Advertisment

வெப்ப உயர்வை தாங்கும் வகையில் தகவமைப்பை மாற்றிக் கொள்ளும் பவளப்பாறைகள் - ஆய்வு முடிவுகள்

ஏற்ற இறக்கமான வெப்பநிலையை கொண்டுள்ள கடல் பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் பவளப்பாறையை மறு உற்பத்திக்கு பயன்படுத்தி, நர்சரியில் வளர்க்கப்பட்ட பவளப்பாறை உயிரினங்களை அங்கே இடம் மாற்றலாம் என்ற முடிவு இதனால் எட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Corals Can Be trained to Tolerate Heat Stress

Corals Can Be trained to Tolerate Heat Stress: மயாமி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் மிக முக்கியமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

Advertisment

காலநிலை உயர்வு காரணமாக தொடர்ந்து அதிகரிக்கும் புவியின் வெப்பநிலையை தாங்கிக் கொள்ளும் வகையில் கடலுக்கு அடியே இருக்கும் பவளப்பாறை திட்டுகள் தங்களின் தகவமைப்பை மாற்றிக் கொள்ளும் என்று ஆராய்ச்சி முடிவுகள் அறிவித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

90 நாட்கள் ஆய்வகத்தில், கடுமையான வெப்ப உயர்வு சூழலுக்கு ஆளாக்கப்பட்ட பவளப்பாறை திட்டங்கள் அடுத்தடுத்த நாட்களில் அத்தகைய சூழலை தாங்கிக் கொள்ளும் வகையில் பவளப்பாறை தன்னை மாற்றிக் கொண்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

”49 வயதில் தான் நீச்சல் கற்றேன்” - பவளப்பாறை பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழக பெண்மணி

'Pre-exposure to a variable temperature treatment improves the response of Acropora cervicorins to acute thermal stress என்ற தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரை கோரல் ரிஃப்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Corals Can Be trained to Tolerate Heat Stress

உயிர் வாழும் தன்மையை இழந்து “ப்ளீச்சிங்” என்ற நிலையை அடைந்த பவளப்பாறை சூழலியல்

ஏற்கனவே வெப்ப நிலை உயர்வால் அதிக அளவில் பவளப்பாறைகள் அழிய துவங்கியுள்ளன. கடலில் நீரின் வெப்பம் அதிகமாக இருக்கின்ற இந்த சூழலில், நர்சரியில் வைத்து வளர்க்கப்படும் ஸ்டேக்ஹார்ன் என்ற பவளப்பாறை உயிரினத்தை கடலுக்குள் மீண்டும் வைத்து வளர்க்க இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஸ்டாக்ஹார்ன் Staghorn coral (Acropora cervicornis) பவளப்பாறை இனம் ஏற்கனவே ”அச்சுறுத்தல் நிலையில் ” (threatened species) உள்ள உயிரினமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினம் அதிக அளவில் வாழ்ந்த தெற்கு ஃப்ளோரிடா மற்றும் கரீபியன் போன்ற பகுதிகளில் மிகவும் அரிதாகவே காணப்படும் ஒன்றாக மாறிவிட்டது.

காலநிலை மாற்றத்தால் சென்னை மோசமான விளைவுகளை சந்திக்கும்! எச்சரிக்கும் IPCC அறிக்கை

இந்த ஆய்வுகளை நடத்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் ஸ்டாக்ஹார்ன் பவளப்பாறையின் 6 வகைகளை பயன்படுத்தியுள்ளனர். அதனை மயாமி பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசென்ஸ்டியல் பள்ளியில் உள்ள நர்சரியில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பவளப்பாறை வைக்கப்பட்டிருக்கும் நீரின் வெப்பநிலையை பல்வேறு அளவுகளில் மாற்றி நீண்டநாள் சோதனையாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

Corals Can Be trained to Tolerate Heat Stress

ஸ்டாக்ஹார்ன் பவளப்பாறைகள்

பெறப்பட்ட 6 வகையான பவளப்பாறைகளை களம், ஆய்வகம் மற்றும் தேவைக்கேற்ப வெப்பநிலையை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட களம் என்று மூன்று வெளிகளில் நட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வகத்தில் வைக்கப்பட்ட பவளப்பாறைகளின் வெப்பநிலை ஒரே சீராக மூன்று மாதங்களுக்கும் 28 டிகிரி செல்சியஸ் என்ற வைக்கப்பட்டது. தேவைக்கேற்ப வெப்பநிலையை உயர்த்தும் வகையில் உருவாக்கபப்ட்ட ஆய்வகத்தில் 28 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என்று மூன்று மாதம் உயர்த்தி சோதனைகளை மேற்கொண்டனர்.

பவளப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து புகைப்படங்கள் உதவியுடன் கண்காணித்து வந்த ஆராய்ச்சியாளர்கள், எவ்வாறு, எத்தனை நாட்கள் கழித்து ப்ளீச்சிங் என்ற அழிவு நிலையை பவளப்பாறைகள் துவங்குகின்றன என்பதையும் பதிவு செய்துள்ளனர்.

வெப்பநிலையில் மாற்றமே இல்லாமல் வைக்கப்பட்ட பவளப்பாறைகள் மிக எளிமையாக திசு இழப்பு போன்ற நோய்களின் அறிகுறிகளை பெற துவங்கிய அதே நேரத்தில்,பல்வேறு வெப்பநிலையை சமாளித்த பவளப்பாறைகள் தொடர்ந்து வெப்பநிலை மாற்றத்தை சகித்துக் கொள்ள துவங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

ஏற்ற இறக்கமான வெப்பநிலையை கொண்டுள்ள கடல் பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் பவளப்பாறையை மறு உற்பத்திக்கு பயன்படுத்தி, நர்சரியில் வளர்க்கப்பட்ட பவளப்பாறை உயிரினங்களை அங்கே இடம் மாற்றலாம் என்ற முடிவு இதனால் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment