/indian-express-tamil/media/media_files/2025/11/01/natural-hair-dye-homemade-hair-dye-tamil-siddha-hair-care-dr-nithya-hair-tips-2025-11-01-19-31-36.jpg)
Natural hair dye| Homemade hair dye Tamil| Siddha hair care|Dr Nithya hair tips
/indian-express-tamil/media/media_files/2025/10/25/young-woman-with-gray-hair-early-gray-hair-concept_150893-3165-2025-10-25-14-26-26.jpg)
இன்றைய இளைஞர்கள் உட்பட பலரையும் பாதிக்கும் நரைமுடிப் பிரச்சனைக்கு, கெமிக்கல் டை (Chemical Dye) பயன்படுத்துவதால் ஏற்படும் தோல் ஒவ்வாமை (Skin Allergy), அரிப்பு, முகம் வீக்கம் போன்ற பக்கவிளைவுகளைத் தவிர்க்க, இயற்கையான ஹேர் டை தயாரிக்கும் முறையை சித்த மருத்துவர் டாக்டர் நித்யா வழங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/05/natural-hair-dye-2025-08-05-21-41-54.jpg)
இயற்கை ஹேர் டை பொடி தயாரிக்கும் முறை
கெமிக்கல் டை-யினால் ஏற்படும் ஒவ்வாமைகளைத் தவிர்க்க, வீட்டில் எளிதில் தயாரிக்கக்கூடிய மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கும் இயற்கை ஹேர் டை பொடியின் செய்முறை:
/indian-express-tamil/media/media_files/2025/11/01/hair-dye-diy-2025-11-01-19-09-48.jpg)
தயாரிப்பு மற்றும் உபயோகிக்கும் முறை:
மேற்கண்ட ஆறு பொடிகளையும் ஒன்றாகக் கலந்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/11/01/images-3-2025-11-01-19-11-09.jpg)
ஒன்று அல்லது இரண்டு நாட்டு மாதுளைத் தோலை சிறு துண்டுகளாக்கி, 4 கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அது 1 கிளாஸ் அல்லது முக்கால் கிளாஸாக வற்றியதும் வடிகட்டவும். இந்தக் கஷாயம் சூடாக இருக்கும்போதே, தேவையான அளவு பொடியில் விட்டு பேஸ்ட் போலக் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/12/26/iyphZeZvuwk4skDNWubQ.jpg)
மறுநாள் காலையில், பேஸ்ட்டை வேர்களில் படும்படி முடியில் தடவி, மூன்று மணி நேரம் அப்படியே உலரவிடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/25/ayurvedic-triphala-churan-trifala-powder-is-ancient-medicine-bowel-movement-indigestion_1093310-1046-2025-10-25-14-27-19.jpg)
டை நீங்காத இயற்கை ஷாம்பு
இயற்கை டை பயன்படுத்திய பிறகு, ஷாம்பு பயன்படுத்தினால் டை நீங்கிவிடும். அதற்காக, டாக்டர் நித்யா பரிந்துரைக்கும் இயற்கை ஹேர் வாஷ் லிக்குவிட்:
/indian-express-tamil/media/media_files/ieItpCxbSXoHPdeeYffd.jpg)
சீயக்காய், நெல்லிக்காய், பூவந்திக்கொட்டை ஆகிய மூன்றையும் 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள், அதைச் சுண்டக் காய்ச்சி, 400 மிலி அளவுக்குக் குறைத்து வடிகட்டி, அந்தத் திரவத்தைப் பயன்படுத்தித் தலைக்குக் குளிக்கவும். இந்த ஷாம்பூ முடியில் உள்ள பிசுபிசுப்பு, அழுக்கு மற்றும் சிகிடு போன்றவற்றை நீக்கி, முடி உதிர்வதைத் தடுத்து, நரைமுடிப் பிரச்சனையைக் குணப்படுத்த உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/25/medium-shot-woman-applying-hair-product_23-2149173130-2025-10-25-14-29-42.jpg)
குறிப்பு:
முதல் முறை டை போடும்போது நிறம் சற்றுக் குறைவாகத் தெரிந்தால், தொடர்ந்து இரண்டு நாட்கள் இதை ஃபாலோ செய்யலாம். தலைமுடி உதிர்தல், பிளவுபடுதல் (Split Ends), முடியின் வறட்சி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இது மிகச் சிறந்த தீர்வாகும். வாரத்திற்கு ஒருமுறை ஆயில் பாத் எடுத்து, இந்த முறையைப் பின்பற்றினால் நரைமுடி நிரந்தரமாகக் குணமாகும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us