Advertisment

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து அறிமுகம்: ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் என்றால் என்ன?

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று புனேவில் அறிமுகம் செய்து வைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து அறிமுகம்: ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் என்றால் என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் இணைந்து உருவாக்கிய முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (ஆகஸ்ட் 21) அறிமுகம் செய்து வைத்தார்.

ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது. வெப்பம், நீரை மட்டும் வெளியேற்றுகிறது.

Advertisment

ஹைட்ரஜன் மற்றும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களை இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இரண்டு கேஸ்களும் இணைந்து electrochemical cell உருவாக்கி (வழக்கமான பேட்டரி செல் போன்றது) மின்சாரம், நீர் மற்றும் சிறிய அளவு வெப்பத்தை உருவாக்குகின்றன. மின்சார மோட்டார்களால் வாகனம் இயக்கப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிபொருள் செல் என்றால் என்ன?

அமெரிக்க எரிசக்தி துறையின் கூற்றுப்படி, எரிபொருள் செல்கள் மின்சார வாகனங்களில் காணப்படும் வழக்கமான பேட்டரிகளைப் போலவே செயல்படுகின்றன, ஆனால் இவை சார்ஜ் தீர்ந்துவிடாது மற்றும் மின்சாரம் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஹைட்ரஜன் சப்ளை இருக்கும் வரை மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். வழக்கமான செல்களைப் போல, ஒரு எரிபொருள் செல் ஒரு அனோட் anode (negative electrode) மற்றும் கேதோட் cathode (positive electrode) கொண்டிருக்கும்.

ஹைட்ரஜன் அனோடுக்கும், காற்று கேத்தோடிற்கும் செல்கிறது. அனோட்டில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களாக பிரிக்கிறது. அது வெவ்வேறு பாதைகளில் கேத்தோட்டிற்கு செல்கிறது. எலக்ட்ரான்கள் வெளிப்புற சுற்று வழியாக சென்று, மின்சாரத்தை பயன்படுத்தி, மின் மோட்டாரை இயக்குகிறது. புரோட்டான்கள் புரோட்டான்கள் செல்கிறது. அங்கு சென்று ஆக்ஸிஜன் மற்றும் எலக்ட்ரான்களுடன் ஒன்றிணைந்து தண்ணீரையும் வெப்பத்தையும் உருவாக்குகின்றன.

ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து பயன் என்ன?

முதன்மை பயனாகப் பார்ப்பது அவை டெயில்பைப் உமிழ்வை (no tailpipe emissions) வெளியிடுவதில்லை. நீராவி மற்றும் சூடான காற்றை மட்டுமே வெளியிடுகின்றன. இன்டர்னல் கம்பூசன் எஞ்ஜினைவிட இவை அதிக திறன் கொண்டவை.

எரிபொருள் நிரப்ப நேரம் எடுக்காது. அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், பேட்டரியில் இயங்கும் மின்சார பேருந்தை சார்ஜ் செய்ய மணிநேரம் ஆகலாம். இதற்கிடையில், இந்த பேருந்தில் ஹைட்ரஜனை சில நிமிடங்களில் நிரப்ப முடியும்.

ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்கள் டெயில்பைப் உமிழ்வை வெளியிடுவதில்லை. புதுப்பிக்கத்தக்க மின்சார ஆதாரங்களை நோக்கி நகர்வதைப் போல எதிர்காலத்தில் ஹைட்ரஜன் வைத்து தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க முறைகளுக்கும் மாற வேண்டி இருக்கலாம். பேருந்து அறிமுக விழாவில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேருந்திலிருந்து நீர் மட்டும் வெளியேற்றப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment