Advertisment

பறவையா அல்லது டைனோசரா? சீன ஆய்வாளர்கள் கண்டு வியப்பு.. புதிய கண்டுபிடிப்பு என்ன?

A bizarre fossil found in China: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வினோதமான தொல்பொருள் டைனோசர் போன்ற தலை மற்றும் பறவை போன்ற உடலைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. டைனோசர்கள் பறவைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்தாக கூறப்படும் நிலையில் தற்போது இது பற்றி மேலும் கேள்விகள் எழுந்துள்ளன.

author-image
sangavi ramasamy
New Update
பறவையா அல்லது டைனோசரா? சீன ஆய்வாளர்கள் கண்டு வியப்பு.. புதிய கண்டுபிடிப்பு என்ன?

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட Cratonavis zhui இன் புதைபடிவங்கள், டைனோசர் போன்ற தலை மற்றும் பறவை போன்ற உடலை வெளிப்படுத்துகின்றன.

டைனோசர்களில் இருந்து பறவைகள் உருவானதாக விஞ்ஞானிகள் மத்தியில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமித்த கருத்து உள்ளது. இருப்பினும் இதுகுறித்து உறுதியாக சொல்லப்படவில்லை. இப்போது, ​​120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் ( fossil) டைனோசர்கள் குறித்தான விஷயத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தில் டைனோசர் போன்ற தலையும், பறவையை ஒத்த உடலும் இருப்பது போல் உள்ளது.

Advertisment

நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், Cratonavis zhui(கிராடோனாவிஸ் ஜூய்) பறவையை போன்ற உடல் கொண்டிருப்பது எப்படி? அதன் ஸ்கேபுலா மற்றும் மெட்டாடார்சல் எலும்புகள் மற்ற பறவைகளிலிருந்து தனித்து நிற்க உதவுகிறது. எனவே, இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புதைபடிவங்களாக கண்டுபிடிக்கப்பட்டன.

ஏவியேஷன் பரிணாம குறிப்பு படி, கிராடோனாவிஸ் ஊர்வன வகை ஆர்க்கியோப்டெரிக்ஸ் மற்றும் ஆர்னிதோதோரேசஸ் ஆகியவற்றிக்கு இடையே உள்ளதாக கூறப்படுகிறது.

புதைபடிவ ஆராய்ச்சி

புதைபடிவத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் high-resolution CT ஸ்கேனிங் கருவியைப் பயன்படுத்தினர். புதைபடிவம் பாறைகள் நிறைந்த பகுதியில் கண்டுடெடுக்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எலும்புகளை அகற்றி, மண்டை ஓட்டை வடிவமைத்தனர். அசல் மண்டை ஓடு உள்ளது போல் வடிவமைத்தனர். அப்போது, புதைபடிவத்தின் மண்டை ஓடு பறவை போல் இருப்பதற்கு மாறாக டி.ரெக்ஸ் (T.rex) என்ற வகை டைனோசர்களின் மண்டையோடு (அதாவது தலை) போல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

மேலும், இந்த க்ராடோனாவிஸ் தானாக தன் தலையை அசைக்க முடியாத படி இருந்துள்ளது. இது பறவைகள் தொடர்பான வேறு ஆராய்ச்சியிலும் கூறப்பட்டுள்ளது. அதாவது கிரெட்டேசியஸ் (Cretaceous) போன்ற க்ரடோனாவிஸ் (Cratonavis) பறவைகளுக்கு இந்த குணம் இருந்துள்ளது என்று லி ஜிஹெங், ஆய்வின் இணை-தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

மற்றொரு ஆசிரியர் வாங் மின் கூறுகையில், "கிராடோனாவிஸ் உயிரினத்தின் ஸ்காபுலா (தோள்பட்டையில் உள்ள எலும்பு) அதன் இறக்கையை சுலபமாக பயன்படுத்த உதவுகிறது" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Science Dinosaur Fossils
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment