சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நிலாவை பார்க்க பிடிக்கும். முழு நிலவு என்றால் கூடுதல் பிரகாசத்துடன் அழகாக இருக்கும். அந்தவகையில் சூப்பர் மூன் தோன்றவிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 7.05 மணிக்கு சூப்பர் மூன் தோன்றவிருக்கிறது. இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன் இது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மூன்னுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய மீனின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டர்ஜன் மூன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மூன் என்றால் என்ன?
நிலவு அதன் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் முழுநிலவாக இருக்கும் போது சூப்பர் மூன் அதாவது பெருநிலவு ஏற்படுகிறது. நிலவு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. எனவே, ஒரு புள்ளியில் நிலவு பூமிக்கு மிக அருகிலும், இன்னொரு புள்ளியில் தொலைவிலும் இருக்கும்.
எனவே, முழு நிலவானது பூமிக்கு மிக அருகில் தோன்றும் போது சற்று பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும். இதைத்தான் சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்று அழைக்கப்படுகிறது.
சூப்பர் மூன் நிகழும் போது முழு நிலவு வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
ஆண்டுக்கு எத்தனை முறை சூப்பர் மூன் தோன்றும்?
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரும் சூப்பர் மூன் இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன் ஆகும். அடுத்த சூப்பர் மூன் 2023, ஆகஸ்ட் 1ஆம் தேதி தோன்றும். இந்தாண்டைப் போலே அடுத்த ஆண்டும் நான்கு சூப்பர் மூன் நிகழும். 2024 ஆண்டும் நான்கு சூப்பர் மூன், 2025ஆம் ஆண்டு மூன்று சூப்பர் மூன் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டர்ஜன் மீன் சிறப்பு
ஆகஸ்ட் 12ஆம் தேதி தோன்றும் சூப்பர் மூன் அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய மீனின் பெயரால், ஸ்டர்ஜன் மூன் (Sturgeon Moon) என்று அழைக்கப்படுகிறது. ஆண்டின் இந்த நேரத்தில்தான் இந்த வகை மீன்கள் வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரிகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. சுத்தமான நீரில் இந்த மீன் வளர்கிறது. ஆண் ஸ்டர்ஜன் 55 ஆண்டுகள் வாழ்கிறது. அதே நேரத்தில் பெண் மீன் 150 ஆண்டுகள் வரை வாழ்கிறது எனக் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“