Advertisment

சிறுகோள்கள் பூமிக்கு நீர் கொண்டு வந்ததா? ஹயபுசா-2 ஆய்வு கூறுவது என்ன?

சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து நமது கிரகத்திற்கு தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
சிறுகோள்கள் பூமிக்கு நீர் கொண்டு வந்ததா? ஹயபுசா-2 ஆய்வு கூறுவது என்ன?

நேச்சர் அஸ்ட்ரோனமி இதழில் கடந்த (ஆகஸ்ட் 15) ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து நமது கிரகத்திற்கு தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Advertisment

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் ஹயபுசா-2 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ரியுகு என்ற சிறுகோளை ஆய்வு செய்து அதன் தரவுகளை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அனுப்பியது. ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட ரியுகு என்ற சிறுகோளின் மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

ஹயபுசா-2 விண்கலம் 2020 டிசம்பரில் ரியுகு என்ற சிறுகோளில் இருந்து 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளை பூமிக்கு கொண்டு வந்தது. இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

ஹயபுசா-2 விண்கலம்

ஹயபுசா-2 விண்கலம் (Hayabasu2 spacecraft) கடந்த 2014 டிசம்பரில் ரியுகு என்ற சிறுகோளை ஆய்வு செய்வதற்காக 6 வருடம் பயணத் திட்டம் மேற்கொண்டு விண்ணில் அனுப்பபட்டது. 2020ஆம் ஆண்டு வெளியான Deutsche Welleயின் அறிக்கையின்படி, ஹயபுசா-2 விண்கலம் குளிர்சாதனப்பெட்டியின் அளவில் இருக்கிறது. இந்த விண்கலம் 5 பில்லியன் கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

விண்கலம் 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறுகோளை அடைந்தது. அதன் பிறகு அது இரண்டு ரோவர்களையும், ஒரு சிறிய லேண்டரையும் மேற்பரப்பில் நிலைநிறுத்தியது. 2019ஆம் ஆண்டில், விண்கலம் 10 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட ஒரு செயற்கை பள்ளத்தை உருவாக்க சிறுகோளின் மேற்பரப்பில் ஒரு தாக்கத்தை செலுத்தியது, இது மாதிரிகளை சேகரிக்க அனுமதித்தது.

டிசம்பர் 2020 இல், ஹயபுசா-2 பூமியின் வளிமண்டலத்திலிருந்து 220,000 கிமீ தொலைவில் இருந்தபோது, பாறை மற்றும் தூசி மாதிரிகளை உள்ளடக்கிய சிறு காப்ஸ்யூலை பூமிக்கு அனுப்பியது. பின், தெற்கு ஆஸ்திரேலிய வெளிப்பகுதியில் பாதுகாப்பாக விண்கலம் தரையிறங்கியது.

ஹயபுசா-2 விண்கலத்தின் முன்னோடி, ஹயபுசா கடந்த 2010ஆம் ஆண்டு இடோகாவா சிறுகோளிலிருந்து மாதிரிகளை சேகரித்து

கொண்டு வந்தது.

ஆய்வு முடிவுகள்

ஹயபுசா-2வின் அரிய வகை மாதிரிகள் கிடைத்ததில் இருந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வுகள் நமது கிரகத்தில் வாழ்க்கை சூழல் தோன்றியதை ஆராய உதவியது என்று கூறுகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் ஒரு குழு நமக்கு கிடைக்கப்பபெற்ற அரிய பொருட்கள் அமினோ அமிலங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தனர். மேலும் இது உயிரினங்களின் கட்டுமானத் தொகுதிகளை விண்வெளியில் உருவாகியிருக்கலாம் என்று கூறினர்.

திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வில், "கரிம பொருட்கள் நிறைந்த (organic-rich C-type asteroids) சி-வகை சிறுகோள்கள் பூமிக்கு நீர் வந்ததில் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம். பூமிக்கு ஆவியாகும் பொருட்கள் (நீர் மற்றும் கரிமப் பொருட்கள்) அனுப்பபட்டது விஞ்ஞானிகளிடையே விவாதத்திற்கு உட்படுத்தியது. ரியுகு சிறுகோள் பொருளின் ஆய்வு ஆவியாகும் பொருட்களின் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரியுகுவிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பூமியில் உள்ள நீருடன் ஒத்துப்போகிறது என்றாலும் சிறு வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. கியோடோ நியூஸ் அறிக்கையின்படி, நமது கிரகத்தின் நீர் சிறுகோள்களைத் தவிர வேறு இடங்களிலிருந்தும் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

"இதை விரிவாக பார்க்கும்பட்சத்தில் சிறிய செலஸ்டியல் பாடிஸ் பூமிக்கு நீர் கொண்டு வந்து வாழ்க்கை சூழல் அமைவதற்கு வழிவகுத்திருக்கலாம்" என்று ஜப்பான் ஏஜென்சியின் ஜியோமெட்டீரியல் அறிவியலின் மூத்த ஆராய்ச்சியாளர் மோட்டூ இட்டோ கூறுகிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment