Advertisment

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட், 9 செயற்கைகோள்களுடன் வெற்றிகராக விண்ணில் பாய்ந்தது

author-image
WebDesk
New Update
ISRO

ISRO

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஓசன்சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு உள்ள ஆய்வுகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து வருகிறது.

இந்தநிலையில், இஸ்ரோ சார்பில் இன்று பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, ஓசன்சாட் தொடரின் மூன்றாம் தலைமுறை செயற்கைக்கோளான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்-6 (EOS-6) மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ராக்கெட் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பி.எஸ்.எல்.வி-சி54) மூலம் கொண்டு செல்லப்படும் ஒன்பது செயற்கைக்கோள்களில், ஈ.ஓ.எஸ்-6 முதன்மையானதாக உள்ளது.

இந்தியாவின் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் 960 கிலோ எடை கொண்டது. இந்த ஓசன்சாட்-3 செய்ற்கைகோள் கடற்பரப்பின் வெப்பநிலை, காற்றின் வேகம் குறித்த தகவலை சேகரிக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment