம் பின்பற்றத் தேர்வுசெய்தால், பின்னர் மக்கள்தொகை மாற்றத்தில் நுழைந்த மாநிலங்களைத் தொடர்ந்து தண்டிப்பதில் சிறிது நியாயம் உள்ளது. மக்கள் தொகை மாற்றத்தை நிர்வகிக்கும் சுமையில் இருந்து அடுத்த தொகுதி வரையறை ஆணையம், 16வது நிதி ஆணையம் ஆகியவை விடுவிக்கப்பட வேண்டும். இந்திய கூட்டாட்சியின் சிறந்த நலன்களுக்காக பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

The demographic twist’.என்ற தலைப்பிலான இந்த கட்டுரை டிசம்பர் 1, 2021 தேதியிட்ட அச்சுபதிப்பில் முதன் முதலில் வெளியானது. தேசாய் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், NCAER-தேசிய தரவு கண்டுபிடிப்பு மையத்தின் பேராசிரியர் மற்றும் மைய இயக்குநராகவும் உள்ளார்.டெபாசிஸ் பாரிக் NCAER-தேசிய தரவு கண்டுபிடிப்பு மையத்தின் சக ஃபெல்லோவாக உள்ளார். கட்டுரையின் கருத்துகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும்

தமிழில் ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Express
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment