/indian-express-tamil/media/media_files/2025/03/03/5MnyiBhdiRWbFXWCwL9o.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/17/L6quY0z1sP4cj9lfMRdx.jpg)
ஒட்டு மொத்த உடல் எடையை குறைக்கும் முயற்சியே பெரும் சவால் தான். அதிலும் வயிற்று பகுதியில் இருக்கும் தொப்பையை குறைப்பது எடை குறைப்பு முயற்சியில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். எடையை குறைப்பதில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது முக்கியம் . அந்த வகையில் உங்கள் தினசரி டயட்டில் எடையை குறைக்க உதவும் சரியான பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/zfjCQ25uHrUifRCcw8rs.jpg)
ஒருசில சில பழங்களில் ஃபைபர் சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் கொழுப்பை எரிக்கும் சேர்மங்கள் நிரம்பியுள்ளன. இவை உடல் எடை இழப்பிற்கு உதவுகின்றன, குறிப்பாக வயிற்றை சுற்றி கொழுப்பால் உருவாகும் தொப்பையை குறைப்பதில் கணிசமாக உதவுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும் 8 பழங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/nwWtBQ2lO1Su5eiLbW3b.jpg)
ஆப்பிள்: ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே எடையை குறைக்க உதவும் சிறந்த பழங்களில் ஒன்றாக இவை உள்ளன ஆப்பிள்களில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்த உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த கலோரி நுகர்வை குறைக்கிறது. மேலும் ஆப்பிளில் நிறைந்துள்ள பாலிஃபீனால் குறிப்பாக வயிற்றுப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பு செல்களை உடைக்க உதவுகிறது. இதுதவிர ஆப்பிள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. உப்புசம் மற்றும் வயிறு அசௌகரியம் ஏற்படாமல் தடுக்கின்றன.
/indian-express-tamil/media/media_files/DDJZwhXWIIxvDtjHxIlt.jpg)
பெர்ரி: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிக்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றன. இவை அனைத்துமே வயிற்று பகுதியில் காணப்படும் அதாவது தொப்பைக்கு காரணமான கொழுப்பை கரைக்க பங்களிக்கின்றன. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க பெர்ரிக்களில் உள்ள அந்தோசயினின்ஸ் உதவுகின்றன மற்றும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் குறைக்கின்றன. பெர்ரிக்கள் லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டவை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது. எனவே இதன் மூலம் நிலையான ஆற்றல் அளவைப் பராமரிக்க மற்றும் தேவையற்ற பசியைத் தவிர்க்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/ss1NyTpn0qQghf2u4dWk.jpg)
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழங்களில் காணப்படும் ப்ரோமெலைன் என்ற நொதி, புரதங்களை உடைக்க உதவி எடை இழப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த பழங்கள் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கின்றன. செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பது உப்புசத்தை குறைக்க மற்றும் வயிற்றை தட்டையாக வைக்க முக்கியமானது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நீண்ட நேரம் பசியின்றி இருக்கும் வகையில் நிறைவு உணர்வை அளிப்பதன் மூலம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதில் உள்ள இயற்கை இனிப்பு சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
/indian-express-tamil/media/media_files/fc2CXx4ApatgxeQNCwUR.jpg)
பப்பாளி: பப்பாளி பழங்களில் உள்ள பப்பேன் என்ற நொதி செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது மற்றும் வயிறு உப்புசத்தை தடுக்கிறது. எடையை இழக்க வேண்டுமென்றால் அதற்கு உங்கள் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பது அவசியம். செரிமான ஆரோக்கியம் மோசமாக இருந்தாலே உடலில் கொழுப்பு சேரும். அதேபோல பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கொழுப்பை உடைக்க உதவுகிறது மற்றும் உடலில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனை குறைக்கிறது. இந்த பழத்தில் இயற்கையாகவே கலோரிகள் குறைவு என்பதால் எடை குறைக்க முயற்சிப்போருக்கு இது ஒரு சிறந்த பழமாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/1vJCXlhFAA6ZYW16M7wN.jpg)
தர்பூசணி: ஒரு தர்பூசணி பழத்தில் 90%-க்கும் அதிகம் நீர் தான் இருக்கும். எனவே இந்த பழத்தை சாப்பிடுவது உடலில் திரவம் குவிவதை மற்றும் உப்புசத்தை குறைக்க சிறந்தது. இந்த பழங்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், எல்-சிட்ரூலின் என்ற அமினோ ஆசிட் அதிகமாக உள்ளது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொழுப்பு குவிவதை குறைப்பதன் மூலம் தொப்பை பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலை ஹைட்ரேட்டாக வைக்கின்றன மற்றும் எடை குறைப்பிற்கு உதவும் வகையில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/02/12/CpVjmzp3m1YcXxIJFWL1.jpg)
கிவி: கிவி பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆக்டினிடின் என்ற நொதி நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. முன்பே குறிப்பிட்டபடி செரிமான அமைப்பு சீராக இருந்தால் எடை குறைப்பு எளிது. உங்களின் செரிமான ஆரோக்கியம் மோசமாக இருந்தால் உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் காரணமாக தொப்பை பெரிதாக தெரியும். கிவியில் உள்ள அதிக நார்ச்சத்து நிறைவாக இருப்பதை ஊக்குவிக்கிறது. அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. இது லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் காரணமாக நிலையான ரத்த சர்க்கரை அளவு உறுதி செய்யப்படும். வயிற்றை சுற்றி கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.
/indian-express-tamil/media/media_files/cejaKDaV0uTx5RMJkpgi.jpg)
மாதுளை: மாதுளையில் நிறைந்துள்ள பாலிஃபினால் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இன்ஃபளமேஷன் மற்றும் குறிப்பாக வயிற்றை சுற்றி கொழுப்பு குவிவதை குறைக்க உதவுகின்றன. மாதுளை விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. அடிக்கடி மாதுளை ஜூஸ் குடிப்பது அல்லது மாதுளை விதைகளை தவறாமல் சாப்பிடுவது சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.