Advertisment

'அண்டார்டிக் பனி அடுக்கு கணித்ததை விட வேகமாக உருகுகிறது' - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

அண்டார்டிக் பனி அடுக்கு கணித்ததை விட வேகமாக உருகுகிறது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்த செயற்கைக்கோள் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
'அண்டார்டிக் பனி அடுக்கு கணித்ததை விட வேகமாக உருகுகிறது' - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

காலநிலை மாற்றம் அண்டார்டிகாவின் பனி அடுக்குகளை பலவீனப்படுத்துகிறது. கணித்ததை விட வேகமாக உருகுகிறது. இது உலகளாவிய கடல் மட்டத்தை உயர்த்த செய்கிறது என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இயற்கையாக பனிப்பாறைகள் கரைந்து விழுவதை விட அதிகமாக உள்ளது எனத் தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை நாசா செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் முதல் கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அண்டார்டிக் பனி அடுக்குகள் வேகமாக உருகுவது கவலை அளிக்கிறது. இது முந்தைய மதிப்பீட்டை விட இருமடங்காக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர் சாட் கிரீனி கூறுகையில், "கடந்த கால் நூற்றாண்டில் பனிக்கட்டிகள் நிகர இழப்பு கிட்டத்தட்ட 37,000 சதுர கிமீ (14,300 சதுர மைல்கள்) இது சுவிட்சர்லாந்தின் பரப்பளவு" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அண்டார்டிகா வேகமாக உருகி வதுகிறது. பனி கட்டிகள் பலவீனமடையும் போது, பெரிய பாறைகளும் வேகமாக உருகும். இது உலகளாவிய கடல் மட்ட உயர்வு விகிதத்தை வேகப்படுத்தும்.

இதன் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து பனிக்கட்டிகளின் கடல் மட்ட ஆற்றலில் 88% அண்டார்டிகாவில் உள்ளது" என்றார்.

மேற்கு அண்டார்டிகாவில் கடல் நீரோட்டங்கள் வெப்பமடைவதால் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் அதிகரித்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என கூறினார்.

Science Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment