வெங்காயம் மற்றும் தயிர் இரண்டிலும் உள்ள சத்தான கலவையானது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின்-B5, வைட்டமின்-B12, பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், அயோடின், ஜிங்க், பாஸ்பரஸ் போன்றவற்றின் நல்ல மூலாதாரமாக தயிர் உள்ளது. மறுபுறம், வைட்டமின்-A, வைட்டமின்-B, வைட்டமின்-C தவிர, வெங்காயத்தில் ஃபோலிக் அமிலம், கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன.