Advertisment

நீர்நிலைகளை அச்சுறுத்தும் விஷப்பாசிகள்… ஆரம்பத்திலேயே வளர்ச்சியை தடுக்க புது முயற்சி

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பாசிக்களின் வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அடர்த்தி, உலக வெப்பமயமாதல் போன்றவை காரணமாக இவை மேலும் அதிகரிக்கக் கூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
New tool enables early detection of cyanobacterial blooms in waterbodies

நீலப்பச்சை பாசி என்று அழைக்கப்படும் சையனோபாக்டீரியா (Cyanobacteria) நன்னீர் நிலைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேரிழிவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது நீரின் தன்மையை கேள்விக்குறியாக்குவதோடு அதில் வாழும் மீன்கள் உயிரிழக்க காரணமாக அமைகிறது. இதன் நீட்சியாக நீர் நிலைகளில் இருக்கும் மீன்களை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்களின் வாழ்வும் கேள்விக் குறியாக்கிறது இந்த பாசிகள்.

Advertisment

ஒன்றாக இணைந்த 3 “கேலக்ஸிகள்”: சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஹப்பிள்

கூகுள் எர்த் எஞ்சினில் செயற்கைக் கோள் தரவுகளை பயன்படுத்தி சையனோகோஜ் என்ற டேஷ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம் போன்ற உள்நாட்டு நீர் நிலைகளில் இந்த நீலப்பச்சை பாசிகள் வளர்வதை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடும் வகையில் இந்த டேஷ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதி இருந்தால் போதும் நீர் நிலைகளில் இந்த ஆல்காக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை உடனே கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் தேவையான முடிவுகளை எடுக்க இயலும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் டூலாக இருப்பதால் உலக நாடுகளில் இருக்கும் மற்ற நீர் நிலைகளின் நிலைமை என்பதையும் கூட நம்மால் அறிந்து கொள்ள இயலும் என்று கூறுகின்றனர் இந்த டூலை உருவாக்கியவர்கள்.

publive-image

பால்டிக் கடலில் காணப்பட்ட பைக்டோப்ளாங்க்டன்

இந்த பாசிகளின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

கடல்களில் வேகமாக வளர்ந்து வரும் நுண் பச்சைப் பாசிகளை பைட்டோப்ளாங்டன் என்று கூறுவது உண்டு. அளவுக்கு அதிகமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் உரம், முறையாக சுத்தகரிக்காமல் கடலில் கடலக்கப்படும் சாக்கடை நீர், தொழிற்சாலைக் கழிவு போன்றவற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூலமாக இவை அதிக அளவில் நீர் நிலைகளில் வளருகின்றன. தன்னுடைய வளர்ச்சிக்காக நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை அதிக அளவில் பெற்றுக் கொள்வதால் ஹைபோக்ஸியா என்ற நிலைமை உருவாகிறது. நீரில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது மீன்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கிடைப்பதில்லை. இது கடல் சூழலியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

க்ளோனிங்கில் சாதித்த ஆராய்ச்சியாளர்கள்; இது டோலி உருவான கதை

இந்தியாவைப் பொறுத்த வரை கடலைப் போன்றே உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடித்தல் தொழில் நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி குடிநீர் தேவை உட்பட அனைத்திற்கும் இந்த நீர் வளங்களையே மக்கள் நம்பியுள்ளனர். விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் நீர் நிலைகளை நம்பி இருப்பதால் பாசிக்கள் படர்வதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த டேஷ்போர்ட் ஆராய்ச்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அதிக அளவில் கை கொடுக்கும்.

ஆறு மற்றும் நீர் நிலைகள் மாசுபடுதலை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வந்தாலும் மக்களுக்கு இந்த சையனோபாக்டீரியல் பாசிக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பாசிக்களின் வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடின் அடர்த்தி, உலக வெப்பமயமாதல் போன்றவை காரணமாக இவை மேலும் அதிகரிக்கக் கூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment