/indian-express-tamil/media/media_files/2025/10/30/bunch-fresh-pink-peony-growing-garden_23-2147924865-2025-10-30-20-55-21.jpg)
Rose plant fertilizer| Homemade liquid fertilizer| Terrace garden tips
/indian-express-tamil/media/media_files/2025/10/30/close-up-man-holding-elegant-house-plants_23-2148488534-2025-10-30-20-52-43.jpg)
மாடித் தோட்டத்தில் ரோஜாச் செடி வைத்திருக்கும் நண்பர்களே! உங்கள் செடிக்கு எல்லா உரங்களையும் கொடுத்துப் பார்த்தும் பூக்களே வரவில்லையா? புதிய துளிர்கள் எட்டிப் பார்க்க மறுக்கிறதா? இந்த சக்தி வாய்ந்த, ஆனால் முற்றிலும் இலவசமான திரவ உரத்தை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்! கடைகளில் காசு கொடுத்து எந்தப் பொருளையும் வாங்கத் தேவையில்லை. நீங்கள் வேஸ்ட் என்று நினைத்துக் குப்பையில் தூக்கி எறியும் பொருட்களையே பயன்படுத்தி இந்த அதிசய உரத்தைத் தயாரிக்கப் போகிறோம்.
/indian-express-tamil/media/media_files/2025/10/30/top-view-trash-cooking-concept_23-2149056466-2025-10-30-20-54-15.jpg)
உரத் தயாரிப்பு முறை (3 நிமிடத்தில்):
ஒரு காற்றுப் புகாத கொள்கலன் (Air Tight Container) எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவுக்கு வாழைப்பழத்தோல், ஒரு கைப்பிடி அளவுக்கு வெங்காயத்தோல் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் புதிய டீத்தூளைச் சேர்க்கவும். (நீங்கள் பயன்படுத்திய டீத்தூளாக இருந்தால், அதைக் கழுவி, வெயிலில் காய வைத்த பிறகு இரண்டு ஸ்பூன் சேர்க்கலாம்).
/indian-express-tamil/media/media_files/2025/10/30/images-2025-10-30-20-54-35.jpg)
ஊறவைத்தல்:
இந்தக் கலவை முழுவதும் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, பாட்டிலை மூடி, இரண்டு நாட்களுக்கு நிழலான இடத்தில் வைத்து விடுங்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் திரவ உரத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/10/30/man-pours-water-from-gas-camping-stove_346278-104-2025-10-30-20-54-54.jpg)
செடிகளுக்குப் பயன்படுத்தும் முறை
வடிகட்டிய இந்தத் திரவ உரத்தை ஒரு பங்கு எடுத்துக்கொண்டால், அதனுடன் எட்டு மடங்கு சாதாரணத் தண்ணீரைக் கலக்க வேண்டும். செடியின் மண் காய்ந்திருக்கும்போது மட்டுமே இந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த உரத்தை 20 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் ரோஜாச் செடிகளுக்குப் பயன்படுத்துங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/10/30/bunch-fresh-pink-peony-growing-garden_23-2147924865-2025-10-30-20-55-21.jpg)
விளைவு:
பூக்காத செடிகளில் கூட, இந்த எளிய வீட்டு உரம் புதியத் தளிர்களை உருவாக்கி, விரைவிலேயே கொத்துக் கொத்தாகப் பூக்கள் பூக்க உறுதுணையாக இருக்கும். இந்த ரகசியத்தைப் பயன்படுத்தி உங்கள் மாடித் தோட்டத்தை வண்ணமயமாக்குங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us