Advertisment

இன்னும் நிலவில் இருக்கும் அப்பல்லோ 11 விண்வெளி வீரர்களின் தடங்கள்.. நாசா பகிர்ந்த வீடியோ

நாசா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை வெளியிட்டது, இது லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரில் இருந்து பதிவு செய்யப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NASA Moon landing

NASA Moon landing

மனிதர்கள் முதன்முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்த, அப்பல்லோ 11 நிலவில் இறங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இப்போது, ​​தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில், விண்வெளி வீரர்களின் அடிச்சுவடுகள் பூமியின் செயற்கைக்கோளில் இன்னும் தெரிவதை காட்டும் வீடியோவை நாசா பகிர்ந்துள்ளது.

Advertisment

நாசா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை வெளியிட்டது, இது லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரில் இருந்து பதிவு செய்யப்பட்டது.

ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் பஸ் ஆல்ட்ரின்’ சந்திரனில் காலடி எடுத்து வைத்த, அப்பல்லோ 11 மிஷனுக்கான தரையிறங்கும் தளத்தில் வீடியோ ஜூம் செய்து காட்டுகிறது.

அப்பல்லோ 11 மிஷன் ஜூலை 16, 1969 அன்று கேப் கென்னடியில் இருந்து ஆம்ஸ்ட்ராங், கமாண்ட் மாட்யூல் பைலட் மைக்கேல் காலின்ஸ் மற்றும் லூனார் மாட்யூல் பைலட் எட்வின் பஸ் ஆல்ட்ரின் ஆகியோருடன் புறப்பட்டது.

நாசாவின் ட்வீட்டை கீழே பாருங்கள்

நாசா ஆர்ட்டெமிஸ் மிஷன்

நாசா கடந்த கால மகிமையை நினைவூட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ள அதே வேளையில், புதிய ஆர்ட்டெமிஸ் மிஷன்ங்களுடன் மீண்டும் நிலவுக்குச் செல்லவும் தயாராகி வருகிறது. ஆர்ட்டெமிஸ் I, நாசாவின் ஆழமான விண்வெளி ஆய்வு அமைப்புகளின் முதல் ஒருங்கிணைந்த சோதனையாக இருக்கும், இதில் ஓரியன் விண்கலம், விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள தரை அமைப்புகள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 ​​ஆளில்லாத விமானத்தை சோதிக்கும் - இது "மனிதனின் ஆழமான விண்வெளி ஆய்வுக்கு ஒரு அடித்தளத்தை வழங்குவதற்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் மூன்று மேனிக்வின்களுடன், ஒரு மாதத்திற்கும் மேலாக சந்திர சோதனை விமானத்தை (lunar test flight) முயற்சிக்க நாசா திட்டமிட்டுள்ளது. ஓரியன் விண்கலத்தின் பயணம் வெற்றியடைந்தால், விண்வெளி வீரர்கள் 2023 ஆம் ஆண்டளவில் சந்திரனைப் பார்க்கச் செல்வார்கள். சந்திரனில் தரையிறங்குவது 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment