Advertisment

ஒரு நட்சத்திரத்தின் அழிவு எப்படி இருக்கும் தெரியுமா? மெய் சிலிர்க்க வைக்கும் தகவல்கள்

வளிமண்டலத்தில் கார்பன் சேர்மானங்களை அதிகமாக கொண்டிருப்பதால் கார்பன் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் வி ஹைட்ரேவின் துகள்கள் நீல மற்றும் ஊதா நிறங்களை உட்கிரகித்து சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு சிவப்பு நட்சத்திரமாகவும் வி ஹைட்ரே திகழ்கிறது.

author-image
WebDesk
New Update
Red star, today news, tamil news, science news, V hydrea

V Hydrae red star surrounded by huge rings: பால்வெளி அண்டம் - நம்முடைய வாழ்நாளில் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் தீரவே தீராத அதிசயங்களை கொண்டிருக்கும் ஒரு மாய உலகம். இதில் ஆய்வு செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதால் தான் ஆராய்ச்சியாளர்கள் சோர்வே அடையாமல் புதுப்புது விசயங்களை நமக்கு தினமும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

சூரியனைக் காட்டிலும் இரண்டு மடங்கு மிகப்பெரிய நட்சத்திரமாக உருவான வி ஹைட்ரே புவியில் இருந்து 1300 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. ஆரம்பத்தில் சூரியனைப் போன்றே மையத்தில் ஹைட்ரஜன் வாயுவைக் கொண்டிருந்தாலும் கூட தற்போது மிகவும் குளிர்ச்சியான நட்சத்திரமாக மாறியுள்ளது. கார்பன் - ஆக்ஸைடை தற்போது மத்தியில் கொண்டிருக்கும் இந்த நட்சத்திரத்தின் ஓரங்களில் மட்டுமே தற்போது ஹைட்ரஜன் - ஹீலியம் வாயு இணைவும் வெடிப்பும் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய நட்சத்திரங்கள் தொடர்ந்து அதன் நிலப்பரப்புகளை, துகள்களை, பாறைகளை எரித்து வெளியேற்றி வருகிறது. தற்போது வி ஹைட்ரேவை சுற்றி 3 வாயு வளையங்கள் உள்ளன.

800 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான இந்த வி ஹைட்ரேவின் அழிவு அதனை சுற்றியுள்ள மூன்று வாயு வளையங்களால் மதிப்பிடப்படுகிறது. இந்த மாற்றங்கள் எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மூன்று வளையங்களில் வெளிப்புறத்தில் இருக்கும் வளையமானது நட்சத்திரத்திடம் இருந்து 260 பில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. இது சூரியனுக்கும் புவிக்கும் இடையேயான தொலைவைப் போல் 1740 மடங்கு அதிகமானது. புவிக்கும் ப்ளூட்டோவுக்கும் இருக்கும் இடைவெளியைப் போன்று 40 மடங்கு தொலைவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் துகள்களில் வேகத்தை கணக்கிடும் போது இந்த மூன்று வளையங்களும் சுமார் 270, 485 மற்றும் 780 ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரத்தில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர்.

நட்சத்திரங்கள் தங்களின் இறுதி காலகட்டங்களில் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்கிறது, அதனுடைய ஒளியை எப்படி இழக்கிறது, காலங்கள் மாற மாற அதில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ள அழியும் இந்த சிவப்பு நட்சத்திரம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது.

வளிமண்டலத்தில் கார்பன் சேர்மானங்களை அதிகமாக கொண்டிருப்பதால் கார்பன் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் வி ஹைட்ரேவின் துகள்கள் நீல மற்றும் ஊதா நிறங்களை உட்கிரகித்து சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. பலராலும் நன்கு அறியப்பட்ட ஒரு சிவப்பு நட்சத்திரமாகவும் வி ஹைட்ரே திகழ்கிறது.

தன்னுடைய வெளிப்புறத்தை இழந்த சிவப்பு நட்சத்திரம் தற்போது மையப்பகுதியில் கொதிக்கும் வெப்பநிலை கொண்ட பாகத்தை அழிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மையப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் நட்சத்திரத்தை சுற்றியுள்ள துகள்களை ஜொலிக்க வைக்கின்றன. இந்த நட்சத்திரம் முற்றிலும் அழிய மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

தற்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ராட்சத நட்சத்திரம் முற்றிலுமாக தன்னுடைய தன்மையை இழந்த பிறகு நீல நிறமாக மாறி, புவியை விட ஓரளவுக்கு பெரிய அளவிலான பொருளாக விண்வெளியில் மிதக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment