Advertisment

விண்வெளியில் மிக வேகமாக வளரும் கருந்துளை கண்டுபிடிப்பு!

இரண்டு பெரிய விண்மீன் திரள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவுதான் பாரிய கருந்துளை என்று ஊகிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fastest growing black hole

Astronomers discovered fastest growing black hole ever spotted in space

விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்ட கருந்துளைகளில், மிக வேகமாக வளரும் கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய கருந்துளை மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) வானியலாளர்களால் இதைக் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

வானியலாளர்கள் கருந்துளையை நமது விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் அனைத்து ஒளியையும் விட 7,000 மடங்கு அதிகம் பிரகாசிக்கும் ஒரு வான பொருள் என்றும் விவரித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல வானியலாளர்களுக்கு இது தெரியும்.

ஸ்கைமேப்பர் சதர்ன் சர்வேயின் (SkyMapper Southern Survey-SMSS) சிம்பியோடிக் பைனரி நட்சத்திரங்களைத் தேடும் போது அதன் ஒளியியல் நிறங்கள் மூலம் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் arXiv தரவுத்தளத்தில் வெளியிடப்பட்டு ஆஸ்திரேலியாவின் வானியல் சங்கத்தின் வெளியீடுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வானியலாளர்கள் இதுபோன்ற பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கான மங்கலானவற்றைக் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் இந்த வியக்கத்தக்க பிரகாசமான ஒன்று, கவனிக்கப்படாமல் நழுவியது, ”என்று ANU இன் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் கிறிஸ்டோபர் ஓன்கென் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு பெரிய விண்மீன் திரள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவுதான் பாரிய கருந்துளை என்று ஊகிக்கப்படுகிறது. அதிக ஈர்ப்புப் புலங்களைக் கொண்ட நட்சத்திரங்களின் மரணத்தின் போது கருந்துளைகள் உருவாகின்றன, இது நட்சத்திர கூட்டத்தை மிகச் சிறிய இடைவெளியில் கசக்கி, இறந்த நட்சத்திரத்தின் ஒளி உட்பட அனைத்தையும் சிக்க வைக்கிறது.

இதுவே கருந்துளைகளை கண்ணுக்கு தெரியாததாக ஆக்குகிறது, அவற்றைச் சுற்றியுள்ள வானவெளியின் மறைந்து போகும் ஒளியால் மட்டுமே அவற்றை அடையாளம் காண முடியும்.

புதிய கருந்துளை எவ்வளவு பெரியது?

ANU ஆல் அடையாளம் காணப்பட்ட புதிய கருந்துளை காட்சி அளவு (visual magnitude) 14.5 ஆகும், இது நமது சொந்த விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையை விட 500 மடங்கு பெரியதாக உள்ளது என்று ANU PhD ஆராய்ச்சியாளர் சாமுவேல் லாய் கூறுகிறார்.

கருந்துளை மிகவும் பெரியது, நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களின் சுற்றுப்பாதைகளும் கருந்துளையின் தொடுவானுக்குள் பொருந்தும், இது கருந்துளையின் எல்லையாக இருக்கும், இதன் மூலம் எதுவும் தப்பிக்க முடியாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment