/indian-express-tamil/media/media_files/2025/02/18/fY5dBzTfW1M394WVWhME.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/26/jgDBIKA5qhYRZ35HsO8s.jpg)
இதில் செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். சர்க்கரை நோயை குணப்படுத்த வீட்டு அஞ்சறைப் பெட்டியில் மருந்திருக்கிறது. உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமான இன்று சர்க்கரை நோய் அறிகுறிகள், பாதிப்புகள் வீட்டு மருத்துவத்தில் குணப்படுத்தும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/22/dqhxBXXHPIEUQz5bM2uS.jpg)
அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் களைப்பாக இருக்கும், ஆறாத புண், பிறப்புறுப்பில் இன்பெக்சன்,காரணமில்லாமல் எடை குறைதல், இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு, மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/10/28/iWJ7xv2c6W9qIkq501nZ.jpg)
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.சிறுநீரகங்கள் சேதமடையலாம்.இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.உடலுறவில் இயலாமை ஏற்படலாம். மூளைச்சேதமும்,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால்,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/cwv7WM2PXeD33pnVtV7Z.jpg)
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.
/indian-express-tamil/media/media_files/YhX3HyAcbVXs8Z9kJX7r.jpg)
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/nSulK7yFtbPTofljD0QF.jpg)
நீரிழிவு நோயாளிகள் ஒரு சீரான உணவின் ஒரு பகுதியாக வாழைப்பழங்களை மிதமாக சாப்பிடலாம். வாழைப்பழங்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும்.
/indian-express-tamil/media/media_files/XQg9ieOmeXy68KpDSezv.jpg)
மிதமான முறையில் நுகரும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி பாதுகாப்பானது. இது அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக குறைந்த கிளைசெமிக் சுமை, அதாவது சிறிய பகுதிகளில் சாப்பிடும்போது இரத்த சர்க்கரை அளவை இது கணிசமாக பாதிக்காது.
/indian-express-tamil/media/media_files/2025/02/18/xMWm5IjCrBiGRekZm8yj.png)
அவரம்பூ என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பூ ஆகும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.