scorecardresearch

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல தயாரா? விர்ஜின் கேலக்டிக் விமானத்தை மீண்டும் இயக்க திட்டம்

Virgin Galactic to resume tourism flights to space: நான்கு பேர் கொண்ட சோதனை சுற்றுப் பயணம் மே மாதம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதியில் விண்வெளிக்கு முதல் வணிக விமானத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Virgin Galactic to resume tourism flights to space
Virgin Galactic to resume tourism flights to space

பிரிட்டன் வணிகர், பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனம் யுனிட்டி என்ற ராக்கெட் விமானத்தை தயாரித்தது. விபத்து காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம் 1 வருடத்திற்குப் பிறகு மீண்டும் விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகி வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளை விண்வெளி சுற்றுப்பாதைக்கு அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும்.

நான்கு பேர் கொண்ட சோதனை சுற்றுப் பயணம் இம்மாதம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதியில் விண்வெளிக்கு முதல் வணிக விமானத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முன்பே திட்டம் செயல்படுத்தப் பட இருந்த நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமானது என நிறுவனம் கூறியுள்ளது. விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான விலை 450,000 டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 150,000 வைப்புத்தொகையாக முன்பே செலுத்தப்பட வேண்டும்.

வணிக பயணத்திற்கு முன்னதாக, ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் விர்ஜின் கேலக்டிக் 6 ஊழியர்கள் யுனிட்டி ராக்கெட் விமானத்தில் நியூ மெக்சிகோ பாலைவனத்திலிருந்து 80 கி.மீ.க்கு மேல் பறந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.

இருப்பினும், விமானம் அதன் தொடக்கப் பாதையிலிருந்து விலகிச் சென்றது பின்னர் கண்டறியப்பட்டது. விமானப் பாதை மிகவும் குறுகலாகவும், விமான போதுமான அளவு கூர்மையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில் (FAA) விசாரணை முடிந்து மேம்படுத்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் சேவை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Richard bransons virgin galactic to resume tourism flights to space